Published:Updated:

டீன் கொஸ்டீன்

மொஃபசல் பஸ்... மொபைல் ஸ்பீக்கர் தட்டிக் கேட்டால் தப்பா?

டீன் கொஸ்டீன்

மொஃபசல் பஸ்... மொபைல் ஸ்பீக்கர் தட்டிக் கேட்டால் தப்பா?

Published:Updated:
##~##

சேகர், கும்பகோணம்.

 ''எங்கள் நண்பர்கள் குழு மூலம் பிரத்யேகமாக ஒரு எஃப்.எம். ரேடியோ துவக்கி நடத்த வேண்டும் என்று ஆசை. அது சாத்தியமா? வழிமுறை, நடைமுறைகள் என்ன?''  

ஜெ.கமலநாதன், நிலைய இயக்குநர், அகில இந்திய வானொலி, சென்னை.

''பண்பலை வானொலிகளில், கமர்ஷியல், கம்யூனிட்டி என இரண்டு வகை உண்டு. கல்வி நிறுவனங்கள், தங்கள் மாணவர்களுக்காக ஒரு கி.மீ சுற்றளவுக்குள் மட்டுமே ஒலிபரப்பாகும் வகையில் நடத்தும் பண்பலைகள் கம்யூனிட்டி வகையில் அடங்கும். இவற்றின் ஒலிபரப்பு விஸ்தீரணம் சுமார் 80 கி.மீ. மத்தியத் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம், நாட்டின் முக்கியமான 180 நகரங்களில், சில ஆண்டுகளுக்கு ஒரு முறை நாளிதழ்களில், எஃப்.எம் ரேடியோ துவக்க விளம்பர அறிவிப்பு வெளியிடும். அதில், ஏதேனும் ஒரு நகரத்தில் மட்டுமே எஃப்.எம். ரேடியோ துவக்க நீங்கள்

டீன் கொஸ்டீன்

விண்ணப்பிக்கலாம். சான்றிதழ்களைச் சமர்ப்பிக்கும்போதே, சேனலின் பெயரையும் குறிப்பிட வேண்டும். பரிசீலனையில் தேர்வாகும் விண்ணப்பதாரர்களை ஏலத்துக்கு அழைப்பார்கள். ஏலத்தில் வெற்றிபெற்றால், சேனல் உரிமை உங்கள் வசமாகும். உங்கள் சேனலின் ஃப்ரீக்குவன்ஸியை (அலைவரிசை எண்) மத்தியத் தகவல் ஒலிபரப்புத் துறை நிர்ணயிக்கும். நிகழ்ச்சிகளை ஒலிபரப்பத் தேவைப்படும் டிரான்ஸ்மிட்டரைச் சொந்தமாகவும் நிறுவலாம். அல்லது ஆல் இந்தியா ரேடியோவின் டிரான்ஸ்மிட்டரை வாடகைக்குப் பயன்படுத்தலாம். முக்கியமான ஒரு விஷயம்... எஃப்.எம். சேனலில் செய்தி வாசிக்கவோ, விழா நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கவோ கூடாது!''

முருகன், தஞ்சாவூர்.

''நான் அரசாங்கப் பணியில் இருக்கிறேன். எனக்கு பி.ஹெச்டி., பண்ண வேண்டும் என்று விருப்பம். ஆனால், என்னால் பகுதி நேரமாக மட்டுமே படிக்க முடியும். பின்னாளில் நான் விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்தால், பகுதி நேரப் படிப்பு காரணமாக என் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறதா?''

ஜெயபிரகாஷ் காந்தி, கல்வியாளர்.

''கவலை வேண்டாம். பகுதி நேர பி.ஹெச்டி., படிப்புக்கும் விண்ணப்பப் பரிசீலனைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. தாராளமாக நீங்கள் விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் நீங்கள் பி.ஹெச்டி., ஆய்வு மேற்கொள்வதற்கான வசதிகள் அனைத்தும் உள்ளன. நம்பிக்கையுடன் விண்ணப்பியுங்கள். பி.ஹெச்டி., டாக்டரேட் பெற வாழ்த்துகள்!''

தமிழ்ச்செல்வி, முதுகுளத்தூர்.

''வெயில் உஷ்ணம் உடலைப் பாதிக்காமல் இருக்க, என் பாட்டி என்னைத் தினமும் இரவு நீராகாரம் குடிக்கச் சொல்லி வற்புறுத்துகிறார். ஆனால், நானோ உடல் எடை கூடிவிடுமோ என்ற பயத்தில் அதைக் குடிப்பது இல்லை. நீராகாரம் குடிப்பதால் உடல் எடை கூடுமா, உஷ்ணம் குறையுமா?''

