Published:Updated:

பேயே... மூணாவது லட்டு தின்ன ஆசையா?

##~##

வானி அருகே பூசாரியூர்... பேய் ஓட்டுவது, பில்லி, சூனியம் வைப்பது, எதிராளியைப் பகை தீர்ப்பது என டெரர் கிராமம்! தமிழகம் முழுக்க வெள்ளிக்கிழமை மங்களகரமாக விடிந்தால், இங்கு மட்டும் ரத்தக் களரி யாகப் புலரும். ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் இங்கு உள்ள செம்முனீஸ் வரர் கோயிலில் பேய் ஓட்டும் விழா!

கொஞ்சம் நடுக்கத்துடன் ஒரு வெள்ளிக் கிழமை அங்கு விசிட் அடித்தபோது, ஆக்ரோஷமாக ஆடிக் கொண்டு இருந்தார் ஓர் அம்மணி.  ''கொள்ளிவாய்ப் பிசாசுக்கே கொள்ளி வெச்சவன் நான். யாருடா நீ? சொல்லிடு...'' என்று கிடுகிடுக்க வைத்துக்கொண்டு இருந்தது பூசாரியின் குரல். தொடர்ந்து எருக்கஞ்செடியை விளாறுவதுபோல வீச, பேய் (!?) பேசத் தொடங்கியது. ''என் பேர் மணி. சொந்த ஊரு குமாரபாளையம். ஆறு மாசத்துக்கு முன்னாடி என் கிட்னி யைத் திருடிட்டாங்க. அதுல செத்துப் போயிட்டேன். என் பாடையைத் திருப்புன இடத்துல நின்னுட்டு இருந்தேன். இந்தப் பொண்ணு மத்யானம் 12 மணிக்கு அந்த இடத்துக்கு லட்டு தின்னுட்டே வந்தா. எனக்கு லட்டு பிடிக்குங்கிறதால இந்தப் பொண்ணைப் பிடிச்சுக்கிட்டேன். எனக்கு லட்டு வாங்கிக் கொடுத்தா இப்பவே இவளைவிட்டுப் போயிடுறேன்'' என்று கெஞ்சியது மணி பேய்!

பேயே... மூணாவது லட்டு தின்ன ஆசையா?

உடனே அடித்துப் பிடித்து ஒரு பாக்கெட் லட்டு வாங்கி வந்தார்கள். பூசாரி இரண்டு லட்டை எடுத்து அந்தப் பெண்ணிடம் கொடுக்க, ஒரே வாயில் அமுக்கினார் அவர். தின்று முடித் தும் மணி பேய் போகாமல் ஆடிக்கொண்டு இருக்க... ''வேற என்ன? மூணாவது லட்டு தின்ன ஆசையா?'' என்று விளம்பர பாணியில் உறுமி னார் பூசாரி. பேய், குழந்தையாக மாறி, ''ஆமா.. ஆமாம்!'' என்று சொல்ல, சிரித்துக் கொண்டே இன்னொரு லட்டை நீட்டினார் பூசாரி. அப்புறம்தான் அந்தப் பெண்ணின் ஆட்டம் நின்றது.

அடுத்து ஆடிக்கொண்டு வந் தது நடுத்தர வயது பெண்மணி. அவருக்குப் பூஜை ஆரம்பமானதும், ''என் பேரு கந்த சாமி. சீட்டாட்டத்துல பத்தாயிரம் ஜெயிச்சதும் ஆசையா சரக்கடிக்கப் போனேன். ஆனா, போற வழி யில் என் நண்பர்களே பணத்துக்காக என்னைக் கொன்னுட்டாங்க. ஆஃப் பாட்டில் ரம்மும், பள்ளிப் பாளையம் கோழி சுக்காவும் வாங்கிக் கொடுத்தா போயிடுவேன்!'' டீல் பேசியது கந்தசாமி பேய்! பூசாரியோ, ''பள்ளிப்பாளையம் கோழி சுக்கா எல்லாம் இங்க இல்லை. இங்கேயே சமைச்ச கோழிக் கறிதான் இருக்கு!'' என்றதும், ''பரவாயில்ல... கொடு!'' என்று இறங்கி வந்து அமுக்கியது பேய்.

பேயே... மூணாவது லட்டு தின்ன ஆசையா?

அந்தப் பெண்ணை மொத்தம் எட்டு பேய்கள் பிடித்து இருந்ததாம். ஒவ்வொரு பேயாக விரட்டி அடித்தார் பேயோட்டி ராசு. கடைசியில் பெண்ணின் தலையில் இருந்து கொத்தாக முடியைப் பிய்த்தவர், அதை அருகில் இருந்த மரத்தில்வைத்து ஆணி அடித் தார். ''எவ்வளவு பெரிய பேய் பிடிச்சி இருந்தாலும் வாமூனி பக்கத்துல நிக்கவெச்சா ஆடிட்டு ஓடிடுவாங்க. பேய்ங்க குவாட்டர், கோழி பிரியாணி, கஞ்சா, சிகரெட், காளி மார்க் சோடான்னு விதவிதமாக கேட்கும். ஆனா, பேய்ங்க ஜாலியா விளையாட செய்யுமே தவிர, அதுங்களுக்கு கெடுதல் செய்யத் தெரி யாது!'' பேய்களுக்கு நற்சான்றிதழ் கொடுக்கி றார் ராசு பூசாரி!

நல்லாதான் 'ஓட்டுறாங்க’ப்பா பேயை!

- வீ.கே.ரமேஷ், படங்கள்: க.தனசேகரன்

பேயே... மூணாவது லட்டு தின்ன ஆசையா?