Published:Updated:

நாவடக்கம் வேண்டும்!

Vikatan Correspondent
நாவடக்கம் வேண்டும்!
நாவடக்கம் வேண்டும்!
நாவடக்கம் வேண்டும்!

ம்முடைய நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலைவிட, மிகவும் உன்னிப்பாக கவனிக்க பட்ட தேர்தல் நடிகர் சங்க தேர்தல். இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு ஏன் இப்படி கவனிக்க வேண்டும், எல்லா ஊடகங்களும், நடுநிலையாளர்களும் ஏன் இதை பற்றி பேசவேண்டும், நாட்டில் எவ்வளவோ பிரச்னை இருக்கும்போது, ஏன் இதற்கு இப்படி முக்கியத்துவம்? எல்லாவற்றுக்கும் நாவே காரணம்.

எல்லா தொழில் முறையிலும் சங்கங்கள் இருக்கிறது. ஆனால், நடிகர் சங்கம் எம்.ஜி.ஆருக்கு பிறகு நம்முடைய நாட்டில் சக்தி வாய்ந்தது. காரணம் உங்களுக்கே தெரியும். இப்போ நடிக்க வரும்போதே மக்களை ஏமாற்ற, நடிக்க கற்று கொள்கிறார்கள். பிறகு நாட்டை ஆள முயற்சி செய்கிறார்கள். இதில் ஒரு சிலர் விதி விலக்கு. சரி விஷயத்துக்கு வருவோம்...

நாசர், விஷால், கார்த்தி டீம் (பாண்டவர் அணி) சில குற்றச்சாட்டுகளை, சரத்குமார் அணி மீது வைத்தது எல்லோருக்கும் தெரியும். உண்மையிலேயே உங்களிடம் உண்மை இருந்தால், அதற்கான ஆதாரங்களை அவர்களிடம் காட்டி உங்களுக்குள்ளேயே அதனை பேசி சரி செய்திருக்கலாம். ஆனால், இதனை ஆரம்பத்தில் கேட்ட, பூச்சிமுருகன், குமரிமுத்து என்று எல்லோரையும் வாய்க்கு வந்தபடி பேசி, சங்கத்தை விட்டே வெளியே அனுப்பி, நடிகர் சங்கத்தை தங்களுடைய குடும்ப சொத்து மாதிரி ராதாரவி, ராதிகா, மற்றும் சரத்குமார் நாவடக்கம் இல்லாமல் மற்றவர்களை பேசியது எந்த விதத்தில் நியாயம்? இதனை மறுபடியும் கேள்விக்கேட்ட நாசர் & கோ, நிலைமையும் அதே. உங்களுடைய தேவையில்லாத நாவடக்கத்தால், பாண்டவர் அணி உருவாயிற்று. அன்றே மீடியா மற்றும் அனைத்து தரப்பினரும் கவனிக்க ஆரம்பித்தார்கள்.

சரி எல்லா சங்கங்களிலும் தேர்தல் உண்டு என்று உங்களை நினைத்து பார்த்தால், சமாதானம் என்ற பெயரில் ராதிகா, மற்றும் சிம்பு பேசிய பேச்சுக்கள்,  அச்சில் எழுத என் பேனா கூட தயங்குது. வசனங்களையே படித்த உங்களுக்கு தமிழருக்கான பண்பாடு தெரியவில்லை. போட்டி என்று வந்தபிறகு உங்களுடைய சாதனைகளை கூறி ஓட்டு கேட்காமல், ஜாதி, மதம் என்று நீங்கள் போட்ட சாக்கடை சண்டையை இந்த தமிழ்நாடே இல்லாமல் நம்முடைய மற்ற மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவும் பார்த்து சிரித்தது.

நாவடக்கம் வேண்டும்!

ஏன் தெரியுமா?

சரத்குமார், சிம்பு, ராதிகா, மற்றும் ராதாரவி பேசிய பேச்சுக்கள், அதிலும் குறிப்பாக கமலை பற்றியும், மூத்த நடிகர் என்றும் பாராமல் சிவகுமார் பற்றியும் பேசிய பேச்சுக்கள் முகம் சுளிக்க வைத்தவை. உங்களுடைய நாவை அடக்காமல் நீங்கள் பேசியதாலே, உங்களுடைய வெற்றி அவர்கள் பக்கம் ஈஸியாக சென்றது. எப்படி என்றால் அவர்களுக்கும், உங்களுக்கும் உள்ள ஓட்டு வித்தியாசமே சாட்சி. எந்த அனுபவமே இல்லாமல் முதல் முறையாக நின்ற அவர்களை உங்கள் நாவாலேயே வெற்றி பெறவைத்தீர்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், உங்கள் பட கிளைமாக்ஸை போல இயக்குனர் இமயம் என்ற பாரதிராஜாவும், சீமானும் உங்களுக்காக விட்ட அறிக்கை பாண்டவர் அணியின் வெற்றியை உறுதி செய்தது.

நாவடக்கம் வேண்டும்!


சரத்குமார் அணி இனிமேலாவது நாவை அடக்கி, ஒற்றுமையுடன், பாண்டவர் அணியுடன் சேர்ந்து, உங்கள் சங்கத்து குடும்ப பிரச்னைகளை நீங்களே சரி செய்து தமிழ் சினிமாவை மேம்படுத்துங்கள்!

இப்படிக்கு,

ஒரு தமிழன்