Published:Updated:

அட்டாக் பாண்டி….. அட்டாக் ஆன போலீஸ் இமேஜ்!

அட்டாக் பாண்டி….. அட்டாக்  ஆன  போலீஸ் இமேஜ்!
அட்டாக் பாண்டி….. அட்டாக் ஆன போலீஸ் இமேஜ்!

அட்டாக் பாண்டி….. அட்டாக் ஆன போலீஸ் இமேஜ்!

அட்டாக் பாண்டி….. அட்டாக்  ஆன  போலீஸ் இமேஜ்!

தேர்தல் வந்தால் சாலை போடுவார்கள், தண்ணீர் விடுவார்கள்  இலவசம் அள்ளித் தருவார்கள், ஐந்து   வருடம் சாதிக்காததை  மீண்டும் வாய்ப்பளித்தால் அடுத்த ஐந்து வருடத்தில் சாதிப்போம் என வாக்குறுதி அளிப்பார்கள். இதுதான் நாம் இன்றுவரை நாம் கண்ட அரசியல். ஆனால் முதன்முறையாக இந்த வரிசையில் தேடப்படும் குற்றவாளியையும் கைது செய்வார்கள் என்பது தமிழகத்தில் முதன்முறையாக அட்டாக் பாண்டி விவகாரத்தில் அறிமுகமாகியுள்ளது.

பொட்டு சுரேஷ் என்ற திமுகவின் அதிகார மையத்தின் ஆசி பெற்று சர்வ வல்லமையுடன் மதுரையை ஆட்டுவித்த நபரை கொலை செய்த வழக்கில், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பல வருடமாக போலீசிடம் மட்டும் பேசாமல் உறவினர்கள், தெரிந்தவர்கள் நண்பர்களிடம் மட்டும் சாவகாசமாக பேசிக்கொண்டு,  2 வருடமாக தலை மறைவு  வாழ்க்கை வாழ்ந்த அட்டாக் பாண்டி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைத் கொலைக்கான காரணத்தை தெரியவைக்குமா, இல்லை திமுக கட்சிக் குழப்பத்திற்கு மேலும் வலு சேர்க்குமா என்பது பலருடைய கேள்வியாக உள்ளது.

திமுகவின் அதிகார மையத்தின் இடத்தைப் பிடிக்க  எத்தனையோ கொலைகள் நடந்தாலும் அழகிரியின் பினாமி, வலது கரம் என பேசப்பட்ட பொட்டு சுரேஷின்  செயல்பாடுகள் மதுரை மக்களையே மிரட்டிய நிலையில் அட்டாக் பாண்டி பொட்டு சுரேஷ் வாழ்க்கைக்கே  முடிவு கட்டியது அதை விட  கொடூரமானது.

தலைமை இடத்தில் விசுவாசம் காட்டி  யார் அதிகம் சம்பாதிப்பது என்ற போட்டியும், கட்சி பலம், ஆள் பலம் போட்டியாலும்தான் பொட்டு  சுரேஷ் கதை முடிக்கப்பட்டுள்ளது. பொட்டு சுரேஷ்,  திமுகவில் அடிப்படை உறுப்பினராகச் சேர்ந்து அழகிரியின் வலதுகரமாக மாறியதும், தவறான வழியில் பணம் சம்பாதிக்க மதுரையில் பல்வேறு துறைகளை மிரட்டியதும் அவரது வாழ்விற்கு அவரே தோண்டிய குழியாகத்தான் கருதப்படுகிறது.

பொட்டுவின் கதையை முடித்த குற்றவாளியாக கருதப்பட்ட   அட்டாக் பாண்டி, தேடப்படும் குற்றவாளியாக

அட்டாக் பாண்டி….. அட்டாக்  ஆன  போலீஸ் இமேஜ்!

நீதி மன்றத்தால் அறிவிக்கப்பட்டு போலீசார் தேடிய நிலையில், மும்பையில் பதுங்கி இருந்ததாக அட்டாக் பாண்டி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இது போலீஸ் மீதான சமீபத்திய பல்வேறு விமர்சனங்களுக்கு” தற்காலிக  ஓய்வு கொடுத்துள்ளது.

ஒரு சாதாரண குற்றவாளியை பிடிக்க சுமார் 2 வருடம் என்றால், தமிழக போலீசின் செயல்பாடுகள் சந்தேகம் கொள்ள வைக்கிறது. ராமஜெயம் கொலை வழக்கின் முடிவு எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையிலும், டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கின் விசாரணை  என்னவாகும் என்பது பலரது கேள்வியாக உள்ளது.  நம் எல்லைக்குள் எளிதாக வந்து கொள்ளை அடித்து விட்டு செல்லும் வட  மாநிலத்தவரை பிடிக்க வட மாநிலம் செல்வதும் நமது போலீசின் திறனை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது  .

இதே போல நாளை முக்கியப் பிரமுகரை கொலை செய்து விட்டுச்  சென்றால் நிலை என்னவாகும்?  ஒரு வேளை கொலைகாரன்  சர்வதேச  குற்றப் பின்னணி கொண்டிருந்தால்  போலீசாரால்  என்ன செய்ய முடியும்? எப்படி அவனை  நெருங்க முடியும் என்பதும் சந்தேகமாக உள்ளது.

