Published:Updated:

பெண் பார்க்கும் திருவிழா!

பெண் பார்க்கும் திருவிழா!

பெண் பார்க்கும் திருவிழா!

பெண் பார்க்கும் திருவிழா!

Published:Updated:
##~##

விருதுநகர் மாவட்டத்தில் இது பங்குனிப் பொங்கல் சீஸன். பங்குனிப் பொங்கலோடு, பையனுக்குப் பெண் தேடும் வைபவமும் அரங்கேறும். மற்ற ஊர்களில் உள்ள தைப்போல பஜ்ஜி, சொஜ்ஜி கலாசாரம் இங்கே கிடையாது. முதலில் மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டார் ஜாதகம்பார்ப் பார்கள். ஜாதகப் பொருத்தம் ஓ.கே என்றால், பங்குனிப் பொங்கல் திருவிழாவுக்குப் பெண்ணை அலங்காரம் செய்து அழைத்து வந்து, ஏதாவது ஓர் இடத்தில் குடும்பத்தோடு அமர்ந்து பொங்கல் நிகழ்ச்சிகளை வேடிக்கை பார்ப்பார்கள். அப்போது மாப்பிள்ளை மற்றும் அவரது உறவு வட்டாரம் திருவிழாவை வேடிக்கை பார்ப்பதுபோல் வந்து, பெண் பார்த்துவிட்டுச் செல்வார்கள். இந்தப் பெண் பார்க் கும் படலம், அருகில் அமர்ந்து இருப்பவர்களுக்குக் கூடத் தெரியாது. பெண் பிடித்துவிட்டால், அப்படியே மாரியம்மன் கோயிலில் பூ வைப்பார்கள். பூவைத்துவிட்டால், 'இந்த மாப்பிள்ளைக்கு இந்தப் பெண்தான்’ என்று உறுதியாகிவிடும். அப்புறம்... டும் டும் டும்தான்!

பெண் பார்க்கும் திருவிழா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 விருதுநகரில் பல ஆண்டுகளாக நாடார் சமுதா யத்தில் நடக்கும் இந்தப் பெண் பார்க்கும் படலம் இன்னும் அப்படியே தொடர்வது ஆச்சர்யம்!

கடந்த பங்குனிப் பொங்கல் திருவிழாவில் இந்த முறையில் பெண் பார்த்து மணமாலை கண்ட விருது நகரைச் சேர்ந்த மணிகண்டன் - ஜெயலட்சுமி ஜோடியைச் சந்தித்தோம்.

''சென்னையில் டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். வீட்ல எனக்குத் தீவிரமா பெண் பார்த்துட்டு இருந்தாங்க. அப்போ,விருதுநகர்ல பெண் இருக்கிறதா சொன்னாங்க. போன வருஷம் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவுல பெண்ணைப் பார்க்க ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. 'பொண்ணு வீட்டுக்காரங்க எங்கே உட்கார்ந்திருக்காங்க, பொண்ணு என்ன கலர் சேலை கட்டியிருக்கும்’னு எல் லாத் தகவலும் முன்கூட்டியே சொல்லிட்டாங்க. எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருந்தது. நான் என் நண்பர் களோட திருவிழாவை வேடிக்கை பார்க்கிற மாதிரி ரோட்ல நடந்து போய் ஜெயலட்சுமியைப் பார்த்தேன். எனக்குப் பிடிச்சிருந்தது. உடனே வீட்ல ஓ.கே சொல்லிட்டேன்!'' என்கிறவரை இடைமறிக்கிறார் ஜெயலட்சுமி.

பெண் பார்க்கும் திருவிழா!

''முதல்ல பெண் பார்க்க வர்றாங்கனு சொன்னதும் படபடப்பா இருந்துச்சு. வீட்லவெச்சுப் பார்த்திருந்தா, இன்னும் டென்ஷன் ஆகிருப்பேன். திருவிழாங்கிறதால படபடப்பு போய் ஆர்வம் வந்திருச்சு. என்கிட்ட முன்னாடியே மாப்பிள்ளை போட்டோ காட்டிட்டாங்க. அப்பவே எனக்குப் பிடிச்சிருந்தது. இருந்தாலும் நேர்ல பார்த்து முடிவு பண்ணலாம்னு நினைச்சேன். திரு விழாவில் இவரு தூரத்துல நடந்து வரும்போதே கண்டு பிடிச்சுட்டேன். பார்த்ததுமே ரொம்பப் பிடிச்சுப்போச்சு. உடனே சம்மதம் சொல்லிட்டேன். அப்பவே ரெண்டு வீட்டுப் பெரியவங்களும் பேசி கோயில்ல பூ வெச்சு உறுதி செஞ்சுட்டாங்க!'' அப்போதைய வெட்கம் இப் போதும் பிரதிபலிக்கிறது ஜெயலட்சுமி முகத்தில்.

விருதுநகரைச் சேர்ந்த ஏலக்காய் வியாபாரி சண்முகவேலுவும், அவரது மனைவி கவிதாவும் கடந்த பொங்கலின்போது இதே போல திருமணம் செய்துகொண்டவர்கள் தான். ''என் கல்யாணம் எனக்கே ஆச்சர்ய மான விஷயம். பொங்கல் அன்னிக்கு கோயில் பக்கத்துல கவிதாவைப் பெண் பார்த்து 'ஓ.கே’ன்னு சொல்லிட்டேன். வீட்டுல ரொம்ப ஆச்சர்யமா, 'கவிதாவை நீ பார்த்ததே இல்லையா?’ன்னு கேட்டாங்க. 'இல்லை’னு சொன்னதும் 'அவளும் நம்ம தெருவுலதான் இருக்கிறா’னு சொன்னாங்க. ஒரே தெருவுல இருந்துக்கிட்டா, இவ்வளவு நாளாப் பார்க்காம இருந்தோம்’னு ஆச்சர் யமா இருந்தது. நானாவது பரவாயில்லை. பத்திரிகை அடிக்கும்போதுதான் கவிதா வுக்கு இந்த விஷயமே தெரியும். அப்படி ஓர் அப்பாவியா வாழ்ந்திருக்காங்க!'' - சண்முகவேலு சிரிக்க, செல்லமாக முறைக் கிறார் கவிதா!  

- எம்.கார்த்தி, படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism