Published:Updated:

''நேரம் கிடைக்கும்போது எல்லாம் நீச்சல்!''

அமலாபால் அழகு ரகசியம்

''நேரம் கிடைக்கும்போது எல்லாம் நீச்சல்!''

அமலாபால் அழகு ரகசியம்

Published:Updated:
##~##

பால் மட்டுமே குடித்து வளர்ந்த பறவைபோல் இருக்கிறார் அமலா பால். பால்யம் மாறாத சிரிப்பும் சிறு உதட்டுச் சுழிப்புமாக நெஞ்சுக்குள் தடதட கிளப்பியவரிடம் ஃபிட்னெஸ் ரகசியம் கேட்டேன்.

கலகலவெனச் சிரித்தார். ''இதுதான் என் பதில். எப்பவுமே சிரிச்ச முகமா இருக்கணும். அழகும் ஆரோக்கியமும் மனசு சம்பந்தப்பட்டது. நல்ல சாப்பாடு, தீவிரப் பயிற்சின்னு இருந்தாலும், மனசுல மகிழ்ச்சி இல்லைன்னா, உடம்பு கன்ட்ரோலை இழந்துடும். எங்க அப்பா சின்ன வயசுலயே கத்துக்கொடுத்த அழகு டிப்ஸ் இது. அவரோட கையைப் பிடிச்சுக்கிட்டு ஜாக்கிங் போறப்ப, ஹெல்த்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நேரம் கிடைக்கும்போது எல்லாம் நீச்சல்!''

சம்பந்தமான விஷயங்கள் நிறையச் சொல்வார். ஆரம்பத்தில் நான் சரியான முன்கோபி. சின்ன ஏமாற்றத்தைக்கூடத் தாங்கிக்க முடியாமல் டென்ஷனாகிடுவேன். அது அப்படியே முகத்தில் பிரதிபலிக்கும். 'எல்லாம் சில காலம்தான்’னு அப்பா சொன்ன வார்த்தைகளோட ஃபாலோ பண்ண ஆரம்பிச்சேன். இப்போ, வானமே கீழே விழுந்தாலும் 'ஹைய்யா... ஜாலி!’ன்னு கத்துற அளவுக்கு கூல் கேர்ள்!'' - மறுபடியும் சிரிக்கிறார் குறும்பாக.

''நாம என்னதான் மனசைச் சந்தோஷமா வெச்சுக்கணும்னு நினைச்சாலும், சூழ்நிலை அதுக்கு இடம் கொடுக்காது. கவலையும் சந்தோஷமும் கலந்ததுதான் வாழ்க்கை. பெரிய மனுஷி மாதிரி பேசுறதா நினைக்காதீங்க. மனசுக்கு எந்த விதத்திலாவது கவலை வந்தா, கண்ணை மூடிக்கிட்டு தண்ணிக்குள்ள குதிச்சிடுவேன். நீச்சல் மாதிரி நம்மை ரிலாக்ஸ் பண்ணிக்கிற பயிற்சி வேற எதுவும் இல்லை. எல்லாவிதமான நீச்சலும் எனக்கு அத்துப்படி. அதனால், தண்ணிக்குள் எவ்வளவு நேரம் வேணும்னாலும் கிடப்பேன். அதுவும் இந்த வெயில் காலத்துக்குச் சொல்லவே வேணாம். காலை, மாலை இரண்டு வேளையும் நீச்சல்தான். உடம்போட எல்லா பாகங்களுக்கும் தேவையான உடற்பயிற்சி கிடைக்கிறதோட, இதயத்துக்குத் தேவையான சுவாசப் பயிற்சியும் நீச்சலில் கிடைக்குது. கட்டுப்பாடே இல்லாம சாப்பிட்டாலும், நீச்சல் அடிச்சா... தொப்பை, உடல் பருமன் வரவே வராது. இந்த அளவுக்கு நீச்சலை நேசிக்கிற நான், இப்போ வரைக்கும் நீச்சல் காட்சிகளில் நடிச்சது இல்லை. நீச்சல் அடிக்கிறப்ப நம்மோட இரண்டு கைகளும் இறக்கை மாதிரி ஆகிடும். பறவையா மாறும் அந்த சந்தோஷத்துக்காகவே நேரம் கிடைக்கிறப்ப எல்ல£ம் நீச்சல்தான்!'' - ஜிலீரிடவைக்கும் அமலா பால், அடுத்து சொன்னதுதான் இன்னும் ஆச்சர்யம்!