பல போலீசார் தவறான வழியில் சொத்துக்கள் குவித்தாலும், எத்தனையோ நேர்மையான காவல் துறை அதிகாரிகள் உயிரை பணயம் வைத்து நாட்டிற்காக உழைத்து வருகிறார்கள். சிலை கடத்தல் தடுப்பு பிரிவிலும்,கடலோர பாதுகாப்பிலும், லஞ்ச ஒழிப்பிலும் உள்ள உயர்  அதிகாரிகளாக இருப்பவர்களைப் போல நேர்மையானவர்களையே   மக்கள் எதிர்பார்க்கிறார்கள், விரும்புகிறார்கள். 

போலீசார் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவே  ரௌடிகளை  உருவாக்குவதாகவே மக்களின் கருத்தாக உள்ளது. ஆரம்பத்தில் சிறிய அளவில் குற்றம் செய்யும் போதே சட்டத்தின் முன் நிறுத்தினால் பெரிய ரௌடிகள் உருவாவதில்லை. நாட்டிற்கு தேவை கட்சி, மதம், ஜாதி பார்க்காமல் சட்டத்தின் முன் உடனடியாக நிறுத்தும் நேர்மையான காவல் துறை  அதிகாரிகள்தான் .  இன்றைக்கு சிறு பிரச்சனைக்கு கூட சிபிஐ விசாரணை கேட்பது தமிழக போலீசார் மீதான செயல் திறனை, நம்பிக்கையை  சந்தேகம் கொள்ள வைக்கிறது.

அட்டாக் பாண்டி….. அட்டாக்  ஆன  போலீஸ் இமேஜ்!

அதை உறுதிப்படுத்தும் விதமாக போலீசாரின் பாலியல் அத்துமீறலும், உரிமைக்காக போராடிய கண்பார்வை அற்றவர்களை சுடுகாட்டில் இறக்கி விட்டு வீரத்தை காட்டியவர்களும் , கட்சி சார்ந்து செயல்படுவதும், அப்பாவிகளிடம் வீரம் காண்பிப்பதும் , பல்வேறு குற்றவாளிகளை  நெருங்க முடியாமல் இருப்பதும், லட்டு,  லஞ்சப் பணத்திற்காக கட்டிபுரண்டு  சண்டை போடுவதும், சக பெண் போலீசுக்கே பாதுகாப்பு கொடுக்க முடியாத அளவிற்கு  போலீஸ் உயர் அதிகாரிகளின் பாலியல் தொல்லைகளும், ஒட்டு மொத்த போலீஸ் மீது ஏற்படும் அவநம்பிக்கையை  தவிர்க்க முடிவதில்லை.

இன்றைக்குள்ள நவீன காலகட்டத்தில் மக்களுக்காக பாடுபடும் பத்திரிக்கைகள், நீதிமன்றம்,அதி நவீன தொழில் நுட்பம் உள்ள நாட்டில் இன்னமும் அய்யா(உயர் அதிகாரி தான்)  சொன்னால்தான் செய்வோம், மாவட்டம் ,வட்டம் சொன்னதைதான் செய்வோம், ஆளும் கட்சி ரவுடி,எதிர்க் கட்சி ரவுடி என வித்தியாசம் பார்ப்பதும், மந்திரி சொன்னதைத்தான் செய்வோம் என கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை போலீஸ் தன் பலமறியாமல் நேர்மைக்கு  விரோதமாக  செயல்படுவதால்தான்   மக்களிடம் போலீசின் செல்வாக்கு குறைகிறது.

தவறான   வழியில் நடக்கச் சொல்லும் உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகளை மக்கள் முன் போலீசாரால்  நிறுத்த முடியும்.  என் கவுன்ட்டர் செய்தால்தான் போலீஸ் இமேஜ் உயரும் என்றால் இந்த நாட்டில் பல கோடி என் கவுன்ட்டர்கள் செய்யப்படவேண்டும்.

சமீபத்தில் பதவியில் உள்ள பெண்  டிஎஸ்பி ஒருவர்  சொன்னது சற்று வித்தியாசமானது  என்றாலும் ஒப்புக்கொள்ளக் கூடியது. அதாவது  நேர்மையானவர்களை உயர் அதிகாரிகள் மதிப்பதில்லை, போலீஸ் நினைத்தால் யாரையும் எதுவும் செய்ய முடியும் என்று  சொன்னார். பல 'பாண்டிகள்' உருவாவதும் பல  'சுரேஷ்கள்' சாகாமல் இருப்பதும் போலீஸ் கையில்தான் உள்ளது.

மதுரை என்றால் மல்லிகை பூ நினைவுக்கு வருவதற்கு பதிலாக  அரசியல் பகையால்  மரணங்களும் நினைவுக்கு வருவதை தடுத்து நிறுத்துவது காவல் துறையின்  கையில்தான்  உள்ளது.

- எஸ். அசோக்

அடுத்த கட்டுரைக்கு