Published:Updated:

கனமழை நீடிப்பு: சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை நீடிப்பு: சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை: தமிழக கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை தொடர்வதால், சென்னையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கன மழை காரணமாக, நகரின் பல பகுதிகளில் சாலைகள் வெள்ளம் தேங்கி நிற்கின்றன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

வங்கக் கடலில் நிலை கொண்டு இருக்கும் குறைந்த பட்ச காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, அடுத்த 24 மணி நேரத்துக்கும் கன மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது.  தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கனமழை பெய்தது.

அடுத்த கட்டுரைக்கு