Published:Updated:

'பெண் குடிக்கு அடிமையானால் அந்த சந்ததியே அழிந்து விடும்!'

'பெண் குடிக்கு அடிமையானால் அந்த சந்ததியே அழிந்து விடும்!'
'பெண் குடிக்கு அடிமையானால் அந்த சந்ததியே அழிந்து விடும்!'

'பெண் குடிக்கு அடிமையானால் அந்த சந்ததியே அழிந்து விடும்!'

'மதுவுக்கு அடிமையாகிவரும் பெண்கள்!' என்ற தலைப்பில் ஜுனியர் விகடனில் வெளியான கட்டுரைக்கு வாசகர்களிடம் இருந்து வெளிப்பட்ட அதிர்ச்சி, வேதனை, கோபம், ஆற்றாமை என பலவிதமான உணர்வுகள் இங்கே...

'பெண் குடிக்கு அடிமையானால் அந்த சந்ததியே அழிந்து விடும்!'

Ganesan
வேறு எதையும் எண்ணவேண்டாம் , குடியால் நினைவிழந்த நிலையில் எந்த அசம்பாவிதத்தையும் உணர்ந்து தன்னைக் காத்துக்கொள்ளும் அறிவு செயல்படாது. இதனால் எத்தனையோ விபரீதங்கள் நேரலாம் !
 
KKovai
(((வட மாநிலங்களைச் சேர்ந்த மது அருந்தும் பெண்களால் தமிழகப் பெண்களுக்கு மது அருந்தும் பழக்கம் ஏற்படுகிறது.))) என்னைக்கு ''வட இந்திய பெண்'' ''கல்யாணத்திற்கு முன் செக்ஸ்'' வைத்துக்கொள்வதில் தப்பில்லை என்று சொல்லி தமிழ்நாட்டின் கலாசாரத்தையே கெடுத்தாலோ... அன்றில்லிருந்தே ''தமிழ் பெண்களின்'' அழிவு காலம் ஆரம்பித்து விட்டது... அதனால் இப்போது ''சேலை கட்டிய ஆண்கள் '' தான் வெளிய உலவுகிறார்கள்...
 
ஸ்வாமினாதன்
எங்கள் காலத்தில் குடும்ப பெருமையை காப்பாற்றி உயர்த்த வேண்டும் என்ற எண்ணங்கள் வளர்க்கப்பட்டது. சமூகமும் இதை வளர்த்தது. இன்றோ எல்லாவற்றையும் கெட்டுப்போக விட்டு, அரசங்கத்தையும், சட்டத்தையும் குறைகூறி, குடும்ப பொறுப்பை மறைத்து வாழ்ந்து வருகிறோம்.

DD.Ambujavalli

வேறு எதையும் எண்ணவேண்டாம், குடியால் நினைவிழந்த நிலையில் எந்த அசம்பாவிதத்தையும் உணர்ந்து தன்னைக் காத்துக்கொள்ளும் அறிவு செயல்படாது. இதனால் எத்தனையோ விபரீதங்கள் நேரலாம் !
 
AAppan

ஒரு ஆண் குடிக்கு அடிமையானால் அதிகபட்சம் அவன் குடும்பம் பாதிக்கும். சில சமயம் அந்த வீட்டு பெண் நிர்வாகத்தை ஏற்று குடும்பத்தை நடத்துவார்...ஆனால் பெண் குடிக்கு அடிமையானால் அந்த சந்ததியே அழிந்து விடும்....ஏனென்றால் குழந்தை பேறு, வளர்த்தலை ஒரு பெண்ணே செய்ய முடியும்....
 
 
வவினோத்

இங்கேயும் பெண்களுக்கு சம உரிமை வேணும்னு போராடாம இருந்த சரி.....JJamal
அடக் கொடுமையே! நம் மக்களின் நிலையை பார்த்தால் மிகவும் வருத்தமாகவும் பரிதாபமாகவும் உள்ளது. டாஸ்மாக் மக்களை சீரழித்துவிட்டது. மது விலக்கு வந்தாலும் நிலைமை சீராவது போலில்லையே. புது குடிகாரர்கள் இல்லாமல் போகலாம். ஆரம்பக் குடிகாரர்கள் மது கிடைக்காமல் பழக்கத்தை தொடராமல் போகலாம். இவைகள்தான் மது விலக்கினால் வரப்போகும் நன்மைகள்.


