Published:Updated:

மலாலாவை மகிழ்ச்சியடைய வைத்த மதிப்பெண்!

மலாலாவை மகிழ்ச்சியடைய வைத்த மதிப்பெண்!
மலாலாவை மகிழ்ச்சியடைய வைத்த மதிப்பெண்!

மலாலாவை மகிழ்ச்சியடைய வைத்த மதிப்பெண்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மலாலாவை மகிழ்ச்சியடைய வைத்த மதிப்பெண்!

ல்விக்காக குரல் கொடுத்த தலைவர்கள் பலரும் பள்ளி, கல்லூரி வயதை தாண்டியவர்களே. ஆனால் பாகிஸ்தானை சார்ந்த மலாலா யூசுப்சாய், தன் 18 வயதிற்குள் இந்த சாதனையை செய்திருக்கிறார்.  கல்வி உரிமைகளுக்காக போராடி, தாலிபானால் சுடப்பட்டு, அதிர்ஷ்ட வசமாக உயிர்பிழைத்தவர் இவர்.

பெரும் அபாயத்திலிருந்து மீண்ட அவர், அத்துடன் முடங்கிவிடாமல் முன்னைவிடவும் உலக அளவில் தனது கல்வி கொள்கைகளை எடுத்து சென்று அமைதிக்கான மிக உயரிய நோபல் பரிசையும் பெற்று உள்ளார். இத்தனை சாதனைக்கு சொந்தக்காரரான இவரின்  வயது 18.

லண்டனில் உள்ள  பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் உயர்நிலை பள்ளியில் பயின்று வருகிறார் மலாலா. தற்போது அவரது பள்ளி இறுதித்தேர்வுகளின் முடிவுகள் வெளி வந்திருக்கிறது.

இதில் கணிதம், உயிரியல், வேதியியல், இயற்பியல் மற்றும் மத ஆய்வுகள் பாடங்களில் சிறந்த மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார் மலாலா. மேலும் வரலாறு, புவியியல், ஆங்கில இலக்கியம் மற்றும் ஆங்கில மொழியில் அதற்கு அடுத்தபடியான மதிப்பெண்களை பெற்றுள்ளார். மகளின் தேர்வு முடிவுகளால் தானும், தன் மனைவியும் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதாக மலாலாவின் தந்தை தெரிவித்தார்.

தனது மகிழ்ச்சியை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பகிர்ந்துகொண்டுள்ளார்.

மலாலாவை மகிழ்ச்சியடைய வைத்த மதிப்பெண்!

“ஒரு குழந்தை, ஒரு ஆசிரியர், ஒரு பேனா மற்றும் ஒரு புத்தகம் இருந்தால் உலகையே மாற்றலாம் “ என மலாலா சென்ற வருடம் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலாலாவை மகிழ்ச்சியடைய வைத்த மதிப்பெண்!

- எம். கிருத்திகா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு