Published:Updated:

மகாராஷ்ட்ராவில் ஆறே மாதத்தில் 1,300 விவசாயிகள் தற்கொலை!

மகாராஷ்ட்ராவில் ஆறே மாதத்தில் 1,300 விவசாயிகள் தற்கொலை!
மகாராஷ்ட்ராவில் ஆறே மாதத்தில் 1,300 விவசாயிகள் தற்கொலை!

மகாராஷ்ட்ராவில் ஆறே மாதத்தில் 1,300 விவசாயிகள் தற்கொலை!

மகாராஷ்ட்ராவில் ஆறே மாதத்தில் 1,300 விவசாயிகள் தற்கொலை!

மும்பை: மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கடந்த ஆறு மாதங்களில் 1,300 விவசாயிகள் தற்கொலை செய்து  கொண்டுள்ளதாக அம்மாநில  அரசு  தெரிவித்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக வறட்சி மற்றும் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்படும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை மட்டும் மாநிலத்தில் 1,300 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக வருவாய்துறை புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

கடந்த 2014ஆம் ஆண்டு மகாராஷ்ட்டிராவில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 1,981. ஆனால் இந்தாண்டு 6 மாதங்களில் இதில் 66 சதவீதத்தை எட்டியுள்ளது. 2013ஆம் ஆண்டில் மாநிலத்தில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 1,296. இந்தாண்டு இதுவரையிலான தகவல்களின்படி, 2015ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் எண்ணிக்கையானது பிற ஆண்டுகளைவிட உயரக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

இதற்கிடையே, வருவாய்துறை காட்டும் புள்ளி விபரம் தவறு என்று விமர்சகர்கள் கூறும் நிலையில், தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் விபரம் அடங்கிய தேசிய குற்றப் பதிவுமையத்தின் அறிக்கையானது மேற்கூறிய எண்ணிக்கையை விட அதிகம் என்று காட்டுகிறது.

இது குறித்து தேசிய குற்றப் பதிவு மையத்தின் அறிக்கையில், நாட்டில் தொடர்ந்து விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் மகாராஷ்ட்ராவில்தான் அதிகமாக உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாயிகள் தற்கொலை அதிகரிப்பு குறித்து அம்மாநில வருவாய்துறை அமைச்சர் ஏக்நாத் காத்சே கூறுகையில், "விவசாயிகள் பயன்அடையும் வகையில் நாங்கள் பல்வேறு விதமான திட்டங்களை நடைமுறைபடுத்தி உள்ளோம். தண்ணீர் வசதிகளையும் செய்து கொடுத்து உள்ளோம். விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணிக்கையானது குறையும் என்று நாங்கள் நம்புகிறோம்.

கடந்த காலங்களில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது ஆனால், தொடர்ந்து தற்கொலைகளும் நடந்து வருகிறது. பால் மற்றும் கோழி பண்ணைகள் மூலம் அவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பை வழங்குவதற்கு நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்" என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு