Published:Updated:

பாத்திரத்தில் தலையை விட்டு சிக்கிக்கொண்ட சிறுத்தை! (வீடியோ)

விகடன் விமர்சனக்குழு
பாத்திரத்தில் தலையை விட்டு சிக்கிக்கொண்ட சிறுத்தை! (வீடியோ)
பாத்திரத்தில் தலையை விட்டு சிக்கிக்கொண்ட சிறுத்தை! (வீடியோ)

ராஜ்சமந்த் (ராஜஸ்தான்): தண்ணீர் குடிக்க சென்ற சிறுத்தையின் தலை பாத்திரத்தில் மாட்டிக் கொண்ட சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது.

ராஜ்சமந்த் என்ற பகுதியில் சிறுத்தை ஒன்று ஊருக்குள் புகுந்தது. அந்த சிறுத்தை, ஒரு வீட்டின் வெளியே வைக்கப்பட்டிருந்த அலுமினிய பாத்திரத்தில் இருந்த தண்ணீரை தலையை உள்ளே விட்டு குடித்தது. தண்ணீரை குடித்து விட்டு, தலையை வெளியே எடுக்க முயன்ற போது, பாத்திரத்திற்குள் தலை சிக்கிக் கொண்டது. இதனால் சிறுத்தை உறுமியபடி அங்கும் இங்கும் ஓடியது. 

இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வனத்துறையினர் சிறுத்தை மீது மயக்க ஊசி செலுத்தி, தலையை வெளியே எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.