Published:Updated:

இறைச்சிக்கு தடை விதித்தது ஏன்? பத்திரிகையாளருக்கு மகாராஷ்ட்ரா முதல்வர் விளக்க கடிதம்!

இறைச்சிக்கு தடை விதித்தது ஏன்? பத்திரிகையாளருக்கு மகாராஷ்ட்ரா முதல்வர் விளக்க கடிதம்!
இறைச்சிக்கு தடை விதித்தது ஏன்? பத்திரிகையாளருக்கு மகாராஷ்ட்ரா முதல்வர் விளக்க கடிதம்!

 மகாராஷ்டிர மாநிலத்தில் ஜைன மக்களின் பண்டிகையான பர்யூசன் பர்வா பண்டிகையை முன்னிட்டு, இறைச்சி வெட்ட அந்த மாநில அரசு தடை விதித்தது. இந்த தடைக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து மகாராஷ்டிர அரசின் இந்த தடைக்கு, மும்பை உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

இறைச்சிக்கு தடை விதித்தது ஏன்? பத்திரிகையாளருக்கு மகாராஷ்ட்ரா முதல்வர் விளக்க கடிதம்!


இதைத் தொடர்ந்து மும்பையை சேர்ந்த ஜைன அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் மும்பை உயர் நீதிமன்றத்தின் தடைக்கு தடைவிதிக்க கோரியது. ஆனால், ஜைன அமைப்பின் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், மும்பை உயர் நீதிமன்றத்திலேயே மேல்முறையீடு செய்து கொள்ள உத்தரவிட்டது.

இந்நிலையில் 'இந்தியாடுடே' குழுமத்தின்  சீனியர் எடிட்டர் ராஜ்தீப் சர்தேசாய், மகாரஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவீசுக்கு எழுதிய ஒரு பகிரங்க கடிதத்தில், மகராஷ்டிராவில் மாட்டிறைச்சி வெட்டத் தடை விதித்தது குறித்தும், ஷீனா போரா கொலை வழக்கை விசாரித்து வந்த மும்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா, அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது குறித்தும் பலவாறு விமர்சித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து  ராஜ்தீப் சர்தேசாய்க்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ்  கடிதம் மூலம் பதிலளித்துள்ளார்.

அதில்,''  பொதுவாக மூத்த பத்திரிகையாளர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் எழுதும் கடிதங்களுக்கு நான் பதில் அளிப்பதில்லை. ஆனால் நீங்கள் குழப்பத்திலும்,  ஒருசார்பாகவும்  இருப்பதால்  உங்களுக்கு பதிலளிக்கிறேன். இது ஒன்றும் கோயபல்ஸ் ஆட்சி  அல்ல. ஒரு பொய்யை பல முறை திரும்பத் திரும்ப கூறினால் உண்மையாகிவிடுவதற்கு.இந்த விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்கள் போதிய அறிவு இல்லாமல் இருப்பதாகவே நான் உணர்கிறேன்.

நான் பதவியேற்ற பின்னர், ஜைன மக்களின் பர்யூசன் பர்வா பண்டிகைக்காக எந்த புதிய சட்டத்தையும் இயற்றி விலங்குகள் கொல்லாமைக்கு உத்தரவிடவில்லை. இது தொடர்பாக எந்த ஒரு புதிய சட்டமும் இயற்றப்படவில்லை. கடந்த 2004ஆம் ஆண்டு மகராஷ்டிராவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சிதான் பர்யூசன் பர்வா  பண்டிகைக்காக இரண்டு நாட்களுக்கு அனைத்து இறைச்சி கடைகளுக்கும் கட்டாய விடுமுறை அளிக்க வேண்டுமென்றும், விலங்குகளை கொல்லக் கூடாது என்றும் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்தே மும்பை, மீராபந்தர் மாநகராட்சிகளில் விலங்குகளை கொல்லாமைக்கு தடை விதிக்கப்பட்டது. இதனை மற்ற மாநகராட்சிகளும் பின்பற்றத் தொடங்கின. காங்கிரஸ் ஆட்சி எப்படி ஊழலில் திளைத்ததோ, எப்படி திறமையற்ற ஆட்சியாக இருந்ததோ அது போலவே போலி மதசார்பின்மை கொண்ட ஆட்சியாகவும் இருந்தது'' என  கூறியுள்ளார்.