Published:Updated:

காலம் போற்றும் அப்துல் கலாமுக்கு கண்ணீர் அஞ்சலி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
காலம் போற்றும் அப்துல் கலாமுக்கு கண்ணீர் அஞ்சலி!
காலம் போற்றும் அப்துல் கலாமுக்கு கண்ணீர் அஞ்சலி!

காலம் போற்றும் அப்துல் கலாமுக்கு கண்ணீர் அஞ்சலி!

காலம் போற்றும் அப்துல் கலாமுக்கு கண்ணீர் அஞ்சலி!

மைதிப்பூங்காவில் பிறந்த அக்கினி ஏவுகணை. 'மாளிகை ஜனாதிபதியாக' இல்லாமல், 'மக்களின் ஜனாதிபதியாக' வாழ்ந்து காட்டியவர். இவரால் விண்ணில் பாய்ந்த ஏவுகணையின் வேகத்தை விட, மண்ணில் உள்ள மனிதர் மேல் இவர் காட்டிய அன்பு வேகமானது. ஏவுகணையின் வேகம் இவரது பேச்சில் தெரியும்.

கல்யாணம் ஆகாத பிரம்மச்சாரி... ஆனால், கோடிக்கணக்கான குழந்தைகளின் அன்புத் தாத்தா. இவர் 'அல்லா'வை சிந்தித்ததை, நேசித்ததை விட, 'இல்லா'தவர்களை அதிகமாக நேசித்த எளியவர். தமிழினத்தின் உயர்வை தரணிக்கு சொன்ன பெருமைக்குச் சொந்தக்காரர்.

உலகிலேயே கோடிக்கணக்கான மாணவர்களைச் சந்தித்த ஒரே அன்பு ஜனாதிபதி, அறிவியல் ஆசான் இவர் மட்டுமே. கோடிக்கணக்கான மாணவர்களின் இதயங்களை வென்ற, மறக்க முடியாத ஜனாதிபதியும் இவர் மட்டுமே. (பரிசும், பணமும் நிரந்தரமல்ல, அன்பு நெஞ்சங்களே நிரந்தரம்' என்று எடுத்துக் காட்டாக வாழ்ந்தவர். 'பெட்டி பெட்டியாக பொன்னும், பொருளும் தேவை இல்லை. சுட்டிக் குழந்தைகள் மட்டுமே சொத்து' என்று குழந்தைகளுக்காக வாழ்ந்த கள்ளம் கபடமற்ற மாமனிதர். இவர் ஜனாதிபதிகளுக்கு சேனாதிபதி என்று சொல்லும் அளவிற்கு பதவிக்கு நேர்மையால் பெருமை சேர்த்தவர்.

காலம் போற்றும் அப்துல் கலாமுக்கு கண்ணீர் அஞ்சலி!

மாணவர்களுடன் வாழ்ந்த 84 வயது இளைஞர், மாணவர்களை இந்தியாவின் வல்லரசு திட்டத்திற்கு கனவு காணச் சொன்ன  கணக்கில்லாத அன்பு இதயங்களுக்குச் சொந்தக்காரர். சாதனைகள் எல்லாம் கலாமின் காலில் குவியும் அளவிற்கு உழைப்பால் உயர்ந்தவர்.

அணுவை விட வலிமையானது அன்பு என்று நிரூபித்துக் காட்டியவர். பொக்ரான் அணு ஆயுத சோதனை மூலம் பொசுக்கி விடுவோம் என பொல்லாத கூட்டத்திற்கு எச்சரிக்கை விடுத்தவர். அமெரிக்காவின் கண்ணையே கட்டிப்போட்டு, அணுகுண்டு சோதனை நடத்திய  அதிரடி அணு அறிவியலார்.

முதல் குடிமகனாக திகழ்ந்து, முத்திரை பதித்த மூத்த குடிமகன் விருதுக்கு பெருமை சேர்த்தவர் விஞ்ஞானி அப்துல்கலாம். எளிமைக்கு எடுத்துக்காட்டாக, வறுமைக்கு எதிராக போராடியவர். மதங்கள் மறந்த மாமேதை. கீதையும், குரானும், திருக்குறளும் தன்  மூச்சாக, எளியவர்களில் எளியவர் என்று சொல்லும் அளவிற்கு வாழ்ந்து காட்டியவர்.

வறுமையின் வலி அறிந்து வறுமையே நம் எதிரி என்று வல்லரசு இந்தியாவின் கனவு நாயகனாகத் திகழ்கிறார். முதல் குடிமகனாக வாழ்ந்தும் இந்தியர்களின் அன்பு என்ற சொத்தை மட்டும் சம்பாதித்த கடவுளின் அவதாரம். மூச்சுள்ள வரை மாணவர்களை வழி நடத்திய மாமேதை. மாணவர்கள் வலிமையான  இந்தியாவின் தூண்கள் என வல்லரசு இந்தியாவிற்கு வடிவமைப்பை கொடுத்தவர்.

கலாம்… இதயம் நின்று போனாலும் மக்கள் இதயம் உள்ளவரை மறக்க முடியாத மேதை. மாணவர்களுக்காக துடித்த இதயம்  மாணவர்கள் முன் நின்று போனது. அன்பானவர்களே வல்லரசு இந்தியாவிற்கு கனவு காணுங்கள்! அப்துல் கலாமின் ஆன்மா சாந்தி அடையட்டும்!

- எஸ்.அசோக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு