Published:Updated:

சின்னப் பொண்ணு பெரிய நட்பு!

செல்வியின் உயிர்த் தோழி!சத்ய சாய் நகர் நட்பு!

சின்னப் பொண்ணு பெரிய நட்பு!

செல்வியின் உயிர்த் தோழி!சத்ய சாய் நகர் நட்பு!

Published:Updated:
##~##

''செல்வி அக்கா எங்க ஏரியா பக்கம் அடிக்கடி வருவாங்க. வர்றதுக்கு முன்னாடி எனக்குத் தகவல் சொல்லிடுவாங்க. நான் ஏரியா முழுக்க 'செல்வி அக்கா வார்றாங்க’ன்னு கூவிட்டே ஓடுவேன். அப்புறம் என்ன... ஏரியா முழுக்கத் திருவிழாக் கோலம் ஆகிடும். ஏரியாக் காரங்க எல்லாரும் தெரு வாசல்ல கோலம் போட்டு, மஞ்சத் தண்ணி தெளிச்சு வைப்பாங்க. கார்ல வந்து இறங்கின உடனே எங்க ஆளுங்க ஆள் மாத்தி மாத்தி அக்காவுக்கு ஆரத்தி எடுப் பாங்க. ஆனா, அக்கா என் முகத்தைப் பார்த்து 'செல்லமே’ன்னு கொஞ்சுவாங்க. என் மேல அக்காவுக்கு அம்பூட்டு இஷ்டம்!'' தெற்றுப் பல் தெரிய சிரிக்கிறார் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சத்யா. முதல்வர் மகள் செல்வி சத்யாவுக்கு மிக நெருங்கிய தோழி!

சின்னப் பொண்ணு பெரிய நட்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 சென்னை சத்ய சாய் நகரில், ''இங்கே சத்யா...'' என்று ஆரம்பித்தாலே, விரல் பிடித்து அவர் வீட்டில் கொண்டுபோய் விடுகிறார்கள். ஏரியாவில் இந்தச் சின்னப் பொண்ணு அவ்வளவு பாப்புலர்.

''எங்க ஏரியா மட்டுமில்ல... புளியந்தோப்பு, மீனவக் குப்பம்னு பல ஏரியாக்களுக்கு செல்வி அக்கா அடிக்கடி போவாங்க. முதல் தடவை செல்வி அக்கா எங்க ஏரியாவுக்கு வந்தப்ப, அவங்க கையைப் பிடிச்சுக்கிட்டே நான் ஓடி னேன். என்னை அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. ஆசையா என்னைப் பக்கத்து லயே வெச்சுட்டு என்னைப்பத்தி விசாரிச்சுட்டே இருந்தாங்க. நல்ல துணிமணி போட்டுக்க முடி யலை, மழை பேய்ஞ்சா வீட்டுக்குள்ள தண்ணி ஒழுகுதுன்னு நிறையக் கதை பேசிட்டே இருந் தேன். எல்லாம் கேட்டுட்டு, 'நான் இருக்கேன்டா உனக்கு’ன்னு என்னை அள்ளிக் கொஞ்சினாங்க. அப்போ இருந்து இப்போ வரை எங்க ஏரியாவுக்கு வந்தா, என்னையும்  கூட்டிட்டுத்தான் எங்கே யும் போவாங்க. செல்வி அக்காகிட்ட கோரிக்கைக் கடிதம் கொடுக்கிறவங்ககூட, 'ஏய் சத்யா...பார்த்து உங்க அக்காகிட்ட ரெகமண்ட் பண்ணுடி’ன்னு சொல்வாங்க!'' என்று பூரிக்கிறார் சத்யா.

சின்னப் பொண்ணு பெரிய நட்பு!

''ஒவ்வொரு தடவை அக்கா என்னைப் பார்க் கும்போதும்,  'உனக்கு என்ன வேணும்னாலும் என்கிட்ட சொல்லு’ன்னு சொல்வாங்க. 'என்னிக் குமே நீங்க எனக்கு ஃப்ரெண்டா இருந்தா, அதுவே போதும்க்கா’ன்னு சொல்லிடுவேன். அக்காவுக்குப் பயங்கர சந்தோஷம் ஆகிடும்!

சின்னப் பொண்ணு பெரிய நட்பு!

ஒரு தடவை 'செல்வி மேடம் அழைச்சுக்கிட்டு வரச் சொன்னாங்க’ன்னு சொல்லி என்னை அழைச்சுட்டுப் போனாங்க.  அக்கா வீட்டுக்குப் போனேன். அங்கே எனக்காக நிறைய டிரெஸ் எடுத்துவெச்சிருந்தாங்க. தயாநிதி மாறன் அங்கிள் கிட்ட என்னை அறிமுகப்படுத்தினாங்க. அவரும் ரொம்பப் பாசமாப் பேசினார். நான் கலகலன்னு பேசுறதைப் பார்த்துட்டு 'பாப்பா, நீ இங்கேயே தங்கிடு’ன்னு சொன்னார். எனக்கு அழுகை வந்தி டுச்சு. 'இல்லை அங்கிள் நான் படிச்சுப் பெரிய ஆளாகி எங்க ஏரியாவுக்கு நல்லது பண்ணணும். அதுக்கு நான் அங்கேதான் இருக்கணும்’னு சொன்னேன். 'என்னாமா பேசுது இந்தப் பொண்ணு’னு சொல்லி எனக்கு நெட்டி முறிச் சாங்க. நான் வீட்டுக்குக் கிளம்புறப்போ, செலவுக்குப் பணம் கொடுத்து அனுப்பிவெச் சாங்க. நான் வேண்டாம்னுதான் சொன்னேன். ஆனா, அவங்க கேட்கலை!'' - துளிக் கண்ணீரும் துள்ளும் சந்தோஷமுமாகச் சிலிர்க்கிறார் சத்யா.

''எதிர்காலத்தில என்னவா ஆகணும்னு ஆசை?'' என சத்யாவிடம் கேட்டால், ''இப்ப இருக்கிற மாதிரியே எப்பவும் அக்காவுக்கு அன்பான தோழியா இருக்கணும்!'' என்கிறார் சிரிப்போடு.

அடுத்த உயிர்த் தோழி தயார்!

- இரா.சரவணன், படங்கள்: உசேன், வி.செந்தில்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism