Published:Updated:

சுந்தர் பிச்சை மாமனார் 70வது வயதில் இரண்டாம் திருமணம்!

சுந்தர் பிச்சை மாமனார் 70வது  வயதில் இரண்டாம் திருமணம்!
சுந்தர் பிச்சை மாமனார் 70வது வயதில் இரண்டாம் திருமணம்!

கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர்பிச்சையின் மாமனார் ஓலாராம் ஹர்யானி, 70வது வயதில் மறுமணம் செய்து கொண்டுள்ளார்.

சுந்தர் பிச்சை மாமனார் 70வது  வயதில் இரண்டாம் திருமணம்!

சென்னையை சேர்ந்த சுந்தர் பிச்சை தற்போது கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். இவரது  மாமனார் ஓலாராம் ஹர்யானி, மும்பையில் வசித்து வருகிறார்.  மனைவியை இழந்த ஓலாராம், தற்போது 65 வயது மாதுரி சர்மா என்பவரை இரண்டாவதாக மணம் புரிந்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவை சேர்ந்த மாதுரியின் கணவர் ராணுவத்தில் பணியாற்றும் போது மரணமடைந்தவர். இவர்களது  திருமணம் ஆர்ய சமாஜ முறைப்படி நேற்று கோட்டா நகரில் நடைபெற்றது.

ஓலராம் ஹர்யானிக்கு ஒரு மகனும், மகளும் உண்டு. மகளின் பெயர் அஞ்சலி. இவர்தான் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையின் மனைவி. இவர்கள் கலிபோர்னியாவில் வசிக்கின்றனர். அதுபோல் ஓலாராமின் மகனும் வெளிநாட்டில்தான் இருக்கிறார்.

திருமணத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓலாராம், ''ஒவ்வொருவருக்கும் அவர்கள் விருப்பப்படி வாழ்க்கையை அமைத்து கொள்ள உரிமை உண்டு''  என்றார்.