Published:Updated:

'45 வயதானால் காவல்துறையினருக்கு வி.ஆர்.எஸ்!'- விஷ்ணுபிரியா விவகாரத்தில் பொங்கித் தீர்த்த வாசகர்கள்!

'45 வயதானால் காவல்துறையினருக்கு வி.ஆர்.எஸ்!'- விஷ்ணுபிரியா விவகாரத்தில் பொங்கித் தீர்த்த வாசகர்கள்!
'45 வயதானால் காவல்துறையினருக்கு வி.ஆர்.எஸ்!'- விஷ்ணுபிரியா விவகாரத்தில் பொங்கித் தீர்த்த வாசகர்கள்!
'45 வயதானால் காவல்துறையினருக்கு வி.ஆர்.எஸ்!'- விஷ்ணுபிரியா விவகாரத்தில் பொங்கித் தீர்த்த வாசகர்கள்!

பெண் டி.எஸ்.பி விஷ்ணுப்ரியா தற்கொலை விவகாரத்தை அடுத்து, காவல்துறையில் நடந்துவரும் வில்லங்க விவகாரங்கள், செக்ஸ் டார்ச்சர்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. கடந்த ஜூனியர் விகடன் இதழில் 'இன்னும் எத்தனை விஷ்ணுப்ரியாக்கள்?' என்ற தலைப்பில் அந்த விவகாரங்கள் குறித்து விரிவாக எழுதி இருந்தோம். அந்தக் கட்டுரையைப் படித்த வாசகர்களும் தங்கள் பங்குக்கு பொங்கித் தீர்த்துவிட்டார்கள். அதில் இருந்து...

S.Bala
 
ஒரு சொந்தக்காரர் போலீஸில் உயர் அதிகாரியாக சேர்ந்தவுடன் அவருக்கு வாழ்த்து சொல்லிவிட்டு 'இனிமேல் என் வீட்டுக்கு வராதே' என்றும் சொன்னார் என் பாட்டனார்.

காரணம் கேட்டபோது 'ஒரு போலீஸ்காரன் யோக்கியனாக இருக்கவே முடியாது' என்றார். இது 50 வருடங்களுக்கு முன்பு நடந்த விஷயம். இப்போது இன்னும் மோசமாக மாறி இருக்கிறது.

திரு 

எங்கில்லை காம விளையாட்டுகள்? ஆனால் திருடர்களிடம் கைகோர்த்து அடித்ததில் பங்கு போட்டுக் கொள்வது, செக்ஸ் கொலையாளிகளின் தகிடுதத்தங்கள், ************ ********* *****, எல்லாவற்றையும் விட ஒருசில நல்லவர்களை மகாநதி கதை மாதிரி நடத்துவது எல்லாம் மனதை அதிரடிக்கும். இந்த மாதிரி நேரங்களில் சூரசம்ஹாரம் நடத்தவோ இராவண வதம் செய்யவோ இரணியன் குடல்பிடுங்கியது அவதாரங்கள் ஏன் இல்லை எனும் சிறார்களுக்குப் பதில் சொல்லத்தான் முடியாமல் போய்விடுகிறது.

selva 


போலீஸ் துறையிலிருக்கும் நண்பர் ஒருவரிடம் 'என் இப்படி போலீஸ் துறை சீர்கெட்டிருக்கிறது?' என்று கேட்டேன். அதற்கு அவருடைய பதில்: 'போலீஸ் துறையில் இளையர்களாகச் சேரும் (எல்லா நிலைகளிலும்) எல்லோருக்கும் 'நேர்மையாக இருந்து ஏதாவது சாதிக்க வேண்டும்' என்று அதீத ஆர்வம் இருக்கிறது. அதைச் செய்யவிடாமல் தடுத்து அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கெடுத்துக் குட்டிச்சுவர்களாக ஆக்குபவர்கள் 45 வயதுக்கு மேற்பட்ட அதிகாரிகள்தான் (எல்லா நிலைகளிலும்). இந்த இளையர்கள் 45 வயதாகும்போது அவர்களும் கெட்டுவிடுகிறார்கள். எனவே 45 வயதுக்கு மேற்பட்ட எல்லோரையும் ஒரே நாளில் VRS-ல் வெளியே அனுப்பிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும். இது நடக்குமா?"

Palanisamy 


பல நேர்மையான மற்றும் திறமையான அதிகாரிகளுக்கு மத்தியில் சில கருப்பு ஆடுகளால் ஒட்டுமொத்த தமிழக காவல் துறையின் மதிப்பும் காற்றில் பறக்கிறது. முதல்வர்தான் நடவடிக்கை எடுத்து திருத்த வேண்டும்.

'45 வயதானால் காவல்துறையினருக்கு வி.ஆர்.எஸ்!'- விஷ்ணுபிரியா விவகாரத்தில் பொங்கித் தீர்த்த வாசகர்கள்!

