Published:Updated:

முகநூலே முதலீடு: பொறியியல் மாணவரின் புதிய கோணம்!

முகநூலே முதலீடு: பொறியியல் மாணவரின் புதிய கோணம்!
முகநூலே முதலீடு: பொறியியல் மாணவரின் புதிய கோணம்!

முகநூலே முதலீடு: பொறியியல் மாணவரின் புதிய கோணம்!

முகநூலே முதலீடு: பொறியியல் மாணவரின் புதிய கோணம்!

லகமயமாக்கலுக்குப் பின்னர் நம் தேசத்தின் பிரதான தொழில்களான விவசாயம், நெசவு போன்றவை நலிந்த நிலையில் உள்ளன. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது.

பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் கல்வியின் மீதான நம்பிக்கைக் குறைந்து வருகிறது. தமிழக பொறியியல் கல்லூரிகளில் இந்தாண்டு மாணவர்கள் சேர்க்கை சரிந்து,  91, 473 சீட்டுகள் காலியாக இருக்கிறது என்பது அதிர்ச்சியான தகவல்.

தற்போதைய கல்விமுறை மீதுமட்டுமல்ல, சமூக வலைத்தளங்கள் மீதும் பெற்றோருக்கு ஒருவித அதிருப்தி இருப்பதை உணரமுடிகிறது. ஆனால் பெற்றோர்களால் வெறுக்கப்படும் அந்த வலைத்தளங்கள் மூலமாகவும் சம்பாதிக்கமுடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தின் சிவில் என்ஜினியரிங் மாணவரான பா. ராகுல். இவர் முகநூல் மூலம் மாதம் ஆறாயிரம் ரூபாய் ஈட்டுகிறார் என்பது வியப்பல்லவா?

ராகுலை சந்தித்தோம். "எல்லோரையும் போலத்தான் நானும் முகநூல் கணக்குத் துவங்கினேன்.." என ஆர்வத்துடன் பேசத்துவங்கினார்.

" முதல்ல லைக், ஷேர்.. என முகநூலில் போட ஆரம்பித்தேன். பிறகுதான் தனியாக 'பேஜ்' ஆரம்பிக்கலாம் என்கிற ஐடியா வந்தது. 'டீக்கடை ராஜா', 'தமிழ் ஹிட்ஸ்' என்ற பெயரில் பேஜ் ஆரம்பித்தேன். அதன் மூலம் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பதிவு செய்ய ஆரம்பித்தேன். வேற பேஜிலிருந்து ஷேர் பண்ணும்போது அவர்களுக்கு அந்தக் கிரெடிட்டை கொடுத்திடுவேன்.." என தொழில் தர்மத்தை மறக்காமல் பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், "மீம்ஸ் அப்போதுதான் பிரபலமாகி இருந்தது. 'என்னமா இப்படி பண்றீங்களேம்மா?'  என்ற எங்கள் பேஜ் மூலம் மீம்ஸ் போட ஆரம்பித்தோம். அத்தனையும் எங்கள் சொந்த கிரியேட்டிவிட்டிதான். சிரிக்க வைப்பதுடன் எங்க பேஜ் சிந்திக்கவும் வைத்தது. என் பேஜை இதுவரை ஏழு லட்சம் பேர் லைக் செய்திருக்கிறார்கள் " என்று சொன்னபோது நம்மையும் அறியாமல் 'வாவ்' என்றோம்.

முகநூலே முதலீடு: பொறியியல் மாணவரின் புதிய கோணம்!

ஒரு படத்தின் தயாரிப்பாளர் தனது படத்தை பிரபலமாக்குவதற்காக குறிப்பிட்ட பணத்தை ஒதுக்குவார். இந்த பணம் மூன்று கட்டமாக வழங்கப்படுகிறது. முதலில் ஒரு குறிப்பிட்ட பகுதியை அவர் ஆன்லைன் புரமோட்டர்களுக்கு வழங்குவார். அதாவது தனது படத்தின் நூறு போஸ்டர்களை ஷேர் செய்யவேண்டியது இந்த புரமோட்டார் வேலை. இதற்குத்தான் படத்தயாரிப்பாளர் அவருக்குப் பணம் வழங்குகிறார். இந்த புரமோட்டார் தனக்கு சொந்தமான பேஜ் வைத்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை.

இவர் 15 முதல் 25 லட்சம் லைக் வைத்திருக்கும் பேஜ்களின் நிர்வாகிகளுக்கு தயாரிப்பாளர் தங்களுக்கு தந்த போஸ்டர்களை அனுப்புவார். இது ஆன்லைன் புரமோஷனின் இரண்டாவது கட்டம். மூன்றாவது கட்டமாக 5 முதல் 15 லட்சம் லைக் வைத்திருக்கும் என் போன்றோருக்கு  போஸ்டர்கள் அனுப்புவார். இவ்வாறு படத்தை ஷேர் செய்வதன் மூலம் மாதம் ஆறாயிரம் வரை பெறுகிறேன்.

இதுபோல நாங்க இப்போது வெப்சைட்ஸ், கூகுள் அப்ஸ் புரமோட் பண்றோம். அது மூலமாகவும் சம்பாதிக்கிறோம். இதற்கெல்லாம் கிரியேட்டிவிட்டியும் கொஞ்சம் நேரம் மட்டும்தான் தேவை" என கண்சிமிட்டுகிறார் ராகுல்.

முகநூலே முதலீடு: பொறியியல் மாணவரின் புதிய கோணம்!

தனது கிரியேட்டிவிட்டி திறமையினால்,  தான் சம்பாதிப்பதை ராகுல் என்ன செய்கிறார் என்பதுதான் இன்னும் ஆச்சர்யப்படுத்தும் விஷயம்.

"இதன் மூலம் கிடைக்கும் பணத்தை சிறுதுளி என்ற தொண்டு நிறுவனத்துக்குக் கொடுத்து விடுகிறேன். அந்த நிறுவனமானது மாணவர்களின் படிப்பு செலவுக்கு உதவி செய்து வருகிறது. இது ஆத்ம திருப்தி அளிக்கிறது" என்கிற ராகுலின் முகத்தில் மென்மையான புன்னகை படர்கிறது.

நேரத்தையும், உழைப்பையும் பொழுதுபோக்கு விஷயங்களுக்காகவே எப்போதும் செலவிட்டு மற்றவர்களின் கமெண்ட்களுக்கு உள்ளாகும் இன்றைய பல இளைஞர்களுக்கு மத்தியில், ராகுல் லைக்குக்கு உரியவர்தான்.

முகநூலே முதலீடு: பொறியியல் மாணவரின் புதிய கோணம்!

- ச.ஸ்ரீராம் ரங்கநாத்

அடுத்த கட்டுரைக்கு