Published:Updated:

முடி இருக்குறவனெல்லாம் டி.ஆர் இல்ல... முடியும்ங்கறவன்தான் டி.ஆர்!

முடி இருக்குறவனெல்லாம் டி.ஆர் இல்ல... முடியும்ங்கறவன்தான் டி.ஆர்!
முடி இருக்குறவனெல்லாம் டி.ஆர் இல்ல... முடியும்ங்கறவன்தான் டி.ஆர்!

முடி இருக்குறவனெல்லாம் டி.ஆர் இல்ல... முடியும்ங்கறவன்தான் டி.ஆர்!

முடி இருக்குறவனெல்லாம் டி.ஆர் இல்ல... முடியும்ங்கறவன்தான் டி.ஆர்!

டி. ராஜேந்தரை கிண்டல் அடிப்பவரா நீங்கள்? அப்படின்னா இதை படிங்க...

எங்கேயோ மயிலாடுதுறையில் பிறந்து 70-களின் கடைசியில் சினிமாவைக் கனவாகக் கொண்டு ஒரு இளைஞன் சென்னைக்கு வருகிறான். எப்படியோ முட்டி மோதி இந்த சினிமாவை கற்று முதல் முதல் ஒரு படம் இயக்க வாய்ப்பு கிடைக்க, இயக்குநராகிறான்.

அவனுடைய முதல் படம்... ஒரு தாய் குழந்தையைப் பெற்று எடுக்க எவ்வளவு கஷ்டங்களை அனுபவிப்பாளோ, அதைப்போலத்தான் இயக்கமும். ஒவ்வொரு ஃபிரேம் ஆக பார்த்துப் பார்த்து செதுக்குகிறான். தானே இசை அமைக்கிறான்.

1980-ல் படம் ரிலீஸ் ஆகிறது. பிரசவித்த அந்தக் குழந்தையின் முகத்தைப் பார்க்க முதல் நாள் தியேட்டரில் கடைசி சீட்டின் அருகில் உள்ள கதவு ஓரத்தில் நின்றுகொண்டிருக்கிறான் - மனது முழுவதும் சந்தோஷத்தோடு.

படம் ஆரம்பமாகிறது. படப்பெயர் போடப்பட்டு ஒவ்வொரு நடிகரின் பெயரும் போடுகிறார்கள்.
கடைசி டைட்டில் கார்டில் இயக்கம் என்ற இடத்தில் வேறு யாரோ பெயர். தயாரிப்பாளரின் பெயர்.

எப்படி இருக்கும்?!

தான் பார்த்துப் பார்த்து செதுக்கிய அந்தப் படத்தைப் பார்க்காமலே தியேட்டரை விட்டு வெளியே வருகிறான். அதனைக் கண்டு அவன் ஓய்ந்துவிடவில்லை. அதன் பிறகு 80-களில் அவன் இயக்கிய அத்தனை படங்களும் ப்ளாக் பஸ்டர் (Block Buster) ஹிட். 365  நாட்களையும் கடந்து ஓடியவை. அவர்தான்... இயக்குநர்,  ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், நடிகர், பாடகர், இசை அமைப்பாளர் டி. ராஜேந்தர்.

அவர் இயக்கி பார்க்க முடியாமல் போன படம்தான்  'ஒரு தலை ராகம்'. 1980-ல் ரிலீஸ் ஆகி தமிழ் சினிமா வைப் புரட்டிப்போட்ட படம். ஒரு வருடத்தைத் தாண்டி ஓடி சாதனை படைத்த படம்.

முடி இருக்குறவனெல்லாம் டி.ஆர் இல்ல... முடியும்ங்கறவன்தான் டி.ஆர்!

கல்லூரி காதலை மிக அழகாக ஆழமாக சொன்ன முதல் தமிழ் படம்.  அன்று அவரை ஏமாற்றியவர்கள் இன்று காணாமல் போய்விட்டார்கள். இன்றும் இவர் நிலைத்து நிற்கிறார்.

இப்படிப்பட்ட ஒரு மாபெரும் சினிமா கலைஞருக்கு நாம் இன்று கொடுத்துக்கொண்டிருக்கும் மரியாதை என்ன என்று நம் எல்லோருக்கும் தெரியும்.

சினிமா தெரிந்த யாரும் அவரைக் கிண்டல் செய்வது இல்லை; தெரியாதவர்கள்தான். இன்றும் அந்த மனிதர் தன்னை நிரூபித்துக்கொள்ள ஒவ்வொரு மேடையிலும் போராடிக்கொண்டிருக்கிறார். தனக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்கிறார்.

நாம் போன தலைமுறை கலைஞர்களை காமெடியர்களாகப் பார்க்க ஆரம்பித்துவிட்டோம். அதனால்தான் அவர் எது பேசினாலும் கிண்டல் செய்கிறோம். ஏன்? தங்கை பாசம், தாய் பாசம் வைத்து படம் எடுப்பது அவ்வளவு தப்பான விஷயமா?

ஆனால், நாம் ஒன்றை கவனிக்கணும். இப்படி எவ்வளவு பேர் அவரை வைத்து கிண்டல் செய்தாலும் அவர் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வது இல்லை.

அவர் எப்போதும் அவராகவே இருக்கிறார். அதுதான் டி.ஆர்!

'முடி இருக்குறவனெல்லாம் டி.ஆர் இல்ல... முடியும்ங்கறவன்தான் டி.ஆர்!'

என்ன ஒரு பாசிட்டிவ் attitude!... சான்ஸே இல்ல!

- பிரபு மித்ரன்
 

அடுத்த கட்டுரைக்கு