Selva 

முதலமைச்சர் ஜெயலலிதா கவனிக்கும் காவல் துறையிலேயே இத்தனை அவலங்கள், கொடுரங்கள், அழுத்தங்கள், அநீதிகள், அக்கிரமங்கள் என்றால், அமைச்சர்கள் வைத்திருக்கும் இலாகாக்களின் நிலைமையைப் பாருங்கள்! சொத்துக் குவிப்பு வழக்கில், தன்னை பாதுகாப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதால், மக்கள் நலனில் அக்கறை இல்லாமல், மற்ற இலாக்காகளை கண்டுகொள்ளாமல் இப்படி நீதியான, நேர்மையான விஷ்ணு பிரியாவைப் போல் பல அதிகாரிகள் இறக்க காரணமாக உள்ளார். தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், ஜெயலலிதா ஆட்சியை கலைத்துவிட்டு கவர்னர் ஆட்சியை செயல்படுத்துவது நல்லது. அப்போதுதான் சிபிஐ விசாரணை செய்து உண்மையை நிலைநாட்ட முடியும்.

Subbiah 

மனிதவள மேம்பாட்டுத் துறையை எல்லா அரசுத் துறைகளிலும் புகுத்த வேண்டும். பதவி உயர்வு, பணிமாற்றம், விடுமுறை போன்றவற்றை மனிதவள மேம்பாட்டுத் துறையிடம் விடவேண்டும். மாறி மாறி இரண்டு கழகங்களுக்கும் வாக்களிக்கும் தமிழர்கள் மாறாமல் எதுவும் மாற வாய்ப்பில்லை!

Irritated
 
இது காவல் துறையில் மட்டும் இல்லை - எங்கும் இருக்கிறது. இதற்கு காரணம், நாம்தானே? காவல் துறையில் இருப்பவர்கள் - சாதாரண மனிதர்கள் (சற்று அதிகாரம் படைத்தவர்கள்). அவர்களும் நம்மிடையே இருந்துதான் வருகிறார்கள். அவர்களை அதுபோல ஆக்குவதே - அவர்கள் சூழல், அவர்களை நாம் நடத்தும் முறை. ஒரு காவல் துறையைச் சேர்ந்த கான்ஸ்டபிளை - ********* என்றோ, மாமூல் என்றோ - அழைக்காமல் கடந்து போய் இருக்கிறோமா? அட... அவர்கள் பணிக்குத் தேவையான மரியாதையைத் தருகிறோமா? இல்லையே! ஆனால் இதனை எல்லாம் தாங்கிக்கொண்டு பணி செய்பவர்கள் நாளடைவில் கடினப்பட்டுப் போவது நம் கைங்கரியதால்தான்.

குற்றவாளிகளுடன் மட்டுமே பழகும் ஒருவர், அவர்கள் முன்னேற்றம் கண்டு மாறுவது தடுக்க இயலாத ஒன்று. அடுத்த முறை, வெயிலில் நின்று ஒழுங்குபடுத்தும் காவல் துறையைச் சேர்ந்தவருக்கு  நன்றி சொல்லி பாருங்கள். புகார் தருகையில் அவர்கள் வேலை சுமையை உணருங்கள். என்னமோ அவர்கள் பணி புரியாது இருப்பது போன்ற எண்ணத்தை ஒழித்துகட்டுங்கள்.

நம் காவல் துறையை சீப்பாக மாற்றியது சினிமாவும் மீடியாவும்தான். அவர்களும் மனிதர்களே. அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. அவர்களையும் டிரான்ஸ்ஃபர் பாதிக்கும். அவர்களும் இரவு, பகல் என்று மாறி மாறி உழைப்பவர்கள். நமக்கு என்னமோ அவர்கள் எல்லோரும் சோம்பேறிகள், தனியார் துறையில் எம்.என்.சி-யில் பணியாற்றும் அடிமைகள் மட்டுமே உழைப்பாளிகள் என்ற தவறான எண்ணம் இருக்கிறது. அதனைப் போக்குங்கள். எங்குமே ஒரு சிலர் தவறானவர்களே.

'45 வயதானால் காவல்துறையினருக்கு வி.ஆர்.எஸ்!'- விஷ்ணுபிரியா விவகாரத்தில் பொங்கித் தீர்த்த வாசகர்கள்!

கல்வித் துறை, வங்கித் துறை. கணினித் துறை, மருத்துவத் துறை - ஏன் காவல் துறையில் கூட! ஒரு பிரகாஷ் இருந்தமைக்காக - உங்கள் டாக்டர் செக்ஸ் டார்ச்சர் தருபவர் என்றா பட்டம் சூட்டுவீர்கள்? ஒரு தேவநாதன் (காஞ்சி) இருந்ததால் எல்லா பூசாரிகளும்********** *********** ******** என்றா சொல்லுவீர்கள்? இல்லையே!

Venkat 

அரசு அதிகாரிகளுக்கு அதிக சலுகைகள் தந்து கெடுத்த முக-வும்தான் காரணம்!