''நேரம் கிடைக்கும்போது எல்லாம் நீச்சல்!''

''100 கிராம் அரிசியில் 340 கலோரி, 100 கிராம் பொட்டுக் கடலையில் 360 கலோரி, 100 கிராம் பாதாம் பருப்பில் 600-க்கும் மேற்பட்ட கலோரி, ஒரு முட்டையில் 170 கலோரி சக்தி இருக்கு. ஒவ்வொரு உணவுப் பொருளிலும் கலோரி, கொழுப்பு, கார்போ ஹைட்ரேட், நார்ச் சத்து, புரதம் உள்ளிட்டவை எவ்வளவு இருக்குன்னு தெளிவாத் தெரிஞ்சுக்கிட்டுதான் சாப்பிடுவேன். எவ்வளவு சக்திகொண்ட உணவுகளைச் சாப்பிட்டேனோ, அதை எரிக்கத் தேவையான பயிற்சிகளைப் பண்ணிடுவேன். அதனால், சாப்பாட்டில் எந்தக் கட்டுப்பாட்டையும் நான் வெச்சுக்கிறது கிடையாது. 'டயட்’னா என்னன்னு கேட்கிற பொண்ணு நான். மனசுக்கு எது பிடிச்சிருந்தாலும் சாப்பிடுவேன். சிக்கன் ரொம்ப விரும்பிச் சாப்பிடுவேன். 'வளரும் வயதில் வயித்துக்கு அளவு பார்க்கக் கூடாது’ன்னு சொல்வாங்களே... நான் அந்த ரகம். சத்தான உணவுகளைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடுவேன். உடல் குளிர்ச்சியைத் தக்கவைக்க கீரை உணவுகளை வீட்டில் சமைப்பாங்க. சாப்பாட்டில் எப்படி சுதந்திரமா இருக் கேனோ, அதேபோல்தான் உடற்பயிற்சிகளிலும். தினமும் ஜிம்முக்குப் போறது எனக்கு சாத்தியப்படாது. எப்போ நேரம் கிடைக்குதோ, அப்போ மட்டும் போவேன். இந்தச் சின்ன வயசிலேயே உடம்பை ரொம்பப் படுத்தி எடுக்கக் கூடாது. அதே நேரம் தினம் யோகா, ஏரோபிக்ஸ் பண்ணுவேன். நான் ரொம்ப ரசிச்சுப் பண்ற இன்னொரு பயிற்சி... டான்ஸ். அதிகமா சாப்பிட்டாலும், மனசை ரிலாக்ஸ் பண்ணிக்கணும்னு தோணினாலும், உடனே டான்ஸ்தான். பட்டையைக்  கிளப்புற பாட்டைப் போட்டு ஆடினால், அரை மணி நேரத்தில் எல்லா கவலை களும் அவுட்!'' - இடுப்பில் கை வைத்து ஸ்லிம் ரகசியம் சொல்லும் அமலா பால், இன்டர்நெட்டுக்குள் தலையைத் திணிக்கிற பார்ட்டியாம்!

''உலகத்தை விரல் நுனியில் வெச்சுக்கிறதுக்காக, நெட்டில் எல்லாவித விஷயங்களையும் பார்ப்பேன். முக அழகுக்காக பிரத்யேகமா எதுவும் பண்றது கிடையாது. நிறையத் தண்ணீர் குடிக்கிறதும் மனசை எப்பவுமே மகிழ்ச்சியா வெச்சுக்கிறதும்தான் என் அழகின் ரகசியம். கூடவே... நீச்சலும்!''

- இரா.சரவணன், படங்கள்: பொன்.காசிராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism