Published:Updated:

எதையும் தாங்கும் இணையம் உறங்குவது இங்கேதாங்க‌!

எதையும் தாங்கும் இணையம் உறங்குவது இங்கேதாங்க‌!
எதையும் தாங்கும் இணையம் உறங்குவது இங்கேதாங்க‌!
எதையும் தாங்கும் இணையம் உறங்குவது இங்கேதாங்க‌!

'நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இருப்பு பிறரை சபலப்படுத்துவதாக இருக்கவேண்டும்' என்ற உயரிய நோக்குடன் இருக்கும் சன்னி லியோனை நீங்கள் ஃபேஸ்புக்கில் பின்பற்றுவதற்கு தேவை இணையம்.

விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் என்னதான் ஒருவர் மீது ஒருவர் கடும் விமர்சனம் வைத்தாலும், அவர்களின் புதுப் படத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்ய உங்களுக்குத் தேவை இணையம். உப்பில்லா பண்டம் குப்பையிலே, இணையம் இல்லா கம்யூட்டர் 'ரீசைக்கிள் பின்'னிலே என்பார்கள் நமது இணைய முன்னோர்கள்.

இவ்வளவு அருமைப் பெருமைகளை வைத்திருக்கிற இந்த இணையம் எங்கிருந்து வருகிற‌து என்று கூரைகொட்டகைக்கு அடியில் உட்கார்ந்து யாராவது உங்களை அடித்துக்கேட்டால் என்ன சொல்வீர்கள்? இதோ இந்த கம்ப்யூட்டரில் இருந்து வருது; அதோ அந்த ஆண்ட்ராய்டு மொபைலில் இருந்து வருது; செங்குத்தா நிக்கிற செல்போன் டவரில் இருந்து வருதுனு சொன்னால்  நீங்கள் கம்ப்யூட்டர் இல்லிட்டரேட். இணையம் எங்கிருக்குன்னு சொல்றோம் கேட்டுக்கங்க. இணையத்தின் மூலம்...

இணையம் சரி... அது எங்கிருக்குன்னு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டாரு நம்ம 'பீட்டர் கேரட்டினோ'. ஆமா ஆமா, அவரும் அமெரிக்கக்காரருதான். அங்கிருக்கிற பிரபலமான புகைப்படக்காரர்கள்ல ஒருத்தரு!

இணையம் என்பது கடவுள் மாதிரி கண்ணுக்குத் தெரியாது, ஆனால் ஃபீல் பண்ண முடியும்னு சொன்ன டயலாக்கை எல்லாம் பீட்டர் நம்பவில்லை. கோடிக்கணக்கான டேட்டாக்களை சுமந்து செல்கிற இந்த இணையத்திற்கான அட்ரஸ் பூமிப்பந்தில் எங்கிருக்கிறது என தெரிந்துகொள்ள பீட்டருக்கு பேரவா.

எதையும் தாங்கும் இணையம் உறங்குவது இங்கேதாங்க‌!

மொபைல், டேட்டாகார்டு, லேண்ட்லைன் மற்றும் செல்போன் வழியாக இணையச் சேவையை வழங்குகிற எல்லா நிறுவனங்களின் நெட்வொர்க் கேபிள்களும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சங்கமம் ஆகும். அந்த இடத்திற்குப் பெயர் கேரியர் ஹோட்டல். அதுக்காக தலப்பாகட்டி பிரியாணி எல்லாம் கிடைக்குமான்னு கேட்டிடாதீங்க; இது வேற ஹோட்டல். இந்த பல்வேறு நிறுவனங்களின் நெட்வொர்க்கும் இந்த ஹோட்டலில் ஒன்றுசேர்ந்து மிகப்பெரிய ஒற்றை பெரிய நெட்வொர்க் ஆகும்.

இங்கு இணையசேவை நிறுவனங்கள் மட்டுமின்றி, பெரிய டேட்டா சேவை நிறுவனங்களான மைக்ரோ சாஃப்ட் மற்றும் கூகிள் போன்றவை தமக்கென தனித்தனி நெட்வொர்க்கை வைத்திருக்கும்.

எதையும் தாங்கும் இணையம் உறங்குவது இங்கேதாங்க‌!

அமெரிக்காவில் இருக்கும் கேரியர் ஹோட்டல்கள் சிலவற்றை தொடர்புகொண்டார் பீட்டர். 'ஒரே ஒரு நாள் இன்ப சுற்றுலா மாதிரியோ கல்விச் சுற்றுலா மாதிரியோ உங்க ஹோட்டலை சுத்தி பார்த்துக்கலாமா' என்பது பீட்டரின் விண்ணப்பம். சீந்துவார் இல்லை. தொடர் முயற்சியின் பலனாக அவருக்கு ஒரு ஹோட்டலில் அனுமதி கிடைத்தது. ஏகப்பட்ட செக்யூரிட்டி கெடுபிடிகளுக்குப் பிறகு, இணையத்தின் உள்ளே சென்றுபார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

எதையும் தாங்கும் இணையம் உறங்குவது இங்கேதாங்க‌!

ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் உள்ளே சென்றார் பீட்டர். ஆனால், அங்கே சென்ற நிமிடத்தில் இருந்து போரடிக்கத் துவங்கிவிட்டதாம். காரணம், கிலோமீட்டர் கணக்காக நீளும் கேபிள்கள், தி.நகர் துணிக்கடைகளில் வரிசை வரிசையாக புடவைகளை அடுக்கி வைத்ததுப்போல நிறுத்தப்பட்டிருக்கும் சர்வர்கள், அவற்றை குளிர்விக்க பெரிய குளிரூட்டிகள்.

எவ்வளவு நேரம்தான் இவற்றையே வெறித்துக் கொண்டிருப்பது. போதாதற்கு மோடி கூடவே ஒட்டிக் கொண்டு வரும் போட்டோகிராபர் போல எல்லா இடங்களுக்கும் கூடவே ஒட்டிக்கொண்டு வந்தார் ஒரு செக்யூரிட்டி ஆஃபிசர். ’ஆளை விடுங்கடா சாமி’ என்ற வெளியில் வந்துவிட்டார் பீட்டர்.

எதையும் தாங்கும் இணையம் உறங்குவது இங்கேதாங்க‌!

ஆனால், இணையம் எங்கிருக்கிற‌து என இப்போழுது யாராவது அவரிடம் கேட்டால் அவருடைய பதில், "இணையம் மன்ஹாட்டனில் இருக்கும் ஒரு கேரியர் ஹோட்டலில் இருக்கிறது" என சுருக்கமாக முடித்துக்கொள்கிறார்.

- சீலன்    

(photo courtesy;  peter garittano)