Published:Updated:

உங்கள் செல்லத்துக்கும் வந்தாச்சு செல்ஃபி டிவைஸ்!

விகடன் விமர்சனக்குழு
உங்கள் செல்லத்துக்கும் வந்தாச்சு செல்ஃபி டிவைஸ்!
உங்கள் செல்லத்துக்கும் வந்தாச்சு செல்ஃபி டிவைஸ்!

ம்மை நாமே எடுத்துக் செல்ஃபி எடுத்துக் கொள்வதில் ஆர்வம் இருந்தாலும், நம் வீட்டு ரேஷன் கார்டில் சேர்க்கும் அளவுக்கு(?) எல்லோருக்குமான செல்லமாக உலா வரும் பெட்ஸ் எனப்படும் வீட்டுச் செல்லப்பிராணிகளுடன் செல்ஃபி எடுத்து அழகு பார்ப்பதே தனி சுகம்தான்.

உங்கள் செல்லத்துக்கும் வந்தாச்சு செல்ஃபி டிவைஸ்!

இப்போது அதற்கும் தனி ஒரு கருவி கண்டுபிடித்து கலக்கிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த கருவியை கண்டுபிடித்தவர் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜேசன் ஹெர்னாண்டஸ். இவரும், இவரது மனைவியும் நாய்கள் வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவர்கள். தனது மனைவி, தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணியான நாயுடன் செல்ஃபி எடுக்க கஷ்டப்படுவதைப் பார்த்து கண்கலங்கிய இவர், சுமார் ஓராண்டாக இரவு, பகல்  பாராது, கடுமையாக உழைத்து இக்கருவியை உருவாக்கியுள்ளார் (நோட் பண்ணுங்கப்பு...)

இந்த கருவி டென்னிஸ் பந்து போன்ற உருவமைப்பு கொண்டுள்ளது. இதை நசுக்குவதன் மூலம் எழும் ‘பீப் பீப்’ ஒலியைக் கொண்டு நாய்களின் கவனத்தை ஈர்த்து, ‘எடுறா செல்ஃபியை’ என க்யூட்டான செல்ஃபியை நொடியில் எடுக்கலாம்!

இந்தக் கருவியை நமது மொபைல் போன், கணினி, டேப்லெட் என அனைத்திலும் பொருத்தி நமது செல்லப்பிராணிகளுடன் செல்ஃபி எடுத்து ஜமாய்க்கலாம். முன்பக்கம், பின்பக்கம் என இரு புறங்களிலும் ‘க்ளிக்’கும் வசதியுடனே ஜேசன் வடிவமைத்துள்ளார்.

என்ன மக்களே... உங்கள் செல்லத்துடன் ஒரு செல்ஃபிக்கு  ரெடியா?

ச. ஆனந்தப்பிரியா