Published:Updated:

''நான் பெரியாரின் வாரிசு!''

போஸ்டர் ஒட்டும் போராட்டக்காரர்

''நான் பெரியாரின் வாரிசு!''

போஸ்டர் ஒட்டும் போராட்டக்காரர்

Published:Updated:
##~##

கோகுல்நாத் காந்தி - கொள்கையின் குறியீடு! பெரியாரின் பெயரால் பிழைப்பு நடத்துபவர்களும் அரசியல் நடத்துபவர்களும்தான் அதிகம். ஆனால், புதுவை கோகுல்நாத் காந்திக்குச் சுவரொட்டிகள் ஒட்டுவதுதான் தொழிலே. ஆனால், போஸ்டர் ஒட்டிச் சம்பாதித்த காசில் பெரியார் கொள்கைகளைப் பரப்பு வதற்காகப் போராடி வருபவர். மனைவி நடத்தும் சிறிய மளிகைக் கடை வருமானம் மூலம் 'மிகத் தெளிவு’ என்னும் சிற்றிதழையும் நடத்தி வருகிறார்.

''நான் பெரியாரின் வாரிசு!''

''அப்பா, நூலக உதவியாளராக இருந்ததால் 14 வயதில் எனக்கு வாசிப்பு அறிமுகம் ஆனது. புத்தகங்கள் அறிமுகம் ஆன கையோடு பெரியாரும் அறிமுகம் ஆகி விட்டார். சாதி ஒழிப்பு, இன உணர்வு, பகுத்தறிவு, பெண்ணுரிமை, பொதுவுடைமை என பெரியாரின் சிந்தனைகள் மானுட விடுதலைக்கான அத்தனை கூறு களையும் அறிமுகப்படுத்தின. அரசியல் அறிந்த வயதில் இருந்தே நான் பெரியாரிஸ்ட். போஸ்டர் ஒட்டும் தொழி லில் எனக்கு 22 வருட அனுபவம். என் நண்பர் ஒருவர் போஸ்டர் ஒட்டுபவர். ஒருநாள் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, அன்று அவருக்குப் பதிலாக அந்த வேலையைச் செய்தேன். அன்று முதல் சுவரொட்டிகளைத் தோளிலும் பெரியாரின் சிந்தனைகளை மூளையிலும் சுமக்கத் தொடங்கினேன்!'' என்று சொல்லும் கோகுல்நாத் காந்திதான் புதுவையில் பெரும்பாலான நிகழ்ச்சிகள், விளம்பரங்களுக்குச் சுவரொட்டிகள் ஒட்டுகிறார்.

''உங்கள் கொள்கைகளுக்குச் சம்பந்தம் இல்லாத போஸ்டர்களை ஒட்டும்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?'' என்று கேட்டால், சிரிக்கிறார். ''கொள்கை சார¢ந¢தவரிடம்தான் வேலை செய¢ய வேண்டும், கொள்கை சார்ந்தவரிடம்தான் பேச வேண்டும் என்றால் ஒட்டுமொத்த ஆயுளிலும் ஆதிகப்ட்சம் 15 பேரோடு மட்டும்தான் பேசவே முடியும். அப்படி இறுக்கமாக இருந்தால் நிறைய மனிதர்களை நாம் இழந்துவிடுவோம். மேலும் சுவரொட்டி ஒட்டுவதைத் தொழிலாகத்தான் பார்க்கிறேன். ஜக்கி வாசுதேவ், அமிட்தானந்தமயி போன்ற ஆன்மிகவாதிகளின் வருகையை அறிவிக்கும் சுவரொட்டிகள் தொடங்கி கோயில் திருவிழாக்கள், கும்பாபிஷேகச் சுவரொட்டிகள் வரை ஒட்டுகிறேன். நான் ஒழுங்காக ஒட்டுவேன் என்ற நம்பிக்கையில் என்னிடம்தான் அந்த வேலையையும் ஒப்படைப்பார்கள். கொள்கை தொடர்பான நிகழ்ச்சிகளின் சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு நான் பணம் வாங்குவது இல்லை. அது மாதிரியான நிகழ்வுகள் எங்கு நடந்தாலும் வலியச் சென்று வேலைகளை இழுத்துஒ போட்டுச் செய்வேன்..

''நான் பெரியாரின் வாரிசு!''

பெரியாரின் சிந்தனைகளை மக்களிடம் கொண்டுசெல்வதற்காக 'மிகத் தெளிவு’ என்னும் இதழை நடத்தி வருகிறேன். இதன் சிறப்பம்சம், 'நாம் கேள்வி - பெரியார் பதில்’ என்னும் பகுதி. வாசகர்களின் கேள்விகளுக்குப் பெரியாரின் சிந்தனைகளைப் பதில்களாக வெளியிடுகிறேன். ஒரு இதழ் நடத்துவது என்பது பிரசவிக்கிற களைப்பையும் வலியையும் தருகிறது. மாதம் 7,000 ரூபாய் செலவாகிறது. மனைவி சிறிய மளிகைக் கடை நடத்தி வருகிறார். அதன் வருமானம், நண்பர்களின்  உதவி ஆகியவற்றின் மூலம்தான் இந்த இதழ் தொடர்ந்து வெளி வருகிறது. விலை 2 ரூபாய்தான் என்பதால் யாரிடமும் கறாராகக் காசு கேட்கவும் முடியாது. கொள்கை சார்ந்த நபர்கள் புதிதாக அறிமுக மானால் நானே அவர்களின் முகவரிக்கு இலவசமாக இதழை அனுப்பிவிடுவதும் உண்டு!'' என்னும் கோகுல்நாத் கருத்தியலைத் தாண்டி களத்திலும் பணிபுரிபவர்.

''மண¢டல¢  பர¤ந¢துரையை அமல்படுத்தக் கோரி போராட்டம், ஈழத¢ தம¤ழர¢களுக்கு ஆதர வான ஆர்ப்பாட்டங்கள், தடா, பொடா, சட¢ டங¢களுக¢கு எத¤ரான போராட¢டங¢கள¢, தடை செய¢யப¢பட¢ட ப¤றகும¢ ச¤ல பண முதலைகளால¢ இங¢கு அமோகமாக விற்பனையான கள¢ள லாட¢டர¤ ச¦ட¢டுக¢களுக¢கு எத¤ரான போராட¢டம¢, மதுக¢ கடைகளுக¢கு எத¤ரான போராட¢டம¢ என்று தொடர்ச்சியாகப் பல போராட்டங்களில் பங்கு பெற்றிருக்கிறேன். 2008-ல¢ புதுச¢சேர¤ அரச¤ன¢ செய¢த¤ மற¢றும¢ வ¤ளம¢பரத¢ துறைய¤ல¢ பணியாற¢ற¤ய குணசேகரன் என்னும் தலித், சாதியின் காரணமாக மோசமாக நடத்தப் பட்டார். அதனால் குடியரசு நாளைத் துக்க நாளாக அறிவித்து போராட்டம் நடத்தினோம்.

''நான் பெரியாரின் வாரிசு!''

காஞ்சி ஜெயேந்திரர் வழக்கு புதுவைக்கு மாற்றப்பட்ட பிறகு நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினோம். அதற்குப் பிறகு ஒருநாள் லாஸ்பேட்டை காவல் நிலையத்துக்கு எதிரில் சுவரொட்டி ஒட்டிக் கொண்டு இருந்தபோது, இரண்டு போலீஸ்காரர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு இருந்த உதவி ஆய்வாளர் பூட்ஸ் காலால் என்னை உதைத்ததோடு, அங்கு இருந்த கரும்புகளால் என்னைத் தாக்கினார். என்னைச் சங்கிலியால் பூட்ட வும் செய்தார்கள். இப்படி பல அடக்குமுறைகளைச் சந்திக்க நேரிடுகிறது. புதிதாக 90 மதுபானக் கடைகளைத் தொடங்க புதுவை அரசு வழங்கிய அனுமதியை எதிர்த்து கிராமம் கிராமமாகப் பிரசாரம் செய்தோம். சாராய வியாபாரிகள் பேரத்துக்கும் மசியாத எங்கள் போராட்டத்தின் விளைவாக அரசு அந்த அனுமதியை ரத்து செய்தது. திராவிடர் கழகம், தமிழ்நாடு திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம் போன்ற பல்வேறு இயக்கங்களில் இயங்கிய நானும் தோழர்களும் இப் போது பெரியார் திராவிடர் விடுதலைக் கழகம் என்ற பெயரில் இயங்குகிறோம். எந்த இயக்கத்தில் இருந்தாலும் எனக்குத் தலைவர் பெரியார். 'கொள்கைகளும் புத்தகங் களும்தான் என் வாரிசு’ என்றார் பெரியார். நான் பெரியாரின் வாரிசு!'' என்கிறார் பெருமிதம் பொங்க கோகுல்நாத் காந்தி!

- ஜெ.முருகன்