Published:Updated:

பராக்... பராக்... வருகிறார் நாமக்கல் எம்.ஜி.ஆர்!

##~##

'இன்று முதல் உலகம் எங்கும் உங்கள் அபிமான தியேட்டர்களில் நாமக்கல் எம்.ஜி.ஆர். நடிக்கும், 'இதயத்தில் ஒருவன்’ - காணத் தவறாதீர்!’ விதவிதமான விளம்பரங்களால் நாளிதழ்களை ஆக்கிரமிக்கிறார் நாமக்கல் எம்.ஜி.ஆர்.

 ஏரியாவுக்குள் கட்-அவுட்களில் இரட்டைவிரல் களால் மூக்கைச் சுண்டியபடி போஸ் கொடுக்கிறார் தலைவர்!

பராக்... பராக்... வருகிறார் நாமக்கல் எம்.ஜி.ஆர்!

நாமக்கல்வாசிகளோ இவர் செய்யும் டார்ச்சரில் டர்ர்ராகிறார்கள். ''என் உண்மையான பேரு சுப்ர மணி. எனக்கு வயசு 53. விவரம் தெரிஞ்ச வயசுல எம்.ஜி.ஆரைப் பார்த்த பின்னாடி, 'சுப்ரமணி’யை தூக்கிப் போட்டுட்டு எம்.ஜி.ஆர்-னு பேர் வெச்சிக் கிட்டேன். காலேஜ் படிக்கிறப்ப பசங்க என்னை, 'எம்.ஜி.ஆர். மாதிரி சும்மா தகதகனு மின்னுற’னு சொல்லுவாங்க. காலேஜ் முடிச்சிட்டு மஞ்சள் தூள் வியாபாரம் செஞ்சிட்டு இருந்தேன். அப்பதான் இதய தெய்வம் இந்த மண்ணைவிட்டு மறைஞ்சார். எம்.ஜி.ஆர். இல் லாத இந்த மண்ணுலகம் வேஸ்ட். அதனால நானே எம்.ஜி.ஆர் ஆக மாற முடிவு செஞ்சேன். அப்ப இருந்து இந்த எம்.ஜி.ஆர். கெட்- அப் தான்.

ஆரம்பத்துல எம்.ஜி.ஆர். பாட்டுக்கு நானே காட்டு மேட்டுல சுத்தி டான்ஸ் ஆடி, கத்திச் சண்டைப் போட்டு அதை வீடியோவுல பதிவு செஞ்சேன். ஆனா, பல் வரிசை மட்டும் எனக்கு தலைவர் மாதிரி இல்லை. அதனால ஒரு பல் டாக்டரைப் பார்த்து, 'எம்.ஜி.ஆர். மாதிரி பல் வரிசை எனக்கு வேணும். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை’னு சொன்னேன். பல டாக்டர்கள் பயந்து ஒதுங்கிட்டாங்க. தஞ்சாவூர்ல இருக்கிற ஒரு டாக்டர் மட்டும் ஓ.கே சொல்லி, ஆபரேஷன் செஞ்சாரு. எம்.ஜி.ஆர். மாதி ரியே எனக்கும் பல் வரிசை வந்துடுச்சு.

அப்புறம் காது. அதுதான் ரொம்ப முக்கியம். எம்.ஜி.ஆருக்கு காது, கன்னத்தோட ஒட்டி இருக்கும். புகழ் பெற்ற நடிகர்கள் எல்லோருக்குமே அப்படிதான் இருக்கும். ஆனா, எனக்கு காது விரிஞ்சிக்கிட்டு இருந்தது. அதுக்கும் ஆபரேஷன் செய்ய முடிவு எடுத்தேன். டாக்டர்கள் சிலர், 'உயிருக்கே ஆபத்து’னு பயமுறுத்தினாங்க. உயிரே போனாலும் சரினு பயப்படாமல் ஆபரேஷன் பண்ணி காதையும் தலைவருக்கு இருந்த மாதிரியே மாத் திக்கிட்டேன்.

பராக்... பராக்... வருகிறார் நாமக்கல் எம்.ஜி.ஆர்!

அடுத்த ஆபரேஷன்... அது சினிமாதான்! 'இதயத்தில் ஒருவன்’ படபிடிப்பு. கதை, வசனம், இயக் கம் எல்லாமே நான்தான். ஹீரோவும் நானே. என் வாழ்க்கை வரலாறுதான் படத்தோட கதை. அந்தமான் சோனியானு ஒரு பொண்ணைத் தேடிப் பிடிச்சு கதா நாயகியா நடிக்கவெச்சேன். சும்மா சொல்லக் கூடாது... 'சொக்கவைக்கும் சோனியா’ அந்தப் பொண்ணு. ஒரு வழியாப் படத்தை உலகம் பூராவும் ரிலீஸ் பண்ணிட்டேன். நல்ல ரிசல்ட் வந்துட்டு இருக்கு. அடுத்த  படமும்  ரெடி!  பெயர்...  ரோபோ எம்.ஜி.ஆர்!''

தாங்காதடா சாமி!

- கே.ராஜாதிருவேங்கடம்