Ddsad
"இந்த நவீன காலத்தில் குடிப்பது தவறில்லை என்ற எண்ணத்தைப் பெண்களுக்கு விதைத்துள்ளது’’ என்றார் வேதனையுடன்... குடிப்பதில் தவறு இல்லை. ஆனால் அதன் மூலம் வரும் காசுல அராசங்கம் வழங்கும் இலவச அரிசியை சாப்பிட்டு உருப்படியான வேலை வெட்டி ஒண்ணும் இல்லாமல் பிரச்னை பண்றதே முழு நேர தொழிலா வைச்சுருக்கறது தப்பு.

நாடு முழுவதும் மதுக்கு எதிரா போராட்டம் என்று ஒரு மாய தோற்றம் உருவாக்கப்படுகிறது. 2009 வாக்குல எப்படி ஈழம், புலி, முள்ளி வாய்க்கால், முத்துகுமார் அப்படின்னு ஒரு மாய தோற்றம் உருவாக்குனாங்களே அப்படி.
 

RRaman
யாரங்கே 30000 கோடி இலக்கை உடனே மாற்றி அறுபதாயிரமாக மாற்றுங்கள்! வாடிக்கையாளர் எண்ணிக்கை இரட்டிப்பாகி விட்டது. அனைவருக்கும் இலவச ஐபோனே கொடுக்கலாம் ...
 
SSBala
மேலை நாடுகள் போல தமிழ்நாடு முன்னேற வேண்டும், பெண்கள் விடுதலை பெற வேண்டும் என்பதற்கு அற்புதமான குறுக்கு வழிதான் அம்மையாரின் "டாஸ்மாக்".


AAjay
வார இறுதியில் மது அருந்துவதில் அந்த பெண் சொல்வது போல தவறு ஒன்றும் இல்லை. இங்கு கருத்து என்னும் பெயரில் உலரும் பலர் வாங்கி வீட்டில் வைத்து வெளியே தெரியாமல் குடிக்கும் போலிக்கும்பல்.

MLmagesh. L
இந்த கருத்தை விகடன் முன்னிறுத்துவது போல , மற்ற ஊடகங்கள் செய்வதில்லை குறிப்பாக ஆளுங்கட்சி ஆதரவான தின பத்திரிக்கை ஊடகங்கள் , இது ஆட்சிக்கு எதிரான சதி என எழுதுகிறது... நாம் ஒன்று திரண்டு மதுவை ஒழிப்போம்
 

Ssriram
இங்கு கடைகளில் பாதுகாப்பு இல்லை என்றுதான் பல பெண்கள் குடிபதில்லை. வடக்கே சென்று பாருங்கள் - ஒரு 6-7 வருடம் முன் என்னுடைய சக பெண் ஊழியர் நானே குடிக்கிறேன், உனக்கென்ன என்றார். வாரத்திற்கு 3 முறை தவறாமல் குடிபவர்கள் அவர்கள். பெண்கள் வசதிக்காகதான் அம்மா தாயுள்ளம் கொண்டு எல்லா மால்களிலும் எலைட் டாஸ்மாக் ஆரம்பித்துள்ளார். என் கிராமத்தில் பல பெண்கள் குடிப்பார்கள், ஆண்கள் அளவு இல்லாவிட்டாலும். முக்கியமாக, காய்ச்சி விற்றது ஒரு பெண். ஆனால் ஆண்கள் அளவுக்கு பெண்கள் அடிமை ஆவதில்லை என்று நினைக்கிறன்.

STSenthilraj Thiraviyam

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு என்பது சாத்தியம் இல்லாத ஒன்று. அரசே மதுக்கடைகளை நடத்துவதை முதலில் கைவிட வேண்டும். அரசு மது கடைகளை நடத்துவதால் தரம் குறைந்த சாராயம் மது என்ற பெயரில் தமிழன் தலையில் கட்டபடுகிறது. சாராயம் மிக வேகமாக மனிதனின் உடலை கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கும். தனியார் வசம் விடபட்டால் கொள்முதல் செய்யும் ஒவ்வொரு தனி நபரும் குறைந்த விலையில் தரமான மதுவை விற்பனை செய்வார்கள். இப்படி வீதிக்கு இரண்டு மது கடைகள் இல்லாமல் நட்சத்திர விடுதிகளில் மட்டும் பார்கள் செயல் பட அனுமதிக்க வேண்டும். எளியவர்கள் குடிக்க டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் வாங்கி வீட்டுக்கு சென்று குடிக்க அறிவுறுத்தபடவேண்டும்.

