Published:Updated:

காதல்... நீயா - நானா?

புதுவை கல்லூரி கலகலா!

காதல்... நீயா - நானா?

புதுவை கல்லூரி கலகலா!

Published:Updated:
##~##

பொதுவாகவே அடுத்தவர்களின் பேச்சைக் கவனிப்பதில் சுவாரஸ்யம் அதிகம். அதிலும் கல்லூரி இளசுகளின் அரட்டையைக் கவனிப்பது இன்னும் சுகம். நாம் எட்டிப்பார்த்த அரட்டை புதுவை ராஜீவ்காந்தி பொறியியல் கல்லூரி மாணவ - மாணவிகளின் அரட்டை அரங்கம்!

குஷ்பு, வடிவேலு, விஜயகாந்த், உலகக் கோப்பை, ஹன்சிகா மோத்வானி, ஆர்யா என்று அடிபட்டு உதைபடும் அரட்டைப் பந்து வரிசையில் அன்றைய கோல்.... காதல். ஆஹாங்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காதல்... நீயா - நானா?

'நீயா - நானா’ என்று அணி பிரிந்து கட்சி கட்டி ஆண்களும் பெண்களும் களம் இறங்க, ஆரம்பித்தது ரணகள ரவுசு! ''என்னதான் சொல்லு, கடைசி வரைக்கும், காதல்னா உண்மையா இருக் கிறது பொண்ணுங்கதான்!'' என்றார் திவ்யா. ''இன்னிக்கு ஏப்ரல் ஒண்ணுகூட இல்லையே. அப்புறம் ஏன்... ஏன்... ஏன் திவ்யா?'' என்று கலாய்த்தது மணி. உடனே 'திவ்யா... திவ்யா... திவ்யா..!’ என்று 'காதலில் விழுந்தேன்’ தனுஷை மிமிக்ரி செய்தது பாய்ஸ் குரூப். ''மணி சொல்றதுதான் ரைட். கஷ்டப்பட்டு லவ் பண்றது நாம. ஆனா, கடைசியில அப்பா, அம்மா பார்த்துவைக்கிற பையனைக் கல்யாணம் பண்ணிட்டுப் போயிருவாங்க. அப்புறம் நாம... ஙஙஙஙதான்!'' என்று விநாயகம் சொல்ல, திவ்யா முகத்தில் அனல் ஆவே சம். ''உனக்குப் பொருத்தமாத்தான் பிள்ளையார் பேரு வெச்சிருக்காங்க. உனக்கும் காதலுக்கும் செட் ஆகவே ஆகாது!'' சடார் சாபம் ஒன்றை விசிறினார்.

''அதெல்லாம் விடு திவ்யா. அது ஏன் காதலன்னு ஒரு இளிச்சவாயன் மாட்டிட்டா, அதுக்கு அப்புறம் நீங்க பர்ஸையே திறக்கறது இல்லை? குச்சி மிட்டாயோ,  குல்பி ஐஸோ அவன்தான் வாங்கித் தர்றான்!'' என்று டைமிங் ரைமிங் அடித்தார் ஸ்ரீதர்.

''ஏய், நீ எந்த காலத்துல இருக்கே? இப்பல்லாம் பொண்ணுங்கதான் பசங்களுக்கு அழ வேண்டியதா இருக்கு. பசங்களுக்கு டாப்-அப் கூட பொண்ணுங்க தான் பண்றாங்க!'' என்று வாதாடினார் காயத்ரி. ''அதாவது பரவாயில்லை காயு, தம்மடிக்கக்கூட காசு கேட்கிறாங்கன்னா பாரேன்!'' என்று அவருக்கு ஆதர வுக் குரல் எழுப்பினார் ரம்யா.  ''சரி, அதை விடு. காதலிக்கிறது எல்லாம் காதலிச்சுட்டு, கடைசியில கம்பி நீட்டறது பொண்ணுங்கதானே, அது ஏன்?'' என்று தன் தரப்பில் உறுதியாக இருந்தார் விநாயகம்.

''தன்னை நல்லாவெச்சுக் காப்பாத்துவான்னு லவ்வர் மேல நம்பிக்கை வந்தா, எந்தப் பொண்ணும் உறுதியா நிற்பா. ஆனா, சிகரெட்டுக்கே கடன் கேட்கி றவனை எப்படி நம்பிப் பின்னால வருவா?'' என்பது திவ்யாவின் அழுத்தமான கேள்வி!

''என்னடா இது... மொதல்ல காதலிக்க மனசு இருந்தா போதும்னாங்க. இப்போ பர்ஸும் வேணும்கிறாங்க!'' என்று அலுத்துக் கொண்டார் ஸ்ரீதர்.

காதல்... நீயா - நானா?

''லவ் பண்றதுகூடப் பரவாயில்லைடி. 'ஏன் கிளாஸ்ல அவன்கூட பேசறே, இவன்கூட பேசறே?’ன்னு பொசஸிவ்னெஸ்ல பொசுங்கிறது இன்னும் டார்ச்சர்!'' என்று அடுத்த திரி கிள்ளி னார் காயத்ரி.

''அது மட்டுமா? போன் பண்றப்போ கால் வெயிட்டிங் வந்தா, 'இவ்ளோ நேரம் யார்கூட பேசிட்டு இருந்தே?’னு மிரட்டல் டார்ச்சர்!'' என்று சளைக்காமல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார் திவ்யா.

விவாதம் முழுக்க முழுக்க ஆண்களுக்கு எதிரான திசையிலேயே பயணிப்பதை உணர்ந்து உஷாரான மணி, ''சரி விடுங்க... நாமதான் யாரும் யாரையும் லவ் பண்ணலையே! இந்தப் பிரச்னைகளை எல்லாம் லவ் பண்றவங்க பார்த்துக்கட்டும்!'' என்று சைடு வாங்கினார்.  

எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும், பொண் ணுக கேள்வி கேட்டா மட்டும், ஏன் எப்பவும் ஆம்ப ளைங்க எஸ்கேப் ஆயிடுறாங்க?

- நா.இள.அறவாழி, படங்கள்:தேவராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism