Published:Updated:

''எங்களை ஒன்று சேர்த்த ஃபேஸ்புக்!''

''எங்களை ஒன்று சேர்த்த ஃபேஸ்புக்!''

''எங்களை ஒன்று சேர்த்த ஃபேஸ்புக்!''

''எங்களை ஒன்று சேர்த்த ஃபேஸ்புக்!''

Published:Updated:
##~##

25 வருடங்களாக சேமித்துவைத்து இருந்த சந்தோஷம், குதூகலம், உற்சாகத்தை அன்று ஒரே நாளில் கொண்டாடித் தீர்த்துவிடும் வைப் ரேஷன் தகித்தது அந்த அரங்கில்!

 காரைக்குடி அழகப்பா பிரிப்பரேட்டரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 1980-ல் இருந்து 86 வரை மூன்றாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை படித்த மாணவர்களுள் 60 பேரின் அழகப்பா அலுமினாஸ் என்ற 'கெட் டு கெதர்’ நிகழ்வு அது. விழாவைத் தொகுத்து வழங்கிய நாராய ணன் சென்னையில் ஹோமியோபதி மருத்துவர். பலருடைய முகங்களே மறந்து போய் இருந்ததால், ஒவ்வொருவராக மேடைக்கு ஏற்றி அறிமுகப்படுத்திவைத்தார் நாராயணன்.

''எங்களை ஒன்று சேர்த்த ஃபேஸ்புக்!''

''ராமசாமியை நாங்க 'அதிர்ச்சி ராமசாமி’ன்னுதான் சொல்வோம். 'இன்னிக்கு வெள்ளிக்கிழமை’ன்னா கூட 'அப்படியா’ன்னு அதிர்ச்சியா ரியாக்ட் பண்ணுவான். அடுத்து பத்மநாபன் அண்ட் சீதா பத்மநாபன். இவங்க காதலிச்சுக் கல்யாணமே பண்ணிகிட்டாங்க. 'சிறுத்தை’ படத்துல கார்த்தி மகளா வர்ற வாண்டு ரக்ஷனா இவங்க பொண்ணுதான். நெக்ஸ்ட் கௌதம் வாசுதேவ். இவர் 'மின்னலே’ பட டைரக்டர் இல்லை. இவன் ஒரு ஆக்டோபஸ் பால். இவன் எதைச் சொன்னாலும் அது அப்படியே நடந்துரும். கரு நாக்குக்காரன்!'' என்று நாராயணன் நிறுத்த, கௌதம் முகத்தில் பெருமிதப் பூரிப்பு.

''நான் சிவில் இன்ஜினீயரிங் முடிச்சிட்டு சிங்கப்பூர்ல வேலை பண்றேன். உங்களை எல்லாம் பார்க்குறதுக்காகவே அங்கே இருந்து வந்திருக்கேன்!'' என்று 'பாசமலர்’ சிவாஜி எஃபெக்ட் கொடுத்தார் செல்லையா. ''எவ்வளவு பாசம்... அப்போ நம்ம அடுத்த கெட் டு கெதர் சிங்கப்பூர்லயா?'' என்று கூட்டத்தில் இருந்து ஒரு குரல் வர, செல்லையாவின் முகத்தில் ஈயாடவில்லை. அதற்குப் பிறகு அவர் ஒரு வார்த்தை பேசவும் இல்லை!

தாங்கள் படித்த காலத்தில் இருந்த ஆசிரியர்களை மேடையில் ஏற்றி, அவர்களின் பாதம் தொட்டு மரியாதை செய்தது முன்னாள் மாணவர் படை!  

''எங்களை ஒன்று சேர்த்த ஃபேஸ்புக்!''

'' 'பள்ளிக்கூடம்’ படத்துல முன்னாள் மாண வர்கள் தாங்கள் படிச்ச பள்ளியைத் தேடி வர்ற ஸீனைப்  பாக்குறப்பல்லாம், 'நம்மகிட்ட படிச்ச புள்ளைங்க ஒருநாள் இப்படிலாம் வர மாட்டாங்களா’ன்னு ஏக்கமா இருக்கும். இன்னிக்கு அது நடந்திருக்கு. மனசுக்கு நிறைவா இருக்கு!'' என்று நெக்குருகினார் தமிழாசிரியை ஆண்டாள்.

சாய் கிருஷ்ணன், கணேஷ் பாபு, மகாதேவன், எஸ்தர் கவிதா, சீதா ஆகிய ஐவர் குழுதான் இந்தச் சந்திப்பைச் சாத்தியப்படுத்தியவர்கள்.

''எங்களை ஓண்ணு சேர்த்ததுல ஃபேஸ்புக்குக் கும் பெரிய பங்கு இருக்கு. தேங்க்ஸ் டு ஃபேஸ் புக்!'' என்ற எஸ்தர் கவிதாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பிரதிபலிப்பு. ''இது இத்தோடு முடியப் போறது இல்லை. இனி, ஒவ்வொரு வருஷமும் நாங்க சந்திக்கப் போறோம். எல்லாரும் சேர்ந்து, ஓர் அமைப்பு ஆரம்பிச்சு, நற்பணிகள் செய்யப் போறோம்!'' என்று முத்தாய்ப்பு வைத்தார் மகா தேவன்.

நாள் முழுக்க கலகலப்பாக இருந்தவர்கள், மாலையில் பிரியாவிடை கொடுத்து பிரியும்போது,  அனைவர் விழிகளிலும் கண்ணீரின் ஈரம்!

- குள.சண்முகசுந்தரம், படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்

''எங்களை ஒன்று சேர்த்த ஃபேஸ்புக்!''