Published:Updated:

அன்று எதிரிநாட்டுடன் இன்று சொந்த நாட்டுடன்; ராணுவ வீரர்களின் 'போர் தந்திரம்!'

ராணுவத்திற்கான ஒரு பதவி, ஒரு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள முரண்பாடுகளை நீக்காமல், அதனை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, முன்னாள் ராணுவ வீரர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட பதக்கங்களையும் விருதுகளையும் திருப்பியளிக்கும் போராட்டத்தை டெல்லியில் துவக்கியுள்ளனர். இந்த செய்தி மிகவும் வேதனையை உருவாக்கியுள்ளது.

தலைநகர் டெல்லி ஜந்தர்மந்தரில், ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் ஏராளமானோர் தங்களுக்கு வழங்கப்பட்ட பதக்கங்களை திருப்பியளித்து வருகின்றனர்.

இதுமட்டுமின்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பதக்கங்களை திருப்பியளிக்கும் போராட்டம் நடத்தப்படும் என, ஒரு பதவி ஒரு ஓய்வூதிய திட்டத்திற்கு எதிரான போராட்டக் குழு அறிவித்துள்ளது.

எந்த ஒரு ஆட்சியிலும் இல்லாத ஒரு போராட்டமாக நாட்டின் நடக்கும் வன்கொடுமைகளை கண்டு கொதித்தெழுந்து, பெருமையாக தாங்கள் பெற்ற  விருதுகளை எழுத்தாளர்கள், திருப்பி அளித்தது போய், இன்று எதிரிகளை வீழ்த்தி, நாட்டை காக்க தாங்கள் பெற்ற பெருமைமிகு வீரதீர விருதையும், பதக்கங்களையும் வீரர்கள் திருப்பி அளிக்கிறார்கள் என்றால் இதனை விட அவலம் வேறேதுவும் கிடையாது.

அன்று எதிரிநாட்டுடன் இன்று சொந்த நாட்டுடன்; ராணுவ வீரர்களின் 'போர் தந்திரம்!'

சராசரி ஒரு இந்திய பிரஜைக்கு கொடுக்கும் மரியாதையை விட, குறைந்தது 10 மடங்காவது கூடுதல் மரியாதையும், சலுகைகளும் கொடுத்து எந்தவித சங்கடமும் இன்றி அவர்கள் தங்களது முதுமையை கழிக்க மத்திய அரசு தயங்ககூடாது.

அன்று எதிரிநாட்டுடன் இன்று சொந்த நாட்டுடன்; ராணுவ வீரர்களின் 'போர் தந்திரம்!'

இப்படிப்பட்ட  முன்னுதாரணம் உலகின் எந்த ஒரு நாட்டிலும் நடந்த வரலாறே கிடையாது.  இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக, உலகம் சுற்றுவதனை விட்டுவிட்டு பிரதமர் மோடி, உள்நாட்டு பிரச்சனைகளில் தனி கவனம் செலுத்தி உடன் தீர்வு கண்டு, எதிரி நாட்டோடு போராடிய முன்னாள் ராணுவ வீரர்களை இன்று, சொந்த நாட்டோடு போராடும் அவலத்தை வேடிக்கை பார்க்காது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

அப்பர்சுந்தரம் ( மயிலாடுதுறை)