Published:Updated:

என் ஊர்!

மா.சு-வும் மாடி பஸ்ஸும்!

என் ஊர்!

மா.சு-வும் மாடி பஸ்ஸும்!

Published:Updated:
##~##

''என் உருவத்தைப் பார்த்துட்டு, 'நீ எந்தக் கிராமம்டா?’னு கேட்டார் பாரதிராஜா சார். 'எனக்குத் தெரிஞ்ச ஒரே கிராமம்... சாலிகிராமம்தான் சார்’னு நான் சொன்னதும் சிரிச்சிட் டாரு. சென்னைக்கு வரும் அத்தனை பேரையும் வரவேற்கும் சென்னையின் நுழைவாயிலான சைதாப்பேட்டைதான், நம்ம ஹோம் கிரவுண்ட்!'' என்று சிரிக்கிறார் பாண்டியராஜன்.

 ''சைதையில் 217, அப்பாவு நகர்தான் என் வீட்டு முகவரி. என் வீட்டுல இருந்து மூணு வீடு தள்ளி மேயர் மா.சுப்ரமணி யன் வீடு. அப்பவே அவர் ஏழெட்டுப் பேரோட அரசியல் பேசிட்டே ஏரியா வுக்குள்ளே வலம் வருவார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் ஊர்!

'மாதிரி உயர்நிலைப் பள்ளி’யில் நான் படிச்ச நாட்கள் மறக்க முடியாதவை. எஸ்.எஸ்.எல்.சி வரை அங்கேதான்.  எகனாமிக்ஸ் குரூப் தவிர மற்ற பாடப் பிரிவுகளில் கோ-எஜுகேஷன் கிடையாது. அதனால், அந்த குரூப்பில் சேர எக்கச்சக்கப் போட்டி. பார்த்தாலே 'இவன் நல்ல பையனா இருப்பான்’னு தோற்றம் இருக்குற பசங்களை மட்டும்தான் அந்த குரூப்பில் சேர்ப்பாங்க. பாவமான முகம் ப்ளஸ் என் 'உயரம்’ பார்த்து, நம்பி என்னையும் சேர்த்தாங்க. எட்டு பசங்க, ஏழு பொண்ணுங்க.  அந்த குரூப்பில் இடம் கிடைக்காத மத்த பசங்களுக்கு என் மேல் எரிச்சல் ப்ளஸ் பொறாமை. லன்ச் பிரேக், விளையாட்டு பீரீயட்களில் எல்லாப் பசங்களும் எங்க வகுப்பையே சுத்திச் சுத்தி வருவாங்க. முன் னாடி என்கிட்ட முறைச்சுக்கிட்டவன்லாம், தானாவே வந்து ராசி ஆனாங்க.

என் அப்பா, அப்போ பல்லவன் டிரான்ஸ்போர்ட் டிரைவர். தமிழகத்தில் முதன்முதலில் சென்னையில் இருந்து திருச்சிக்கு மாடி பஸ் அறிமுகப்படுத்தினப்ப, அனுபவமான ஆள்னு என் அப்பாவைத்தான் அதுக்கு டிரைவரா நியமிச்சாங்க.  அப்புறம் என்ன... எனக்கு பள்ளிக்கூடத்துல 'மாடி பஸ்’னு பட்டப் பேர்.

எஸ்.எஸ்.எல்.சி. ரிசல்ட் வந்தது. நான் மார்க் ஷீட்டுடன் வேணுகோபால் சார் முன்னாடி நின்னேன். 'உனக்கும் படிப்புக் கும் ரொம்ப தூரம்னு நான்தான் அப்பவே சொன்னேனே. பரவாயில்லை விடு... அடுத்த பரீட்சையில பாத்துக்கலாம்’னாரு. 'சார் நான் பாஸ் ஆயிட்டேன்’னு சொன்னதும் நம்ப முடியாத அதிர்ச்சி அவருக்கு.  

