Published:Updated:

(கு)லுங்கி, அழுது கேட்கிறேன்- 'என்னை ஏன் கைவிட்டீர்?'

(கு)லுங்கி, அழுது கேட்கிறேன்- 'என்னை ஏன் கைவிட்டீர்?'

(கு)லுங்கி, அழுது கேட்கிறேன்- 'என்னை ஏன் கைவிட்டீர்?'

(கு)லுங்கி, அழுது கேட்கிறேன்- 'என்னை ஏன் கைவிட்டீர்?'

(கு)லுங்கி, அழுது கேட்கிறேன்- 'என்னை ஏன் கைவிட்டீர்?'

Published:Updated:
(கு)லுங்கி, அழுது கேட்கிறேன்- 'என்னை ஏன் கைவிட்டீர்?'
(கு)லுங்கி, அழுது கேட்கிறேன்- 'என்னை ஏன் கைவிட்டீர்?'

ளைய தலைமுறையினரே! இது நியாயம்தானா?  இப்போதெல்லாம் நீங்கள் யாரும் என்னை சட்டைசெய்வதில்லையே என கைலி கண்ணீரோடு கேட்கிறது. ( நீ கைலி ஆயிற்றே உன்னை எப்படி சட்டை செய்ய முடியும் என்று பகடி பேச வேண்டாம்)  நடுத்தர வயதினர் மட்டும்தான் எனக்கு தங்கள் இடையில் இடை ஒதுக்கீடு மன்னிக்கவும் இட ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். அரை டிராயர் காலம் முடிந்தபின் என் ஆட்சி தொடங்கியது பழங்கதை. இப்போதோ நீங்கள் அரை டிராயர் காலம் முடிந்ததும், முக்கால் டிராயரை பயன்படுத்த முடிவு செய்துவிட்டீர்களே. வேட்டி கட்டும் முன் என்னை கட்டித்தானே பழகி இருந்தீர்கள். ஆடையாகத்தான்  எனக்கு அவ்வளவாக பெரிய மதிப்பு கொடுக்கவில்லை என்றாலும், என்னை ஒதுக்காமல் இருந்தீர்கள். ஆனால், சமீப காலங்களில் நான் உங்களால் தீண்டப் படாதவனாகி விட்டேன்.

திரைப்படத்தில் கூட ரவுடிகளுக்குதான் என்னை அணிவித்து பயமுறுத்தினீர்கள். ஆனால், இப்போதெல்லாம் திரையில் வரும் ரவுடிகள்  கூட பெர்முடாஸ் அணிந்து அதன் மேலே லுங்கியை சும்மாதானே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஷாருக்கான் கூட லுங்கி டான்ஸ் ஆடினாலும், டான்ஸ் பிரபலமாச்சே தவிர  லுங்கி பிரபலமாகவில்லையே!

என்னால் எவ்வளோ நன்மை அடைந்தீர்கள் என்பதை மறந்து விட்டீர்களா? என்னை எப்படி எல்லாம் பயன்படுத்தி இருப்பீர்கள். உடலின் ஒரு பாதியை மறைக்கும் ஆடையாக மட்டுமா இருந்தேன்? போர்வை இல்லாவிட்டாலும் நடு இரவில் தூங்கும்போது அப்படியே போர்த்திக் கொண்டு உறங்குவதற்கும் அல்லவா உதவினேன். வேட்டி கட்டியவர்களுக்கு சிலநேரங்களில் வேட்டி அவிழ்ந்து விடும் அபாயம் உண்டு. ஆனால், என்றாவது திடீரென அவிழ்ந்து அவதிக்குள்ளாக்கி இருக்கிறேனா? வேட்டி போல என்மீது படிந்த அழுக்கை காட்டிக் கொடுத்திருக்கிறேனா? வேட்டியில் சட்டென்று வழித்து முகம் துடைக்க முடியுமா?

அம்மாவின் சேலையைப் போல எனக்கும் குழந்தைகளுக்கு தூளியாகும் வாய்ப்பை நீங்கள்தானே அளித்தீர்கள்.  எந்த இடத்தில் கிழித்திருந்தாலும் கிழிசலை காட்டாமல் மறைத்துக் கொள்ளும் வசதி என்னைத் தவிர வேறு எந்த உடையில் உண்டு?  அப்படியே முழுவதும் கிழிந்து போனாலும் என்னை நீங்கள் விடவில்லையே! தலையணை உறையாக்கி தைத்துப் போட்டதை ஏன் மறந்து விட்டீர்கள்? சமையலறையின் கைப்பிடித் துணியாகவும் அல்லவா நான் இருந்திருக்கிறேன். மிச்சம் மீதியை உங்கள் இருசக்கர வாகனங்களை துடைக்க பயன்படுத்தியது இல்லையா? உண்மையை சொல்லுங்கள். உங்கள் வீட்டு மிதியடியாகவும் வாழ்ந்த பின்தானே  என்னை வழி அனுப்பி வைத்தீர்கள்?  இப்போது உங்களுக்கு  என்ன ஆயிற்று. என் மீது ஏனிந்தக் கோபம்.

(கு)லுங்கி, அழுது கேட்கிறேன்- 'என்னை ஏன் கைவிட்டீர்?'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆண்களுக்கு மட்டுமா நான்? அரிதாக சில இடங்களில் பெண்களும் என்னை அணிந்திருக்கிறார்களே.

எனக்கு வில்லனாய் வந்து வாய்த்த பெர்முடாஸில் அப்படி என்னதான் இருக்கிறது? கோகோ கோலா வந்ததும், கோலி சோடாவை மறந்ததுபோல ஆகி விட்டது என் நிலை. லுங்கி கட்டினாலே ஒரு மாதிரியாகப் பார்க்கும் பெரிசுகள் கூட இப்போது பெர்முடாஸில் அலைகிறார்களே. பாத்ரூம் போவதற்கும், என்னை அணிந்தால்தானே வசதியாக இருக்கும். எந்த விதத்தில் நான் குறைந்து போனேன்?

வேட்டியை பிரபலமாக்க வேட்டி திருவிழா நடத்தினாரே சகாயம்  ஐ.ஏ.எஸ். அவர் கூட நான் இருப்பதை மறந்து விட்டாரே! இல்லாவிட்டால் லுங்கித் திருவிழாவும் சேர்ந்தே அல்லவா நடத்தி இருக்க வேண்டும். வேட்டிக்கு அட்டகாசமாக விளம்பரம் கொடுக்கும் நம்ம பிரபலங்கள், என்றாவாது கைலிக்கு  விளம்பரம் தர முன் வந்திருக்கிறார்களா? பொங்கலுக்கு இலவச வேட்டி வழங்குவது போல் இலவச   கைலி  வழங்கினால் எத்தனை கைத்தறி நெசவாளர்கள் வாழ்த்துவார்கள்.

கோயில்களுக்கு செல்ல அனுமதி இல்லை என்றாலும்  வீட்டுக்குள்ளாவது இருந்தேனே! என்ற நிறைவுடன்தான் இருந்தேன். ஆனால் இப்போது அது கூட இல்லையே!

(கு)லுங்கி, அழுது கேட்கிறேன்- 'என்னை ஏன் கைவிட்டீர்?'

முன்பெல்லாம் பிளாட்பாரத்தில் கடைவிரித்து குறைந்த விலையில் லுங்கி விற்றுக் கொண்டிருப்பார்கள் இப்போது அவர்களும் பெர்முடாசுக்கு மாறி விட்டார்கள். வேட்டிக்காக குரல் கொடுத்த முகநூல், டுவிட்டர் புரட்சியாளர்கள் எனக்கும் கொஞ்சம் குரல் கொடுப்பார்களா?

இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், பர்மா போன்ற பக்கத்து நாடுகளிலும் என்னை அணிந்து கிழித்தார்கள். என்னை சிலர் முஸ்லீம்களின் ஆடை என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய கால நிலைக்கு நானே பொருத்தமானவன். ஆனால், ஏனோ பலரும் என்னை அநாகரீகமானவர்களின் ஆடையாகக் கருதி கோவில்கள், ஹோட்டல்கள், கிளப்புகள் என்று பல இடங்களிலும் அனுமதி மறுக்கிறார்கள். வேட்டி கட்டிய நீதிபதியையே திருப்பி அனுப்பியவர்கள் ஆயிற்றே நம்மவர்கள். கைலி அவர்களுக்கு கேலிப் பொருளாகி விட்டதோ? இறுக்கமான மேலை தேசத்து உடைகளுக்கு அடிமையாகி விட்டவர்களிடம் உருக்கமாக பேசி என்ன பயன்?

பங்களாதேஷில் பரிதரா என்ற இடத்தில் லுங்கி அணிந்து வர தடைவிதித்தார்கள். அதை எதிர்த்து போராட்டமே நடத்தப்பட்டது. உயர் நீதி மன்றம் தலையிட வேண்டிய நிலைக்கு போய் விட்டது. இப்படி படிப்படியாக எனக்கு எதிரான மனநிலையை உருவாக்கி வெற்றியும் கண்டு விட்டீர்களே. இதானல் நீங்கள் அடைந்த பயன்தான் என்ன?

(கு)லுங்கி, அழுது கேட்கிறேன்- 'என்னை ஏன் கைவிட்டீர்?'

கட்டம் போட்டு காட்சி அளித்த  என்னை திட்டம் போட்டு ஒதுக்கி விட்டீர்களே!

கவனிப்பு குறைந்து கிடக்கும் நான் (கு)லுங்கி, அழுது கேட்கிறேன், 'என்னை ஏன் கைவிட்டீர்?'

-டி.என்.முரளிதரன் (சென்னை)