அரசே மதுக்கடைகளை வைத்து நடத்துவதால் காவலர்கள் குடித்துவிட்டு வருபவர்களை கைது செய்தல் இயலாத ஒன்றாகி விடுகிறது. அப்படி மீறி கைது நடவடிக்கையில் இறங்கினால் விற்பனை குறைகிறது என்று டாஸ்மாக் நிர்வாகம் அரசுக்கு புகார் செய்து, அப்படியான நடவடிக்கைகளை நிறுத்தி விடுகின்றனர். தனியார் வசம் இருந்தால் போதையில் வாகனம் ஓட்டுவதை கட்டுப்படுத்தலாம். விபத்துகள் குறையும். தீவிர போதை ஒழிப்பு பிரச்சாரம் செய்யப்பட வேண்டும்.

படங்களில் குடிக்கும் காட்சிகள் அனுமதி மறுக்க வேண்டும். அப்படி கட்டாயம் அந்த காட்சி வேண்டும் என்றால், நான்கு மடங்கு வரி விதிக்க வேண்டும். குடித்துவிட்டு வாகனம் ஒட்டாதீர்கள் என்று எல்லா இடத்திலும் போர்டு வைத்திருப்பதை முதலில் தூக்க வேண்டும். அரசு என்ன செய்யக் கூடாது என்று நினைக்கிறதோ, அதை மக்கள் கண்டிப்பாக செய்வார்கள் என்ற நெகடிவ் இம்பாக்ட் சைக்கலாஜி அறிந்து டாஸ்மாக் விற்பனையை அதிகப்படுத்த இப்படி விளம்பரம் செய்வது போல் உள்ளது.


Cchinniahmuthuraman
குடிச்சா என்ன தப்புன்னு கேட்க ஆரம்பித்து விட்டார்கள் பெண்கள், நினைக்கவே மகிழ்ச்சியாக உள்ளது அம்மாவின் ஆட்சியில். இதுபோன்ற முன்னேற்றங்கள் இன்னும் வெளி உலகுக்கு தெரியாமல் உள்ளது. லஞ்சம் வாங்கினால் என்ன தப்பு, நிலத்தை அபகரித்தால் என்ன தப்பு, பொய் கேஸ் போட்டா என்ன தப்பு, கஞ்சா அடித்தால் என்ன தப்பு ...... இன்னும் எத்தனையோ ... என்ன தாஸ் அண்ணே அம்மாவோட ஆட்சிலே இதெல்லாம் ஒரு தப்பா

SSankar
இதுல அம்மா ஆட்சி எங்க வந்தது? இது உலகத்தில் நடக்கும் மாற்றம். எல்லா ஊரிலும் நடக்கிறது. அம்மாவை பொருத்தமட்டில் எதுவுமே தப்பில்லை. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று மேல்முறையீட்டின் ஓட்டை தீர்ப்பு வழியாக பதவிக்கு வந்து அதை எதிர்த்து செய்யப்பட மேல்முறையீட்டிற்கு உச்ச நீதி மன்றத்தின் நோட்டீஸுக்கு பதில் கொடுக்கவேண்டிய முதல்வரை பார்க்க பிரதமரே வீடு தேடிவந்து லன்ச் சாப்பிட்டுவிட்டு போகிறார். ப்ரொடோகாலாவது ஆட்டுக்காலாவது! எதுவுமே தப்பில்லை. தாய்மார்கள் குழைந்தைக்கு பால் கொடுக்க பேருந்து நிலையங்களில் தனி மறைவிடம் தந்துள்ளதைப்போல் பெண்கள் மது குடிக்கும் தனி அறைகளும் ஒதுக்கி அம்மா ஆணை பிறப்பிப்பார்,. பெண்ணின் கஷ்டம் ஒரு பெண்ணுக்குத்தானே தெரியும்.
 
கருணாநிதிதான் 1971ல் தமிழ்நாட்டில் மதுவிலக்கை தளர்த்தி தமிழ் சமுதாயத்தையே கெடுத்துவிட்டார் என்று பலர் கருத்து சொல்லும்போது 'மது குடித்தால் என்ன தவறு' என்ற இப்போதைய வாதம் எங்கே போயிற்று?
 
MMavala
மது ஒரு அடிக்‌ஷன்தான். அதே போல், காபி, இனிப்பு தீனி-தின்பண்டங்கள், கொழுப்பு அதிகமான உணவு என எல்லாமே ஒரு அடிக்‌ஷன்தான். எல்லாமே அளவோடு இருப்பது நல்லது எனினும், இதில் ஒரு செலவை அதி வேகத்தில் உடலை அழித்துவிடும். அதில் கண்டிப்பாக, சிகரெட்டும், மதுவும், முதல் இடத்தை வகிக்கின்றன. அடுத்ததாக, அதிக நெய், வெண்ணெய், எண்ணெயில் வறுத்த உணவுகள், பிட்சா, பர்கர் போன்றவை. உடல் உழைப்பு அதிகம் இருந்தால் (பழைய விவசாய முறைகள்) இவை பிரச்னை இல்லை. ஆனால், இன்று பலர் உடலை வருத்தாத வேலைகளையே செய்கிறோம். விவசாயத்திற்குக் கூட எந்திரங்கள்தான். அரசு அனைத்திற்கும் மக்களிடையே விழிப்புணச்சியை ஏற்படுத்த வேண்டும்.
 
NSNellai siva
"பெரும்பாலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்தான் அதிகம் பெண்கள் வருகின்றனர்." முன்னெல்லாம் வெள்ளிக்கிழமைகளில் கோயிலில் கூட்டம் அலைமோதும் . என்ன பண்றது ?

"அலுவலகங்களில் பார்ட்டியில் மது அருந்தினால்தான் கெளரவம் என்பதுபோல அவர்கள் மது அருந்தத் தள்ளப்படுகிறார்கள்" . அமெரிக்கா வந்து 23 வருடங்கள் ஆகிவிட்டன. அலுவலக பார்ட்டியில் (எங்குமே) இது வரை மது,மாமிசம் , புகை தொட்டதேயில்லை. அலுவலகத்தில் இதனால் மரியாதைதான் அதிகமே தவிர, யாரும் என்னை கவுரவக் குறைவாக நடத்தியதில்லை. ஒழுங்கா வேலையைப் பார்த்தால், தானா மரியாதையும் கவுரவமும் பெருகும். Self esteem இல்லாதவர்கள் தான் மற்ற முகமூடி அணிந்து கவுரவம் தேடுவார்கள்.
 
சிலர் சொல்வர் . 'அமெரிக்காவில் மது இல்லையா?', என்று. அமெரிக்காவின் பிரச்னை மது இல்லை. கொக்கைனும், ஹெராயினும், மாருவானாவும். நாம் மதுவை அழிக்காவிட்டால், நாமும் இன்னும் சில வருடங்களில் போதைபொருள் பரவுவதை தடுக்க உண்ணவிரதம் மேற்கொள்ள நேரிடலாம். போதை நீக்கப்பட்டே ஆக வேண்டும். அடுத்த தலைமுறைக்கு நாம் மதுவையும், போதையையுமா வழங்கப்போகிறோம் ? வெட்கக்கேடு

எனக்குத் தெரிந்த வகையில் 50 சதவீதத்திற்கும் அதிகமான, சிலிக்கன் வேலியில் வேலை பார்க்கும் இந்தியப் பெண்கள் மது அருந்துகிறார்கள். அது அலுவலக சாயங்கால பார்ட்டியாகட்டும், பிறந்த நாள், திருமண விழாவாகட்டும். அவர்களை குற்றம் சொல்ல மாட்டேன். ஆணுக்கு ஒரு நீதி , பெண்ணுக்கு ஒரு நீதி கிடையாது. கற்பு, குடும்பம், மது, செலவழிப்பது ,நல்லது , கேட்டது அனைத்திலும் ஆண் பெண் பேதம் பார்ப்பது நல்லதில்லை. இரு பாலரும் குடியை நிறுத்த வேண்டும். நமக்கு எதிரி குடி, புகை, விபச்சாரம், போர்ன் . அதை முழு வீச்சோடு எதிர்ப்பதை விடுத்து, ஆண் பெண் பேதம் பார்ப்பது, நம்மை நம் குறிக்கோளில் இருந்து விலகி இருக்கச் செய்கிறது.

அடுத்த கட்டுரைக்கு