Published:Updated:

அதிர்ச்சி தகவல் : மகாராஷ்ட்ராவில் இந்த ஆண்டில் 2 ஆயிரத்து 16 விவசாயிகள் தற்கொலை

விகடன் விமர்சனக்குழு
அதிர்ச்சி தகவல் : மகாராஷ்ட்ராவில் இந்த ஆண்டில் 2 ஆயிரத்து 16 விவசாயிகள் தற்கொலை
அதிர்ச்சி தகவல் : மகாராஷ்ட்ராவில் இந்த ஆண்டில் 2 ஆயிரத்து 16 விவசாயிகள் தற்கொலை

காராஷ்ட்ரா மாநிலத்தில் இந்த ஆண்டில் செப்டம்பர் மாதம் வரை 2016 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

அதிர்ச்சி தகவல் : மகாராஷ்ட்ராவில் இந்த ஆண்டில் 2 ஆயிரத்து 16 விவசாயிகள் தற்கொலை

மகாராஷ்ட்ராவில் வறட்சி காரணமாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.  மழை பொய்த்து போவதால், மனதளவில் பாதிக்கப்படும் இந்த விவசாயிகள் தற்கொலை முடிவை எடுக்கின்றனர். விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க ஏராளமான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போராடி வருகின்றன. நடிகர் நானா படேகர் உள்ளிட்டோரும் கூட விவசாயிகளுக்கு தங்களால் இயன்ற வரை நிதியுதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் இந்த ஆண்டில் மகாராஷ்ட்ராவில் மட்டும் 2 ஆயிரத்து 16 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது செப்டம்பர் மாதம் வரையிலான கணக்குதான்.

கடந்த 2009ம் ஆண்டு 1,600 விவசாயிகளும், 2010ம் ஆண்டு 1,740 பேரும் தற்கொலை செய்துள்ளனர். இதுவே 2011ம் ஆண்டு 1495 பேராகவும், 2012ம் ஆண்டில் 1467 பேராகவும், 2013ம் ஆண்டு 1298 பேராகவும் குறைந்தது.  2014ம் ஆண்டு 1949 பேராக அதிகரித்தது.

மகாராஷ்ட்ராவில் விதர்பா, மராத்வாடா பகுதியில்தான் அதிகளவு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். 19 மாவட்டங்கள் உள்ளடக்கிய இந்த பகுதியில் விதர்பாவில் 1010 பேரும், மராத்வாடாவில் 695 பேரும் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.