Published:Updated:

அக்னி நாயகனின் கனவை நனவாக்குவோம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அக்னி நாயகனின் கனவை நனவாக்குவோம்!
அக்னி நாயகனின் கனவை நனவாக்குவோம்!

அக்னி நாயகனின் கனவை நனவாக்குவோம்!

அக்னி நாயகனின் கனவை நனவாக்குவோம்!

மாண்புமிகு அக்னி நாயகனே...
வறுமையை உரமாக்கி வாழ்நாளெல்லாம்
வெற்றிபெற்ற வெற்றிப் புத்திரனே!

நீ வெறும் ஆசானல்ல...
எங்கள் விழிதிறந்து வழிகாட்டியவன்
வாழ்ந்தும் காட்டியவன்!

எல்லா சோதனைகளையும் சாதனைகளாக்கியவன்
அறிவியல் திறனாலும் அணுஆயுத சிந்தனையாலும்
அகிலத்தையே திரும்பிப் பார்க்க வைத்தவன்!

சிம்மாசனத்தில் ஏறியபோதும்
சிரம் தாழ்த்தியே வாழ்ந்தவன்!

ஏவுகணையாலும் எழுத்தாலும்
எங்கள் நெஞ்சில் குடிகொண்டவன்!

மாணவர்களுக்கெல்லாம் தந்தையானவன்
கனவுகான கற்றுக் கொடுத்தவன்
அவர்களுக்கு மேற்கோள் புத்தகமானவன்!

மதங்களைத் தாண்டிய மாமனிதன்
மனிதநேயம் நிறைந்தவன்
மரங்களுக்கு மறுவாழ்வு தந்தவன்!

84 வயது இளைஞன் நீ...
கடைசி மூச்சு வரை
கற்றுக் கொடுப்பதற்காக கற்றுக் கொண்டவன்!

அக்னி நாயகனின் கனவை நனவாக்குவோம்!

நீ மறையவில்லை...
எங்கள் மனங்களில்
ஏதோ ஒரு சக்தியாய் வாழ்கிறாய்!

பிரிவின் துயரம் துடைத்தெறிந்து
வீறிட்டெழுந்து வா இளைய சமுதாயமே!
அக்னி நாயகனின் கனவை நனவாக்குவோம்!

கண்ணீரோடு ஒரு இந்தியன்

-சோகம் ஷஃபீக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு