Published:Updated:

வாக் கார் - இது எதையோ ஞாபகப்படுத்துதே! [வீடியோ]

Vikatan Correspondent
வாக் கார் - இது எதையோ ஞாபகப்படுத்துதே! [வீடியோ]
வாக் கார் - இது எதையோ ஞாபகப்படுத்துதே! [வீடியோ]

வதார புருஷன் படத்துல இடம்பெற்ற செந்தில் - கவுண்டமணி காமெடில இத நீங்க கண்டிப்பா பாத்துருப்பீங்க. அதாங்க பிச்சைக்கார வேஷத்துல வர்ற செந்தில், சக்கரம் வைச்ச கட்ட வண்டில வந்து பிச்சை எடுப்பாரு. இது ஒரு அரிய வகை கண்டுபிடிப்பா, 50,000 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய கண்டுபிடிப்பா மாறி இருக்குனு சொன்னா நம்புவீங்களா? ஆனா நீங்க நம்பிதான் ஆகணும்.

வாக் கார் - இது எதையோ ஞாபகப்படுத்துதே! [வீடியோ]

ஆமாங்க வாக் கார் அப்படிங்கற ஒரு வாகனத்த ஜப்பான்ல கண்டுபிடிச்சு இருக்காங்க. இதுல ஏரி நின்னா போதும் நாம எங்க போகணுமோ அங்க கொண்டுபோய் விட்டுவிடும். பேட்டரி மூலம் இயங்கும் இந்த கார், அலுமினிய தகட்டால் செய்யப்பட்டது. ஸ்கேட்டிங் செய்வது போல தகட்டில் இருந்து நம் கால்களை நகற்றினால் நாம் செல்ல வேண்டிய இடத்தை நோக்கி இது பயணிக்கும். மூன்று மணி நேரம் சார்ஜ் செய்தால் 10-12 கிமீ பயணிக்க முடியுமாம்.

இதன் விலை 800 அமெரிக்க டாலர்கள் என்று கூறுகிறார்கள், இந்திய மதிப்பில் சுமார் 50,000 ரூபாய். நம்ம ஊர்ல பிச்சைக்காரங்க வைச்சுருக்குற வண்டில பேட்டரி மாட்டி வித்தா 50, 000 ரூபாயாங்குற கேள்விய இந்த ஜப்பான் கண்டுபிடிப்பு ஏற்படுத்துகிறது.

வீடியோ இணைப்பு: