அ.உமர், கடையநல்லூர்.

சில்லறைக்கு 'Change’ என்ற ஆங்கில வார்த்தை எப்படிப் பொருந்துகிறது?

லத்தீனில் Cambire என்றால், 'பண்ட மாற்றம்’ என்று அர்த்தம். ஒரு காலத்தில், இத்தாலியில் வங்கிகளுக்கு வெளியே CAMBIO என்ற பெயர்ப் பலகையுடன் சில்லறை மாற்றும் கடைகள் இருந்தன. அது பழைய பிரெஞ்சு மொழியில் changier என்று மாறியது. பிறகு, ஆங்கிலத்தில் Change! எல்லா வார்த்தைகளுமே ஆச்சர்யமாக மாற்றம் (Change!) ஆனவைதான்!

மல்லிகை மன்னன், மதுரை-17.

'தன்னைவிட வயதில் மூத்த பெண்ணைத் திருமணம் செய்யக் கூடாது’ என்கிறார்கள். மகாத்மா காந்தி, சச்சின் போன்றோர் வாழ்க்கை சந்தோஷம் நிரம்பியதுதானே?

சந்தோஷத்துக்கும் வயதில் மூத்த பெண்ணை மணந்துகொள்வதற்கும் சம்பந்தம் இல்லை. செக்ஸ்கூட இதில் பிரச்னை இல்லை. அன்பும் காதலும் போதும். பின் ஏன் இப்படி வயசு வித்தியாசம் வைத்தார்கள் என்றால், ஆணுக்கு 80 வயது வரைகூட குழந்தை தரக்கூடிய ஆண்மை நீடிக்கிறது. பெண்ணுக்கு 'மெனோ பாஸ்’ 40 வயது துவக்கத்திலேயே வந்துவிடலாம். அதாவது, அவளால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. இது ஒன்றுதான் காரணம். மற்றபடி 30 வயது கணவனும் 50 வயது மனைவியும் மகிழ்ச்சியாக முழுமையாக காதலோடு செக்ஸ் அனுபவிக்க முடியும்!

கோமளா ஈஸ்வர், சென்னை-21.

இடியட் என்றால் என்ன அர்த்தம்? அதாவது, அந்த வார்த்தை எப்படி வந்தது?

பண்டைய கிரேக்கத்தில் இடியட் என்றால், அரசியலில் ஈடுபடாத, எந்தப் பதவியும் வகிக்காத சாமானியர் என்று பொருள். இப்போதும் அரசியல்வாதிகள் நம்மை எல்லாம் அப்படித்தான் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்!

வெ.கா., கடையநல்லூர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் 14 கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டு இருக்கிறாரே... இது கொடுமை இல்லையா?

இதெல்லாம் ஒன்றுமே இல்லை! வடக்கே ஒரு எம்.பி மீது 35 கொலை, கொள்ளை, கடத்தல் வழக்குகள் உள்ளன. எட்டு மாதங்களாக ஆசாமி தலைமறைவாக வேறு இருந்தார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது அலகாபாத்தில் இருந்து. ஒரு காலத்தில் அந்தத் தொகுதியில் இருந்து தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்றவர் யார் தெரியுமா? ஐவஹர்லால் நேரு!

எந்த அளவுக்கு இப்போது சீரழிவு நிகழ்ந்து இருக்கிறது என்று சற்று நினைத்துப் பாருங்கள்!

விஜயலட்சுமி, பொழிச்சலூர்.

எறும்பு நம்மைக் கடிக்கும்போது என்ன நினைத்துக்கொள்ளும்?

'இதை வாயினால் கவ்வி, நம் வீட்டுக்கு இழுத்துக் கொண்டு போக முடியுமா? பிறகு, மெள்ள சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று பார்த்தால்... அட, என்ன இது... நகர மாட்டேன் என்கிறதே. ஐயோ, பிரமாண்டமாக, நீளமாக ஏதோ இரண்டு நம்மை நோக்கி வருகிறதே (உங்க விரல்கள்!)... செத்தேன் நான்!’ (அடுத்த ஜென்மத்தில் டாக்டராகப் பிறந்து உங்களுக்கு ஊசி போட நெருங்கி வருபவர்... போன ஜென்மத்தில் வந்த அதே எறும்புதான்!)

மா.பாண்டியன், திருச்சி-5

ஓட்டுப் பதிவு அதிகமாகி இருப்பது ஆரோக்கியமான விஷயம்தானே? ஆனால், இது போதுமா?!

மகிழ்ச்சியானது என்றாலும், போதாதுதான். வாக்குப் பதிவு 90 சதவிகிதத்தைத் தாண்ட வேண்டும். பலர் வாக்குப் போடாததற்குக் காரணம், விரக்தி மனப்பான்மைதான். அவர்கள் மட்டும் இந்த ஜனநாயக வாக்காளர் வரிசைக்குள் வந்துவிட்டால், நாம் எல்லோரும் கனவு காணும் நாடாளுமன்றமும் சட்ட மன்றமும் கிடைத்துவிடும். அரசியல் கட்சிகள் எவ்வளவு பணத்தை வாரி வழங்கினாலும், பாச்சா பலிக்காது. 'மக்கள் பிரதிநிதி’யாக ஆக நினைக்கும் ரௌடிகள் தூக்கி எறியப்படுவார்கள்!

திருப்பூர் வைகோ,சிக்கிரசம்பாளையம்.

மதுரை பொற்றாமரைக் குளத்தில் சங்கப் பலகை இருந்தது பொய்யா, மெய்யா?

மெய்தான்! அது விஞ்ஞானத்தை மிஞ்சிய மேஜிக் பலகையாக இருந்து இருக்க முடியாது! சான்றோர்களும் பெரும்புலவர்களும் ஒன்று கூடி (கமிட்டி!) கவிஞர்களின் படைப்புகளைத் தேர்ந்தெடுத்து இருப்பார்கள். கோயில் குளம் புனிதமானது என்பதால், அதன் படிக்கட்டுகளில் அந்த சம்பிரதாயமும் தேர்வும் நிகழ்ந்து இருக்கும்!

கே.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு-24.

அரசியல் சட்ட அமைப்பில் கூறப்பட்டுள்ள சம வாய்ப்பு, சம நீதி இந்தியாவில் இன்று அனைவருக்கும் கிடைக்கிறதா?

சரியாப்போச்சு! அரசியல் தலைவர்களின் வாரிசுகளுக்குள்ளேயே 'சம வாய்ப்பு, சம நீதி’ கிடைக்கவில்லையே என்கிற கடுப்பு நிலவுகிற நிலைமையில், நமக்கெல்லாம் சம நீதியாவது,

வாய்ப்பாவது?! இதெல்லாம் கிடைத்து இருந்தால், இந்தியாவில் 40 சதவிகிதம் பேர் பட்டினியிலும் இன்னுமொரு 40 சதவிகிதம் பேர் வறுமையிலும் தவித்துக்கொண்டு இருப்பார்களா?!

அ.உமர், கடையநல்லூர்.

எம்.எல்.ஏ. Vs எம்.பி கிரிக்கெட் போட்டி வைத்தால், எப்படி இருக்கும்?

எம்.எல்.ஏ-வைவிட எம்.பி-க்கு வசதிகள் அதிகம்! மொத்தமாக, எம்.எல்.ஏ. டீமை விலை பேசி, பணம் கொடுத்து 'மேட்ச் ஃபிக்ஸிங்’ செய்து... எம்.பி-க்கள் டீம் சுலபமாக ஜெயித்துவிடும்!