Published:Updated:

சென்னை போலீஸுக்கு சாகுலின் சவால்!

சென்னை போலீஸுக்கு சாகுலின் சவால்!

சென்னை போலீஸுக்கு சாகுலின் சவால்!

சென்னை போலீஸுக்கு சாகுலின் சவால்!

Published:Updated:
##~##

''என்னால் மத்தவங்க செல்ல வேண் டிய இடங்களுக்குக் குறித்த நேரத்தில் சென்றாலோ, விபத்து நேராமல் காப் பாற்றப்பட்டாலோ அன்றைய எனது உறக்கம் நிம்மதியாக இருக்கும்!'' என்கிறார் சாகுல் ஹமீது.

 'உங்கள் நண்பன் சாகுல் ஹமீது’ என்ற வாசகம் தாங்கிய ஒளிரும் சட்டையுடன் மாலை நேரங்களில் சென்னையின் சிக்னல்களில் இவரை நீங்கள் பார்த்து இருக்கலாம். 'சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க என்னிடம் ஏகப் பட்ட யோசனைகள் உள்ளன. மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்தவன் என்ற ஒரே காரணத்துக்காக என் யோசனைகளைக் கேட்க மாநகர காவல் துறை மறுக்கிறது!’ என்று உயர்நீதிமன்றப் படியேறி கவனம் ஈர்த்தவர்.  'சாகுலின் யோசனைகளைக் கேட்க வேண்டும்’ என்று நீதிமன்றம் உத் தரவிட்டு ஒரு வருஷமாகிறது. இன்னும் இவருடைய யோசனைகளுக்கு காவல் துறை காது கொடுக்கவில்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய விஷயம்!

சென்னை போலீஸுக்கு சாகுலின் சவால்!

காவல் துறையின் பாராமுகம் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் போக்குவரத்து நெரிசல்களில் புகுந்து புறப்பட்டுக் கொண்டு இருக்கிறார் சாகுல் ஹமீது.

''சென்னைச் சாலைகளில் 13 வருஷமா பழச்சாறு வியாபாரம் பண்ணி மாவட்ட ஆட்சியரைவிட அதிகமாக சம்பாதிக்கிறேன். சென்னையிலேயே பிறந்து வளர்ந்ததால் இங்கு உள்ள அத்தனைச் சாலைகளும் எனக்கு அத்துப்படி.  

ஒவ்வொரு சிக்னல்களிலும் மணிக்கணக்கில் நின்னு ஆய்வு பண்ணியிருக்கேன். ஆயிரக்கணக்கான வரைபடங்கள் தயாரிச்சு, 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல ஜெராக்ஸுக்கே செலவு ஆச்சு. சொந்தப் பணத்துல பாங்காங், மலேசியா, சிங்கப்பூருக்குச் சென்று அங்க உள்ள போக்குவரத்து விதி களை ஆய்வு பண்ணிட்டு வந்தேன். ஒத்தை ஆளா இத்தனை வருஷமா நான் பண்ண விஷயங்களைப் பத்தி ஆர்வமா விசாரிக்கக்கூட இங்கே ஆள் இல்லை. நான் டிராஃபிக் போலீஸாரை குறை சொல்லலை. ஏன்னா அவங்க கடினமா உழைக்கிறாங்க. ஆனா, அவங்களை நெறிப்படுத்திக்க அவங்கள்ட்ட எந்த ஐடியாவும் இல்லை. என்கிட்ட ஏகப் பட்ட ஐடியா இருக்கு. ஆனா, கேட்கத்தான் ஆள் இல்லை!

சென்னை போலீஸுக்கு சாகுலின் சவால்!

'நீங்க தனியா இருக்குறதாலதான் உங்க வார்த்தைக்கு மதிப்பு இல்லை. ஆர்வம் உள்ளவர்களை சேர்த்துக்கொண்டு ஓர் இயக்கமாகச் செயல்படுங்க’ன்னு சொல்றாங்க. ஆனா, அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஏன்னா, வர்ற ஆளுங்கள்ல ஒருத்தர் தப்பான ஆளா இருந்தாக்கூட என் உழைப்பெல்லாம் வீணாகிடும். என் நேர்மை கேள்விக்குறி ஆக்கப்படும். அதில் எனக்குச் சம்மதம் இல்லை!

தேவையற்ற சிக்னல்கள், 35 சதவிகித சாலைகளை ஒருவழிப் பாதையாக மாற்றியது, 'கட்டிவிட்டோமே’ என் பதற்காக மேம்பாலங்களை வம்படியாகப் பயன்படுத்த போக்குவரத்தைத் திசை திருப்புவது, மாநகரப் பேருந்து ஓட்டுநர்களின் ஒழுங்கீனம் ஆகியவைதான் சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கியக் காரணங்கள். செனடாப் சாலை தொடங்கி தேனாம்பேட்டை காவல் நிலையம்  வரையிலான குறுகிய தூரத்துக்கு மொத்தம் எட்டு சிக்னல்கள். இது சிக்னல் கான்ட்ராக்ட் எடுத்தவங்களுக்குப் பயன்படுமே ஒழிய, மக்களுக்கு இதனால் எந்த நன்மையும் ஏற்படாது. ஆனால், எழும்பூர் ஆதித்தனார் சிலை சந்திப்பில் மொத்தம் ஐந்து சாலைகள் சந்திக்கின்றன. அங்கு மூணு ரவுண்டானாக்கள் உள்ளன. சிக்னலே இல்லாத அங்கு இதுவரை நெரிசல் ஏற்பட்டதாக வரலாறே இல்லை. அங்கு சிக்னல் வைத்தால்தான் கட்டுக்கடங்காத நெரிசல் ஏற்படும்!

அண்ணா சாலையில போக்குவரத்தை ஒழுங்குபடுத்த எனக்கு ஒருநாள் மட்டும் அனுமதி தந்தனர். ஏழெட்டு போலீஸ் அதிகாரிகளும் என்னைக் கண்காணித்தார்கள்.  நானும் சீராகப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினேன். மறுநாள் எனக்கு அனுமதி கொடுத்த உயரதிகாரியைப் பார்க்கச் சென்றேன். அவர் என்னைக் கண்காணித்த அதிகாரியை அழைத்து, 'என்னைய்யா இவர் நேத்து வந்து வொர்க் பண்ணாரே... எப்படி இருந்துச்சு’ன்னு கேட்டார். 'நெரிசலே இல்லை சார். அவுட்கோயிங், இன்கம்மிங் சூப்பரா இருந்துச்சு’ன்னு அவர் சொல்ல, 'ஒரு பப்ளிக் நல்லா வேலை செஞ்சாருன்னு சொல் றதுக்கு நீ எதுக்குய்யா? அந்த மாதிரி நீ ஏன் பண்ண மாட்டேங்குறே’ன்னு காச்மூச்னு கத்தித் தீர்த்துட்டார்.

பத்து நாள் கழிச்சு எஸ்.ஐ. ஒருத்தர் என்னைக் கூப்பிட்டுவிட்டார்.  'நீங்க டிராஃபிக் கிளியர் பண்ணியதில் அவுட்கோயிங் நல்லா போச்சு. இன்கம்மிங் சரியில்லை. உங்க வேலை எங்க ளுக்கு திருப்தி இல்லை’னு எழுதி இருக்கேன். இதில்  கையெழுத்துப் போடுங்க’ன்னாரு. 'சாகு லின் யோசனைகளைக் கேட்டோம். ஆனால், அது ஃபெயிலியர்’னு நீதிமன்றத்துக்குப் பதில் சொல்றதுக்காக இப்படி கேட்டாங்க. நான் கையெழுத்து போடலை.

நான் சவால் விடுறேன் சார். சென்னையில எந்த இடத்தில் டிராஃபிக் நெரிசலைக் குறைக்கணும்னு சொல்லுங்க. நான் குறைச்சுக் காட்டுறேன். பத்தே நிமிஷத்துல 50 சதவிகித நெரிசலைக் குறைப்பேன். அண்ணா மேம்பாலத்தில் வண்டியே நிக்காத அளவுக்கு செஞ்சு காட்டுறேன்.

ஒரு முறை அறிவாலயத்தில் கூடிய கூட்டத்தால் அண்ணா சாலையில் நெரிசல். 'சார் நான் உதவி பண் ணட்டுமா’ன்னு அங்கே டியூட்டியில் இருந்த டிராஃபிக் போலிஸிடம் கேட்டேன்.  அவர் கடுப்புல, 'நான் செத் ததுக்கு அப்புறம் வாய்யா’ன்னு சொல்றார்.  போலீஸா ரோட மனநிலை இப்படித்தான் இருக்குங்குறதுக்காக இதைச் சொல்றேன் நான்.

இவங்க ஈகோவால் மக்கள் சிரமப்படுறாங்களேனு நினைக்கும்போதுதான் வேதனையா இருக்கு. ஆனா, இதுக்காக சஞ்சலப்பட்டு முடங்கிட மாட்டேன். என் போராட்டமும் சேவையும் என் உயிருள்ள வரை தொடரும்!'' -நம்பிக்கையாக முடிக்கிறார் சாகுல் ஹமீது!

- ம.கா.செந்தில்குமார், படங்கள்: கே.கார்த்திகேயன்