ஆனா, கான்டாக்ட் சர்ட்டிஃபிகேட்ல 'குட்’னு ஒரு வார்த்தை எழுதி வாங்குறதுக்குள்ள, நான் பட்ட பாடு இருக்கே? நம்ம மேல் ஆசிரியர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை!

என் ஊர்!

நான் சினிமாவுல இருக்கேன்னு தெரிஞ்சதும், 'இந்த விஷ்கான் எப்புடிடா சினிமாவுக்கு வந்தான்?’னு என் ஆசிரியர் களுக்கு ஆச்சர்யம். 'மனைவி ரெடி’ ஷூட்டிங்கை நான் படிச்ச பள்ளியில் நடத்தினேன். வேணுகோபால் சார் உட்பட பலரும் வந்து, 'என்ன உதவி வேணும்னாலும் கேளுடா’ன்னு ஆதரவாப் பார்த்துக்கிட்டாங்க. அப்போ மனசுக்கு ரொம்ப நிறைவா இருந்தது!

நாலு இட்லி, ஒரு வடைக்காகவே எட்டாம் கிளாஸ் படிக்கும் போது என்.சி.சி-யில் சேர்ந்தேன். 'யூனிஃபார்ம் கொடுப்போம்’னு சொன்னாங்க. டைட் ஃபிட்டிங் ஷர்ட், டவுசர் காஸ்ட்யூமில் பல கற்பனைகள் மனதில் ஓடுச்சு. முண்டியடிச்சு லைன்ல நின்னு வாங்கிப் போட்டுப் பார்த்தா,  பாவாடை மாதிரி தொப தொபன்னு தரை தொடுது டவுசர். என் யூனிஃபார்ம் பார்த்து பள்ளிக்கூடமே விழுந்து விழுந்து சிரிச்சுது!

டிகிரி படிக்க ரொம்ப ஆசை. ஆனா, 2000 வருஷம்தான் அந்தக் கனவு நிறைவேறுச்சு. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. முடிச்சேன். பிறகு எம்.ஃபில் முடிச்சு, இப்போ வேல்ஸ் யுனிவர்சிட்டியில் பி.ஹெச்டி செய்துட்டு இருக்கேன்.  

நண்பர்களுடன் சுற்றித் திரிஞ்ச ஜோன்ஸ் சாலை, கிடையாக்கிடந்த சீனிவாசா, ஜெய ராமன், நூர்ஜஹான், கிருஷ்ணவேணி தியேட்டர் கள், சைதை வழியா ஓடும் அடையாறு ஆறு, மறைமலை அடிகள் பாலம், தடக் தடக் சத்தத்துடன் கடக்கும் மின்சார ரயில்கள், அடிக் கடி ஏறி இறங்கும் விமானங்கள், இப்பவும் கிராமத்து ஃபீல் கொண்டுவரும் காரணீஸ்வர் கோயில், அரங்கநாதன் சுரங்கப் பாதை எல் லாம் மறக்கவே முடியாது. 'கன்னிராசி’, 'ஆண் பாவம்’ ரிலீஸ் ஆகும் வரை சைதையில் இருந்த நான், பிறகு தியாகராய நகருக்குக் குடிபெயர்ந் தேன்.

இப்பவும் அந்த சைதை நண்பர்களுடன் தொடர் பில்தான் இருந்து வருகிறேன். இன்னைக்கும் சைதாப் பேட்டையில் விழா, விசேஷம்னா யாரும் கூப்பிடாமலே ஆஜர் ஆகிடுவேன். இப்போ சமீபத்தில் 'ஆண் பாவம்’ படத்தின் வெள்ளி விழா ஆண்டைக் கொண்டாடியபோது, சைதையில் என் மூணாவது வீட்டுக்காரர் மா.சுப்பிர மணியன்தான் சிறப்பு விருந்தினர். அந்த அளவுக்கு சைதைக்கு என் இதயத்தில் நீங்காத இடம் இருக்கு!''

- ம.கா-.செந்தில்குமார், படங்கள்: வி.செந்தில்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism