Published:Updated:

கனா கண்டேனடா, தோழா!

கனா கண்டேனடா, தோழா!

கனா கண்டேனடா, தோழா!

கனா கண்டேனடா, தோழா!

Published:Updated:
##~##

'தூங்கும்போது வருவது கனவு இல்லை. நம்மைத் தூங்கவிடாமல்செய்வது தான் கனவு’ என்று சுண்டல் பொட்டல வாசகம் படித்ததும் மூளைக்குள் பல்பு எரிந்தது. 'சமீபத்தில் உங்களைப் பாதித்த கனவு என்ன?’ என்று சென்னை முழுக்க ரவுண்ட் அடித்ததில் இருந்து...

 ரமேஷ், கூடுவாஞ்சேரி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கனா கண்டேனடா, தோழா!

''என் மேல பீரோ சாஞ்சு விழுந்துருச்சு.  எந்திரிக்கவே முடியலை. கத்திக் கத்தி எல்லோரையும் கூப்பிடுறேன். ஆனா, யாருமே உதவிக்கு வரலை. என்னால பீரோவை ஒரு இன்ச் கூட நகர்த்த முடியலை. தம் பிடிச்சுத் தூக்குறேன். நிமிர்த்திடலாம்னு நம்பிக்கை வந்தப்ப கட்டிலைவிட்டுக் கீழே விழுந்துட்டேன். 'பொத்’துனு நான் விழுந்த சத்தம் கேட்டு ஹால்ல இருந்தவங்க ஓடி வந்துட்டாங்க.  தூக்கக் கலக்கத்துல அவங்ககிட்ட, 'இவ்வ ளவு நேரம் கத்தினேனே... ஏன் யாரும் எட்டிப்பார்க்கலை’ன்னு கேட்டு டார்ச்சர் பண்ணிட்டேன்!''

ஆனந்த், செங்கல்பட்டு.

கனா கண்டேனடா, தோழா!

''கலர்ஃபுல் மாதிரி இது மணிஃபுல் கனவு. எங்கே போறோம்னே தெரியாம  நடந்து போயிட்டே இருக்கேன். அப்போ  பிளாட்ஃபார்ம் ஓரமா ஒரு ஏ.டி.எம் கார்டு இருக்கு. எடுத்துப் பார்த்தா கார்டு கவர்ல 'பின் நம்பர்’ எழுதி இருக்கு. ஒரு ஆர்வத் துல ஏ.டி.எம். சென்டர் போய், கார்டு போட்டு அக்கவுன்ட்ல எவ்வளவு பணம் இருக்குன்னு பார்க்குறேன். பத்து லட்ச ரூபா இருக்கு. நம்பவே முடியாத ஆச்சர் யம். ஒவ்வொரு லட்சமா எடுத்துட்டு வந்து பத்து லட்சத்தையும் வீட்ல அடுக்கிட்டேன். ஆனா, அக்கவுன்ட்ல பணம் எடுக்க எடுக்க, யாரோ அக்கவுன்ட்ல பணம் போட்டுட்டே இருக்காங்க. நானும் விடாம எடுத்துட்டே இருக்கேன். என் ரூம் முழுக்கப் பணக் கட்டு குவிஞ்சுகிடக்கு. அதை எப்படி செலவு  செய்யலாம்னு யோசிச்சுட்டே இருக்கும்போது, கதவை யாரோ தட்டுறாங்க. போய்ப் பார்த்தா, 'எலெக்ஷன் கமிஷன்ல இருந்து வர்றோம். உங்க அறையைச் சோதனை போட ணும்’னு மிரட்டுறாங்க. பின்னாடி துப்பாக்கியும் கையுமா ஏகப்பட்ட போலீஸ். அலறி அடிச்சு எழுந்து பார்த்தா, ரூம் கொடியில் பனியன், ஜட்டி மட்டும் காத் துக்கு அசைஞ்சுட்டு இருக்கு.  மேஜை மேல சில்லறைக் காசு என்னைப் பார்த்து சிரிக்குது!''

கனா கண்டேனடா, தோழா!

வசந்தி, கொளத்தூர்.

''வானத்தை அண்ணாந்து பார்த்தா ரெண்டு மூணு சூரியன் தெரியுது. எக்கச் சக்க சத்தத்துடன் வழக்கத்தை மீறி 'ஹோ....’ன்னு கடல் அலை அடிக்குது. திடீர்னு எங்க மொத்தக் குடும்பமும்  தண் ணியில மிதக்குறோம். சுனாமியா, நில நடுக்கமான்னு தெரியலை. 'அய்யோ’ன்னு பதறி எழுந்தா...  கனவு! ஃபேன் ஓடிட்டு இருந்தும் வியர்த்துக் கொட்டிருச்சு!''

கனா கண்டேனடா, தோழா!

தாமஸ், அரும்பாக்கம்.

''என் நண்பர்களோட ஒரு நீர் வீழ்ச்சிக் குப் போயிருக்கேன். எல்லாரும் போட்டிங் போய்ட்டு ஜாலியா இருக்காங்க. நான் மட்டும் திடீர்னு அருவியில் குதிக்கிறேன். சுழிச்சு ஓடுற தண்ணி என்னை அது போக்குல இழுத்துட்டுப் போகுது. ஓடிட்டே இருக்குற தண்ணி திடீர்னு ஒரு இடத்துல கடல்ல கலக்குது. எங்கேயாவது கரை கிடைச்சா ஒதுங்கிடலாம்னு நீச்சலடிச்சு, முன்னேறுறேன். கடைசியில் கரை ஒதுங் குன இடம் பார்த்தா... இலங்கை! கண்ணு முழிச்சுப் பார்த்ததும்தான், எனக்கு நீச்சல் தெரியாதுன்னு உறைக் குது!''

கனா கண்டேனடா, தோழா!

ரோஸ்மிலன், மாம்பலம்

''ஏதோ ஒரு தீம் பார்க். நண்பர்களோட போயிருக்கேன். ராட்டினத்துல சுத்திட்டு இருக்கும்போது, ரொம்ப உயரம் போகுது. 'ஹை ஜாலி’ன்னு கை காட்டி சிரிச்சுட்டு இருக்கும்போது, என் கேபின் மட்டும் தனியாக் கழண்டு வானத்துல பறக்குது. அப்படியே கொஞ்ச தூரம் பறந்து கீழே விழுகுது. செம அடி. என்னால எழுந்து நிக்கக்கூட முடியலை. ரத்தமாக் கொட்டுது. வீட்ல எல்லாரும் என்னைச் சுத்தி நின்னு 'ஓ’ன்னு அழுதுட்டு இருக்காங்க. அந்த சத்தத்துல தூக்கம் கலைஞ்சு எழுந்து, 'ஏன் இப்படி எல்லாரும் அழுகுறீங்க!’ன்னு சத்தம் போடுறேன். அப்பத்தான் அது கன வுன்னு உறைக்குது. அந்தக் கனவை இப்ப  நினைச்சுப் பார்த்தாலும், ஏதோ கோமா ஸ்டேஜுக்குப் போயிட்டு வந்த மாதிரி ஒரு ஃபீலிங்!''

கனா கண்டேனடா, தோழா!

பிரேம்குமார், நுங்கம்பாக்கம்.

''ஒருநாள் ராத்திரி நானும் என் ஆளும் ரோட்ல நடந்து போயிட்டு இருக்குறப்போ, கார், பைக்னு எந்த வண்டியும் இல்லாம ரோடு வெறிச்சோன்னு இருக்கு. நல்ல இருட்டு. என் ஆள் என் கையைப் புடிச் சுக்கிட்டு நிதானமா பேசிக்கிட்டே வர்றா. நானும் அவகிட்ட ஜாலியாப் பேசிட்டே வர்றேன்.  ஒரு முக்குல திரும்பினா, என் அப்பா நிக்குறார்! 'டேய்... நேத்து வேற ஒரு பொண்ணுகூட கடலை போட்டுட்டு நடந்து வந்தே. இன்னிக்கு இந்தப் பொண்ணா?’ன்னு கேக்குறாரு. 'அதே பொண்ணுதாம்ப்பா இவ’ன்னு நான் சொல்லி முடிக்கிறதுக்குள்ள, என்னை அடிச்சுடுறார். என் ஆள் முன்னாடி அடிச் சுட்டாரேன்னு கோபம் கோபமா வந்தப்போ, முழிச்சுட்டேன். அன்னிக்கு முழுக்க அப்பாவைப் பாக்குறப்ப பயமாவே இருந்துச்சுன்னா பாத்துக்குங்களேன்!''

- பா.ஜெயவேல்,க.நாகப்பன்
படங்கள்: பு.நவீன்குமார்