ரெகுலர்
ஸ்பெஷல்
Published:Updated:

நாட்டு வைத்தியம்! -அன்னமேரி பாட்டி

நாட்டு வைத்தியம்! -அன்னமேரி பாட்டி

நாட்டு வைத்தியம்! -அன்னமேரி பாட்டி
நாட்டு வைத்தியம்!
அன்னமேரி பாட்டி
நாட்டு வைத்தியம்! -அன்னமேரி பாட்டி
நாட்டு வைத்தியம்! -அன்னமேரி பாட்டி
நாட்டு வைத்தியம்! -அன்னமேரி பாட்டி

'பனி காலம் வந்தாப் போதும்.. இருமலும் சளியும் சிறுசுகளை சட்டுனு பிடிச்சுக்கிட்டு இம்சைப்படுத்தும். அந்த இம்சைகள வெரட்டுற மூலிகைகளப் பார்ப்போம் வாங்க..

குழந்தைகளின் இருமலுக்கு..

சின்ன துண்டு (ஒரு கணு) சித்தரத்தையும் ஒரு ஸ்பூன் பனங்கல்கண்டையும் ஒரு டம்ளர் தண்ணிய விட்டு அரை டம்ளரா காய்ச்சணும். ஒரு வேளைக்கு ஒரு பாலாடை (சங்கு) அளவு, இதை ஒருநாளைக்கு 3 இல்ல.. 4 வேளை கொடுத்துட்டு வந்தா வறட்டு இருமல் விலகும். மூணு மாச பச்சைக் குழந்தையிலருந்து ரெண்டு வயசுக் குழந்தைங்க வரைக்கும் இதக் கொடுக்கலாம்.

பல்லு மொளச்ச பிள்ளைகளுக்கு, நெய்யில 10 தூதுவளை இலைகள வதக்கி, (பெரியவங்கன்னா.. ஒரு கைப்பிடி இலை) அப்படியே மென்னு தின்ன வச்சா இருமல் அண்டாது!

10 உத்தாமணி இலைகள எடுத்து சாறு பிழிஞ்சிக்கணும். ஒரு பட்டாணி அளவு சுண்ணாம்புல இதைக் கலந்து தொண்டைக் குழியில தடவி வந்தா இருமல் 'சட்'டுனு நிக்கும்.

இருமலும் சளியும் வந்து மூச்சு விட முடியாம சில குழந்தைங்க திணறிப் போயிரும். இந்தக் கோளாறை 'தெக்கத்திக்கணை'னு சொல்லுவாக. இதுக்கு.. தூதுவளை இலைய கசக்கி, அதுல மூணு சொட்டு சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் தேன் கலந்து குழந்தைக நாக்குல தடவுங்க. நல்ல குணம் தெரியும்.

இலைகளை எடுத்த தூதுவளை குச்சிய (தண்டு) நல்லா காய வச்சு இடிச்சுப் பொடியாக்கி சலிச்சுக்கணும். இத காத்துப் புகாத டப்பாவுல போட்டு வெச்சிக்கிடுங்க. மிளகு அளவு இந்தப் பொடிய எடுத்து, தேனுல குழப்பி நாக்குல தடவுங்க. இப்படி 4 வேளை கொடுத்திட்டு வந்தா தெக்கத்திக்கணை சரியாப் போயிரும்.

நாட்டு வைத்தியம்! -அன்னமேரி பாட்டி

நாட்டுக்கோழி முட்டையோட மஞ்சக் கருவை கரண்டில ஊத்தி, லேசான சூட்டுல காய்ச்சினா எண்ணெய் வரும். இதுல மிளகு அளவு கோரோசனை (நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்) கலந்து இழைச்சு, உள்ளுக்குக் கொடுத்துட்டு வந்தா இருமல், கணை இழுப்பு குணமாகும்.

மூணு அங்குல இண்டந்தண்டை குச்சியை (இண்டு) ராத்திரியே ஒரு டம்ளர் தண்ணில ஊற வச்சு, காலையில தண்டை மட்டும் எடுத்து தண்ணி இல்லாம நல்லா துடைச்சிக்கணும். இது குழல் மாதிரி இருக்குறதால ஒரு பக்க துவாரம் வழியா ஊதினா அரை (அ) ஒரு ஸ்பூன் அளவுக்குத் தண்ணி வரும். இந்தத் தண்ணி கூட மிளகு அளவு கோரோசனை கலந்து காலையில வெறும் வயித்துல 3 நாள் தொடர்ந்து கொடுத்து வந்தா கணை இழுப்பு, சளி, இருமல்.. எல்லாம் ஓடியே போயிரும்.

நாட்டு வைத்தியம்! -அன்னமேரி பாட்டி

-இன்னும் சொல்றேன்

   
   
நாட்டு வைத்தியம்! -அன்னமேரி பாட்டி
நாட்டு வைத்தியம்! -அன்னமேரி பாட்டி