Published:Updated:

முதன்முதலாக...

முதன்முதலாக...

முதன்முதலாக...

முதன்முதலாக...

Published:Updated:

முதன்முதலாக...

##~##

'முதல்’ என்றால் எப்போதும் ஸ்பெஷல் தானே! 'கன்னி வாக்கு’ப் பதிந்து  வந்த சில  கன்னிகளிடம் நாட்டுக்கு நல்ல செய்தி கேட்டோம்...

 சேலம், சூரமங்கலம் ஏரியாவைச் சேர்ந்த வித்யா அவரது அம்மாவோடு ஓட்டு போட்டு விட்டு வந்தார். ''விலைவாசி உயர்வு, கரன்ட் கட்னு ஏகப்பட்ட பிரச்னைகள். தமிழ் நாட்டின் தலையெழுத்தை நம்ம ஓட்டுதான் தீர்மானிக்கும்னு முடிவு செஞ்சு வாய்ப்புக்காக காத்துட்டே இருந்தேன். இதோ ஓட்டுப் போட்டுட்டேன். இனி பாருங்க தமிழ்நாட்டின் தலையெழுத்து எப்படி மாறப் போகுதுன்னு!'' களுக் என்று சிரிக்கிறார் பெருமையாக!

ழகாபுரத்தைச் சேர்ந்த புவனேஸ்வரியோ அவரது அப்பாவோடு வாக்குச் சாவடிக்கு வந்து இருந்தார். ''கையில மை வைக்கும் போதுதான், 'அடடா... நமக்கு இவ்வளவு வயசாயிடுச்சேன்னு ஞாபகம் வந்தது. பட்டன் அமுக்குறப்போ மனசுக்குள்ள மத்தாப்பு!'' என்று நெகிழ்கிறார்.

முதன்முதலாக...

ரசோதிப்பட்டியைச் சேர்ந்த சந்தியா   கை  மை அழிந்துவிடக் கூடாதே என்ற உஷார் கவனத்துடன் வாக்குச் சாவடியில் இருந்து வெளியே வந்தார். ''இந்தத் தடவை  எப்படியும் ஓட்டுப் போட்டே ஆகணும்னு  வாக்காளர் பட்டியல்ல என் பேரை சேர்க்க ஆறு மாசமா அலைஞ்சு திரிஞ்சு சாதிச்சேன்.  கைல மை வைக்கும்போது என்னையும் அறியாம மனசுக்குள்ள ஒரு சிலிர்ப்பு. இந்த ஒரு துளி மை நாளைய தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகுது. கண்டிப்பா நான் ஓட்டு போட்ட கட்சிதான் ஜெயிக்க போகுது!'' என்று புன்னகை முகம் காட்டுபவர், இறுதி வரை தான் வாக்களித்த கட்சி பற்றி சின்ன க்ளூ கூட அளிக்கவில்லை.  

கோவை பீளமேட்டில் ஒரு பள்ளியில் வாக்களித்துவிட்டு, ஏதோ தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்த உற்சாகத்தில் வந்து கொண்டு இருந்தார் ப்ரியா. ''குழந்தையா இருக்குறப்போ அப்பா, அம்மா கை பிடிச்சுக்கிட்டு எலெக்ஷன் பூத்துக்கு  வந்திருக்கேன். அவங்களுக்கு விரல்ல மை வைக்கிறப்போ 'எனக்கும் வைங்க’ன்னு விரல் நீட்டி கலாட்டா பண்ணியிருக்கேனாம். நேத்து முழுக்க வீட்ல இதையேதான் பேசிட்டு இருந்தாங்க. எனக்கு முதல் ஓட்டுங்குற பரபரப்புல தூக்கமே வரலை. நாம ஓட்டு போடுறப்ப கரன்ட் போயிட்டா என்ன பண்றதுன்னுலாம் கொஞ்சம் உதறலாவும் இருந்தது. ஆனா, நல்லவேளை நல்லபடியா ஓட்டு போட்டுட்டேன். ஃப்ரெண்ட்ஸுக்கு ட்ரீட் வைக்கணும் இப்போ!'' என்று சிட்டெனப் பறந்தார்.    

ண்டிப்புதூரில் நந்தினியைப் பிடித்தோம்.  ''செமஸ்டர் ரிசல்ட் டுக்கு நகம்  கடிச்சுட்டே காத்து இருந்தது மாதிரி, வாக்காளர் கள் பட்டியலில் என் பேர் இருக்கான்னு தெரிஞ்சுக்கவும் காத்துட்டே இருந்தேன்.  காலையிலேயே தலைக்குக் குளிச்சு பொறுப்பா போய் பூத்ல 23-வது ஆளா ஓட்டுப் போட்டுட்டேன்'' என்று   தம்ஸ்-அப் காட்டுகிறார்!

- கே.ராஜாதிருவேங்கடம், எஸ்.ஷக்தி, படங்கள்: க.தனசேகரன், வெ.பாலாஜி

மனித முகம்தான் அழகு!

முதன்முதலாக...

ஓவியர் ஜீவானந்தன். கோவை சித்ரகலா அகாடமியின் முன்னாள் மாணவர், இப்போதைய தலைவர். ருமேனியா ஓவியர் திருவிழாவில், உலகின் தலைசிறந்த 100 ஓவியர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டவர். சினிமா கலை இயக்குநர்களான மணிராஜ், முத்துராஜ், சிட்டிபாபு ஆகியோரின் குரு. பாலிவுட்டில் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருக் கும் ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் அண்ணன்!

''என் தந்தை வேலாயுதம், சினிமாக்களுக்குப் பேனர் கள் வரைந்து கொடுத்த முதல் தலைமுறை. என் குருவும் அவர்தான். ஆதிமூலம், அந்தோணி தாஸ், அல்போன்ஸா ஆகியோரின் வகுப்புகள் என் தூரி கைக்கு இன்னும் வண்ணம் சேர்த்தன. சுவிட்சர் லாந்தில் வீதி நாடகங்களை விளம்பரப்படுத்த கையால் வரையப்பட்ட ஓவியங்களையே பயன்படுத் துகிறார்கள். இதற்காக, அவர்களுக்கு நாடக விளம்பர பேனர்களை வரைந்து அனுப்பிக்கொண்டு இருக்கிறேன். இப்போதும் எப்போதும் எனக்குப் பிடித்தவை மனித முகங்கள்தான். அதில் பொதிந்து இருக்கும் உணர்ச்சிகள் ஆயிரமாயிரம். ஒவ்வொன்றுமே தனித்துவம்!'' என்கிறார்.  

- தி.விஜய்