Published:Updated:

கடலூர் கற்றுத்தராத பாடம்

விகடன் விமர்சனக்குழு
கடலூர் கற்றுத்தராத பாடம்
கடலூர் கற்றுத்தராத பாடம்
கடலூர் கற்றுத்தராத பாடம்

விழுந்த மரங்கள், முறிந்த மின்கம்பங்கள், உருத்தெரியாமல் போன சாலைகள், உடைந்த பாலங்கள் என இந்த புயலுக்கு வட மாவட்டங்கள் குறிப்பாக நெய்வேலி , கடலூர் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கடலுார் சுற்றுப்புற பகுதிகளின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு வெள்ளக்காடாய் காட்சி அளிக்கின்றன.

குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் புகுந்து மக்களை துயரத்தில் ஆழ்த்திவிட்டது இந்தப் புயல். பெரும்பான்மையான புயல்கள் கடலூரிலேயே கரையைக் கடக்கின்றன. புயல் வரும் என்பதை சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் மூலமே தெரிந்து கொள்ள முடிகிறது.

கடந்த காலங்களில் ஒவ்வொரு புயல், மழை காலங்களில் கடலூர் சுற்றுப்புற பகுதிகள் மீளமுடியாத பாதிப்புக்குள்ளாவதை ஒவ்வொரு முறையும் நாம் கண்டுகொண்டுதான் இருக்கிறோம்.

தானே புயலால் கடலூர் சுற்றுப்புற பகுதிகள் அடைந்த பாதிப்புகளிலிருந்து அங்குள்ள விவசாயிகள் பொதுமக்கள் பலர் இன்னமும் மீளவில்லை என்பது கண்கூடு. அன்றாடம் செய்திகளில் இடம்பெறும் இந்த தகவல்கள் சாதாரண மனிதரையே உச் கொட்டவைக்கிறது. ஆனால் அரசு......?

கடலூர் கற்றுத்தராத பாடம்

இவ்வளவு அறிவியல் முன்னேறிய நிலையில் கடலூர் பகுதியில் ஒரு வானிலை ஆராய்ச்சி நிலையம் அமைக்கக் கூடாதா? இது மட்டுமல்லாமல் ஒவ்வொரு மழையால் நீர் வீணாகிப் போகும் நிலைக்குக் காரணம் என்ன? வடிகால் வசதி இல்லை - விளை நிலங்கள் மனைகளாக மாற்றப்பட்டு விட்டன - ஏரிகள் காணாமல் போய்விட்டன.

கடலூர் கற்றுத்தராத பாடம்

மழைநீர் போகும் இடம் இன்றி குடியிருப்பு பகுதிகளை குளம் ஆக்கிவிட்டது. எந்த அரசும் இதைப் பற்றி கவலைப்படுவதில்லை. காணாமல் போன ஏரிகளை கண்டறிய வேண்டும். சிறு அணைகள் ஆங்காங்கே கட்டலாம். நதிகளை இணைக்க முயற்சிக்க வேண்டும். இதனால் பல பேருக்கு வேலை வாய்ப்பு கிட்டும். நீர் ஆதாரம் பெருகும். வெள்ள பாதிப்பு விலகும்.

கடலூர் கற்றுத்தராத பாடம்

இலவசங்களை கொடுத்து மக்களை சோம்பேறிகள் ஆக்காமல் மக்களுக்கான அவசிய தேவைகளில் எல்லா கட்சிகளும் கவனம் செலுத்தவேண்டும். அதிகார பீடத்துக்கு வரும் கட்சிகள் இதனை செய்ய முன் வருமா?

-ஷான்