Published:Updated:

''சீனியர் கைடு சீனுவாசன் ஸ்பீக்கிங்...!''

''சீனியர் கைடு சீனுவாசன் ஸ்பீக்கிங்...!''

''சீனியர் கைடு சீனுவாசன் ஸ்பீக்கிங்...!''

''சீனியர் கைடு சீனுவாசன் ஸ்பீக்கிங்...!''

Published:Updated:
##~##

காபலிபுரம்... வெளிநாட்டுப் பயணிகளால் ஜொலிக்கும் ஏரியா. கடல் தங்க நிறத்துக்கு மாறிய மாலை நேரத்தில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு விளக்கம் சொல்லிக்கொண்டு இருந்தார் சீனியர் கைடு சீனுவாசன். உள்ளூரில் அர்ஜுனன் ரதத்துக்கு நிகரான பெருமித அடையாளம்கொண்டவர்.

 ''பிறந்தது... வளர்ந்தது எல்லாமே இங்கேதான். சின்ன வயசுல பொழுது போகாம டூரிஸ்ட்டு களுக்கு வழி காட்ட ஆரம்பிச்சேன். கடைசியில் அதுவே தொழில் ஆகிடுச்சு. 40 வருஷங்களா கைடா இருக்கேன். வெளிநாட்டுல இருந்து வர்றவங்ககிட்ட பேசிப் பேசியே வெள்ளைக் காரன் மொழி எல்லாம் அத்துப்படி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சீனியர் கைடு சீனுவாசன் ஸ்பீக்கிங்...!''

ஆகிருச்சு. கூடவே, இந்தியும் தெலுங்கும். ஆரம்பத்துல 15 ரூபா கைடு கட்ட ணம். போக்குவரத்து வசதி அப்ப சரியா இருக்காது. ஒரு முறை சுத்திக்காட்ட மூணு மணி நேரம் ஆயிடும். இப்ப 300 ரூபாயில ஆரம்பிச்சு 1,000 ரூபா வரை கொடுக்கிறாங்க!'' - தாடியைத் தடவிக்கொண்டே தொடர்கிறார் சீனுவாசன்.

''சீனியர் கைடு சீனுவாசன் ஸ்பீக்கிங்...!''

''மேற்கு வங்க முதல்வரா இருந்த ஜோதிபாசு மகாபலிபுரம் வந்தப்ப, நான்தான் அவருக்கு சுத்திக் காட்டி னேன். ஃபாத்திமா பீவி ஹைகோர்ட் ஜட்ஜா இருந்தப்ப இங்கே வந்தாங்க. அவங்களுக்கும் நான்தான் கைடு. என் பேச்சுக்காகவே முக்கியமான ஆட்கள் யார் வந்தாலும் அதிகாரிங்க என்னைத்தான் அவங்களுக்கு சுத்திக் காமிக்கச் சொல் வாங்க. ஒரு தடவை ரொம்ப முக்கியமான வி.ஐ.பி. ஒருத்தருக்கு மகாபலிபுரம் சுத்திக் காட்டணும்னு சொல்லி என்னை வரச் சொன்னாங்க. அவர் யாருன்னு எனக்குச் சொல்லவே இல்லை. அந்தப் பையனுக்கு 21 வயசு இருக்கும். அவரைச் சுத்தி நிறையப் பேர் இருந்தாங்க. நான் பேசப் பேச, அவர் ஆர்வமாக் கேட்டுக்கிட்டே இருந்தார். கொஞ்ச நேரம் கழிச்சு, 'தம்பி நீங்க யாருன்னு நான் தெரிஞ்சுக்க லாமா?’ன்னு கேட்டேன். 'என் பெயர் ராகுல் காந்தி. எங்க அப்பா பெயர் ராஜீவ் காந்தி’ன்னு அவர் சாதார ணமா சொன்னார். எனக்குப் பயங்கர பூரிப்பாயிடுச்சு. ஊருக்குக் கிளம்புறப்ப, என் கையில் 400 ரூபாயைத் திணிச்சுட்டு, 'நான் பணம் கொடுத்தேன்னு யார்கிட் டேயும் சொல்லாதீங்க’ன்னு சொல்லிட்டுப் போனார்.

''சீனியர் கைடு சீனுவாசன் ஸ்பீக்கிங்...!''

2005-ல் டென்மார்க்ல இருந்து ஹன்னே கோனிக்-னு ஒரு லேடி வந்து இருந்தாங்க. அவங்க ளுக்கு நான் சுத்திக் காட்டிய விதம் ரொம்பவே பிடிச்சி இருந்துச்சு. என் வீட்டுக்கு வரணும்னு ஆசைப்பட்ட வங்களை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனேன்.  அடுத்த வருடம் என்னையும் என் மனைவியையும் டென்மார்க் குக்கு கூட்டிட்டுப் போய் சுத்திக் காமிச்சாங்க. இப்ப வும் வருஷத்துக்கு ஒரு தடவை இங்க வந்து என் னைப் பார்த்துட்டுப் போவாங்க. இங்க இருக்கும் கிராமங்களுக்கு ஸ்கூல் கட்ட நிதி உதவி கொடுத் தாங்க. என் வாழ்நாளில் மறக்க முடியாதவங்க அவங்க மட்டும் தான்!'' சிலிர்ப்பாகச் சொல்கிறர் சீனுவாசன்.

பிரிட்டிஷ் சுற்றுலா நிறுவனத் தின் சிறப்பு கைடு ஆக நியமிக்கப் பட்டு இருக்கிறார் சீனுவாசன்.

''மகிஷாசுரமர்த்தினி, வராக மண்டபம், திருமூர்த்தி குகை, கிருஷ்ண மண்டபம், அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரைக் கோயில், வெண்ணை உருண்டைக் கல், பிடாரி ரதம்னு இங்கே பார்க்க நிறைய அற்புதங்கள் இருக்கு. ஆனா, சிலர் அர்ஜுனன் தபசு, கடற்கரைக் கோயிலை மட்டும் சுத்திப் பாத்துட்டுப் போயிடுறாங்க. 'சில இடங்களில் கிணறு இருந்தது’ன்னு நான் சொல்ல... அதை நிரூபிக்க முடியுமான்னு தொல்லியல் துறை அதிகாரிகள் கேட்டாங்க. நான் சொன்ன இடங்களைத் தோண்டியபோது அங்கு கிணறு இருந்தது. பச்சப்புள்ள காலத்தில இருந்தே இந்த மண்ல ஓடியாடுற எனக்குத் தெரியாதா... எங்கே என்ன இருக்குன்னு!'' - பகபகவெனச் சிரிக்கிறார் சீனுவாசன்!

- பா.ஜெயவேல்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism