Published:Updated:

உழைத்து ஊழலற்ற சுதந்திர இந்தியாவை உருவாக்குவோம்!

உழைத்து ஊழலற்ற சுதந்திர இந்தியாவை உருவாக்குவோம்!
உழைத்து ஊழலற்ற சுதந்திர இந்தியாவை உருவாக்குவோம்!

உழைத்து ஊழலற்ற சுதந்திர இந்தியாவை உருவாக்குவோம்!

உழைத்து ஊழலற்ற சுதந்திர இந்தியாவை உருவாக்குவோம்!

காலங்கள் மாறிக்கொண்டே தான் இருக்கிறது. காலங்கள் மாற்றத்தை எதிர்நோக்கியே பீடுநடை போடுகிறது. மாறிட முனைந்த மனிதனிடம் மாறாமல் இருப்பது சுதந்திர உணர்வுகள் மட்டும் தான். ஒரு உயிர் இந்த மண்ணின் கதவுகளை தட்டும் பொழுதே அழுகுரல் எழுப்பி தன் பேச்சு சுதந்திரத்தை அறிவிக்கிறது. கை கால்களை அசைத்து தன் உடல் எழுந்து நடக்க, ஆடிட, ஓடிட முற்படுகிறது. சுதந்திரமாய் சிந்தித்திட ஆசை கொள்கிறது. ஆசைகளின் எல்லைகள் தானே சுதந்திரம். நம் ஆசைகள் நிறைவேறாத பட்சத்தில், நாம் உண்மையிலேயே சுதந்திரமாய் தான் வாழ்கிறோமா??
 
பெரும் விருந்து சாப்பிட வேண்டும் என்று என்னும் ஏழைக்கு கிடைப்பதோ அரை வயிற்று கஞ்சியும் கூலும் தான். தேடலின் தொடர்கதையாய் நாளை ஒரு விடியல் வரும் என்று தினமும் கண்விழிக்கிறான். மீண்டும் கண் உறங்குகிறான்.ஏனோ, பல காரணங்களால் இன்று வரை மனிதன் சுதந்திரத்தை தேடிக்கொண்டே இருக்கிறான். கிடைத்த பாடில்லை.
 
அரசர் காலத்தில் சிலர் நீங்கலாக பலர் மனித இனத்தை வஞ்சித்து, கண்டித்து அடிமைகள் போல் நடத்தினர் என்று வரலாறு நமக்கு சொல்கிறது. அரச காலத்தில் மட்டும் தானா. சங்க காலம் தொடங்கி நேற்று வந்த காலம் வரை அரசியல் அங்கீகாரம் இல்லாமல், அரசியல் குறுக்கீடு இல்லாமல் தன் வாழ்க்கையை தன் எண்ணங்களை கொண்டு எத்தனை பேரால் வாழ முடிகிறது. உண்மையில் இங்கு என்ன நடக்கிறது. பணம் படைத்தவன் அரச குடும்பமாகிறான். என்ன, அரியணை இல்லை, மகுடம் இல்லை, ரதம் இல்லை. ஆனால் இன்றைய உலகின் நவீனங்களை கொண்டாடிட தேவையான பண்ணை வீடும், பென்சு காரும், கொழுத்த பணமும் இருக்கிறது. ஒரு சாராரிடம் மட்டுமே இவை கொட்டி கிடக்கிறது. சுதந்திரம் இவர்களுக்கு மட்டும் தான் வாங்கினோமா என்று எண்ணவும் தோன்றுகிறது.
 
கடவுள் நம்பிக்கை கூட பண பெட்டிகளில் அடங்கி கிடக்கிறது. பொது மக்கள் கூடும் கோவில்களில் கூட பணம் இருந்தால் சிறப்பு தரிசனம் கிடைக்க வழி இருக்கிறது. ஒரு சாமானியனுக்கு பணப் பற்றாகுறையால் அவன் சுதந்திரம் பறிக்க படுகிறது. ஏற்ற தாழ்வுகள் எங்கேயும் எப்போதும் சத்தமே இல்லாமல் எதிரொலிக்கிறது.
 

உழைத்து ஊழலற்ற சுதந்திர இந்தியாவை உருவாக்குவோம்!

ஆயிரம் புரட்சிகள் செய்தாயிற்று. ஆயிரம் தலைவர்கள் வந்து சென்றாயிற்று. என் பாரத நாட்டில் ஊழல்கள் குறைந்த பாடில்லை. பணம் இன்றி பரிசு வாங்க ஏழைக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை. வசதிகள் அவனை இன்னும் சென்றடையவில்லை. யார் இதை தடுப்பது? எதனால் என் சாமானியனுக்கு உரிமைகள் மறுக்கப்படுகிறது?? சுதந்திர இந்தியாவில் ஏன் இத்தனை வேறுபாடு?? கிரிக்கெட்டை மட்டும் கொண்டாடும் இந்திய மனங்கள் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியாத நிலை என் நாட்டில் மட்டும் ஏன் உள்ளது?? இன்னும் எத்தனையோ கேள்விகள் நம்முள் இருந்தாலும் அரசின் தந்திர வலைக்குள் ஐந்தாண்டுக்கு ஒரு முறை மீன்களாய் நம் மக்கள் சிக்கி கொள்கின்றனர்.
 
ஒரு ஒப்பற்ற சுதந்திரம் என்பது, நேர்மையின் வெளிச்சமாக இருந்திட வேண்டும். கண்ணாடி பெட்டிக்குள் உள்ள பொருட்களை போல வெளிப்படையாக தெரிந்திட வேண்டும். நம் சுதந்திரம் இருட்டு பெட்டிக்குள் அடைத்து வைக்க பட்டிருக்கிறது. வெளியில் இருந்து பார்ப்பவருக்கு உள்ளே இருக்கும் உண்மை நிலை தெரியாது. வெள்ளையனிடம் இருந்து நாம் பெற்ற சுதந்திரத்தை சில கொள்ளையர்களிடம் பறிகொடுத்து கொண்டே வருகிறோம். அரசியல் தலைவர்கள் கூச்சமே படமால் நம் கண் முன்னே நம்மை ஏமாற்றுவதை தினமும் பார்த்து, பழகி, சிறிது புன்னகைத்து விட்டு மறந்து விடுகிறோம். பல அரசு ஊழியர்களின் அலட்சியத்திற்கு இந்த அரசியல் மண் புழுக்கள் உரமாக உதவுகிறது.
 
சரி என்ன செய்யலாம்? இந்த ஒரு நாளில் நம் சுதந்திரத்தை பற்றி உரை ஆற்றி விட்டால் நம் நாடு மாறி விடுமா?. இல்லை. இந்த ஒரு நாளை திருநாளாக எண்ணி முதல் படி எடுத்து வைப்போம். அறுபது சதவிகிதம் இளைஞர்களை கொண்ட என் நாட்டில் எங்கே ஊழல் நடக்கிறது என்று ஆராய்ச்சி செய்தால் மீதம் உள்ள நாற்பது சதவிகிதம் கொண்ட மக்களிடம் தான் இருக்க வேண்டும். அதிலும் ஒரு முப்பது சதவிகிதம் ஏதும் அறியா பாமர, நடுத்தர மக்களே. நாட்டின் பத்து சதவிகிதம் நம் தலை எழுத்தை நிர்ணயித்திட நாம் வழி விட்டு கொண்டிருக்கிறோம். இன்னும் எத்தனை காலத்திற்கு.

உழைத்து ஊழலற்ற சுதந்திர இந்தியாவை உருவாக்குவோம்!


 
என் அய்யா கலாம் காட்டிய வழியில் ஒரு இளைஞர் படை சத்தமின்றி சரித்திரம் படைக்க தயார் ஆகி கொண்டு இருக்கிறது. நேர்மையாய் வாழ்ந்திட, உழைப்பை உரமாக்கிட, உண்மையாய் இருந்திட ஒரு புதிய தலைமுறை வளர்ந்து வருகிறது. கார்ப்பரேட் சமூகம் மட்டும் வாழ வழிவகுக்கும் இன்றைய அரசியலை மாற்றி அமைத்திட அரசியலிலும் இளைஞர்கள் கால் பதித்திட வேண்டும். படித்த மேதைகள் அரசாண்டிட வேண்டும். அன்று நம் சுதந்திரம் நம்மை நிச்சயம் வந்தடையும். நாம் கொண்ட ஆசைகள் அன்று நிச்சயம் நிறைவேறும். உலக அரங்கில் இந்தியா வீறு நடை போடும். அந்த நாளை நோக்கி நாமும் பயணிப்போம். உண்மையாய் உழைத்து ஊழலற்ற சுதந்திர இந்தியாவை உருவாக்குவோம்.
 
வந்தே மாதரம்!!
 
- முத்துகுமார் மாணிக்கம்

அடுத்த கட்டுரைக்கு