பூங்கோதை, டயட்டீஷியன்.

''உங்கள் இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதில் 'ஆம்’! நீராகாரத்தில் ஸ்டார்ச் அதிகம் இருப்பதால், தினமும் குடித்தால் அது உடலைப் பூரிக்கச்செய்து எடையை அதிகரிக்கும். எடை கூடவே செய்யும். ஆனால், வெயில் காலத்தில் நீராகாரத்தைப்போல உஷ்ணம் தணித்து உடலைக் குளிர்விக்கும் திரவம் வேறு எதுவும் இல்லை. உடல் எடை அதிகரிக்கும் என்ற பயம் இல்லாமல், உடற்பயிற்சி மூலம் எடையைக் கட்டுக்குள் வைத்திருங்கள். உடலையும் குளிர்ச்சியாக வைத்திருங்கள்!''  

ரமேஷ், திருவொற்றியூர்.

டீன் கொஸ்டீன்

''உடல் நலம் இல்லாத என் அம்மாவோடு பேருந்தில் பயணித்தேன். எனது பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவர், பேருந்து கிளம்பியது முதலே அவரது செல்போனின் லவுட் ஸ்பீக்கரில் பாடல்களைச் சத்தமாக அலறவிட்டார். அதிலும், டப்பாங்குத்துப் பாடல்கள். ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கே காது கூசும் அளவுக்கான இரைச்சல். என் அம்மாவால் அந்த இரைச்சலைப் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. அவரிடம் வேண்டிக் கேட்டும், பாடலின் ஒலி அளவைக்கூடக் குறைக்க முன் வரவில்லை. 'நான் ஹெட்போன் எடுத்து வரவில்லை. இப்படித்தான் கேட்பேன். அது என் இஷ்டம்!’ என்று அடம்பிடித்தார். அந்தப் பயணம் எங்களுக்கு நாராசமாக அமைந்தது. பேருந்தும் பொது இடம்தானே... அங்கு இப்படி மற்றவர்களை இம்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க என்ன வழி?''

சரவணன், வழக்கறிஞர்.

''நீங்கள் வேண்டிக் கேட்டுக்கொண்ட பிறகும், அந்த மனிதர் செல்போனில் பாடலின் ஒலியைக் குறைக்கவில்லை என்றால், நீங்கள் எதிர்ப்படும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். பொது இடத்தில் கூம்பு வடிவ ஸ்பீக்கர்களைப் பயன்படுத்தக் கூடாது, குறிப்பிட்ட அளவு டெசிபலுக்குள்தான் மற்ற ஸ்பீக்கர்களிலும் ஒலிபரப்பு மேற்கொள்ள வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. இந்த விதிகளுக்குள் மொபைல் போன் அடங்காது. ஆனால், பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்தது, பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்டது போன்ற காரணங்களுக்காக செக்ஷன் 290-ன் கீழ் உங்கள் புகாரினைப் பதிவு செய்ய முடியும். எப்படி மது அருந்திவிட்டு பேருந்தில் அநாகரிகமாக நடந்துகொள்பவரை நடுவழியில் இறக்கிவிட, நடத்துநருக்கு உரிமை உண்டோ, அதுபோல இப்படிப் பிற பயணிகளுக்குத் தொந்தரவு கொடுப்பவர்களையும் இறக்கிவிட உரிமை இருக்கிறது!''

செந்தில்குமார், திருவாரூர்

''இந்த வெயில் காலத்தில் அம்மை நோய் தாக்காமல் இருக்க தாழம்பூ எசன்ஸ் குடிக்கப் பரிந்துரைக்கிறார்கள் என் நண்பர்கள் சிலர். தாழம்பூ எசன்ஸ் அம்மை நோய் வராமல் காக்குமா? அப்படியானால் ஏதேனும் பக்க விளைவுகள் இருக்குமா?''

கணேசன், பொதுநல மருத்துவர்.

''தாழம்பூ எசன்ஸ் குடித்தால், அம்மை நோய் வராது என்று அறிவியல்பூர்வ நிரூபணம் எதுவும் இல்லை. 'பாட்டி வைத்தியம்’போல அது ஒரு வகை நம்பிக்கை. அவ்வளவுதான்!''