இந்தியாவின் பிரச்னைகளைப் பேசும்போது, இந்தியாவை முழுமையாகப் புரிந்துகொள்வது அவசியம். இந்தியாவை எப்படி முழுமையாகப் புரிந்துகொள்வது? ஒரே வழிதான், வேறு வாய்ப்புகள் இல்லை. கிராமங்களில் இருந்துதான் நம்முடைய பயணத்தைத் தொடங்க வேண்டும்!

காந்தி ஒரு முறை சொன்னார், ''கிராமங்களில்தான் இந்தியா வாழ்கிறது'' என்று. இன்றும் அதுதான் சத்தியம். நாம் எவ்வளவோ அலட்சியப்படுத்தினாலும், இன்றும் மூன்றில் இரண்டு பங்கு இந்தியா கிராமங்களில்தான் வாழ்கிறது.

பொதுவாக, கிராமங்களைப்பற்றிப் பேசினால், அது எங்கோ உள்ள, யாருடைய பிரச்னையோ என்பதுபோலப் பார்க்கும் மனோபாவம் இருக்கிறது. அப்படி அல்ல. நம்முடைய பல பிரச்னைகளுக்கான அடிப் படை, கிராமப்புறச் சூழல் சீர்குலைவினால்தான் உருவாகிறது. சொல்லப்போனால், நம்முடைய நகரங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கான வேர்களும்கூட கிராமங்களில் தான் இருக்கின்றன.

ஒரு கணம் யோசித்துப் பாருங்கள்... உலகிலேயே நகர்மயமாதல் மிக வேகமாக நடந்துகொண்டு இருக்கும் நாடு இந்தியா. ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கானோர் நகரங்களை நோக்கிப் படை எடுக்கிறார்களே, ஏன்? நகரங்களின் மீதான பிரியமா?

நகரங்களில் வாழும் ஒவ்வொரு கிராமத்தானின் இதயமும் அவனுடைய சொந்த ஊரில் புதைந்துகிடக்கிறது. கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வந்தவர்கள் எப்போதுமே நகரத்தை அந்நியமாகத்தான் பார்க்கிறார்கள். ஆனாலும், ஏன் நகரங்களை நோக்கியே நாம் நகர்கிறோம்?

அலட்சியம்! இது ஒன்றுதான் காரணம். நம்முடைய அரசுகள், கிராமங்களை ஒருபோதும் பொருட்படுத்துவதே இல்லை. இது ஒன்றுதான் காரணம்!

உங்களுக்கு திபங் பள்ளத்தாக்கு தெரியுமா? அருணாசலப்பிரதேசத்தில் உள்ள அற்புதமான இடம் அது. காலங்காலமாக அரசு நிர்வாகத்தால் புறக்கணிக்கப்பட்ட திபங் பள்ளத்தாக்குப் பகுதி, இப்போது தேசிய அளவில் பிரபலம். எப்படித் தெரியுமா? நாட்டிலேயே குறைவான மக்கள் அடர்த்திகொண்ட பகுதியாக திபங் பள்ளத்தாக்கு அடையாளம் காணப்பட்டு இருக்கிறது. ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அங்கு ஒருவர் மட்டுமே வசிக்கிறார்!

நினைத்துப் பாருங்கள்... இப்படிப்பட்ட பகுதி களில் வசிக்கும் ஒருவர், அத்தியாவசியப் பொருட் கள் வாங்க எத்தனை தொலைவு பயணிக்க வேண்டி இருக்கும்? ஓர் அவசர சமயத்தில் மருத்துவமனை செல்ல வேண்டி இருந்தால், எப்படிச் செல்ல முடியும்? குழந்தைகளுக்குப் பள்ளிக் கூடங்கள் எவ்வளவு தூரத்தில், என்ன தரத்தில் இருக்கும்? இத்தகைய பகுதிகளுக்குப் போக்குவரத்து வசதி எப்படி இருக்கும்?

திபங் பள்ளத்தாக்கு ஓர் உதாரணம்தான். இன்னமும் இந்தியாவின் 88 சதவிகிதக் கிராமங்கள் அடிப்படை வசதிகளைக்கூட முழுமையாகப் பெறவில்லை என்பதுதான் கசப்பான உண்மை!

அண்ணா ஹஜாரேவிடம் இந்தியா கற்றுக்கொள்ள வேண்டிய இரண்டாவது விஷயம்: கிராமங்களில் இருந்து வளர்ச்சியை எப்படி முன்னெடுப்பது?

அண்ணா ஹஜாரே தன்னுடைய வாழ்வைத் தன்னுடைய கிராமத்துக்காக அர்ப்பணிப்பது என்று முடிவெடுத்து, ராலேகான் சித்திக்குச் சென்றபோது, அந்த ஊரின் நிலைமை எப்படி இருந்தது தெரியுமா?

அப்போது ராலேகான் சித்தியின் மக்கள்தொகை 1,705. சுமார் 2,200 ஏக்கர் பரப்பளவுகொண்ட அந்தக் கிராமத்தில் அப்போது ஏறத்தாழ 1,700 ஏக்கர் சாகுபடி நிலம் இருந்தது. ஆனால், அதில் 125 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே சாகுபடி நடந்துகொண்டு இருந்தது. அதுவும் ஒரு போகம்தான். இத்தனைக்கும் ஆண்டுக்கு 500 மி.மீ. வரை அங்கு மழை பெய்தது. ஆனால், ராலேகானில் அப்போது குளங்கள் கிடையாது. அதனால், மழை நீர் முழுவதும் வீணானது. கோடையில் கடும் குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட்டது. வெளியூர்களில் இருந்து வரவழைக்கப்பட்ட தண்ணீர் வண்டிகளைத் தான் மக்கள் குடிநீருக்கே நம்பி இருந்தனர். கிட்டத் தட்ட 70 சதவிகித உணவு தானியங்கள், காய்கறிகள் வெளியூர்களில் இருந்தே வந்தன. கிராமத்தில் வேலைவாய்ப்புகள் ஏதும் இல்லாததால், மக்கள் பஞ்சம் பிழைக்கச் சென்றனர். உள்ளூரில் இருந்தவர்கள் சாராயம் காய்ச்சி, வெளியூர்களில் விற்றனர். பெரியவர்களின் கதியே இப்படி என்றால், குழந்தைகள் நிலை? அதுவும் அவர்களுடைய கல்வி நிலை? 1982-ல்தான் முதன்முதலில் பள்ளி இறுதிப் படிப்பை ஒரு மாணவி எட்டினாள். எனில், ராலேகான் சித்தி யின் சூழல் அப்போது எப்படி இருந்துஇருக்கும் என்று கற்பனை செய்துகொள்ளுங்கள்!

அதே ராலேகான் சித்தியின் இன்றைய நிலை என்ன தெரியுமா? அந்தச் சின்ன ஊருக்குள் 48 குளங்கள், 16 வழிந்தோடும் கால்வாய்கள், 5 தடுப்பணைகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. 1,500 ஏக்கர் பரப்பளவில் இரண்டு போக சாகுபடி நடக்கிறது. நல்ல விளைச்சல் காரணமாக 90 சதவிகிதத்துக்கும் மேலான தானியங்கள் வெளியூர் களுக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் 4,000 லிட்டர் பால் வெளியூர்களுக்குப் போகிறது. பால் வருவாய் மட்டுமே ஆண்டுக்கு ரூ. 1.5 கோடியைத் தாண்டுவதாகக் கூறுகிறார்கள். 10 ஏக்கர் பரப்பளவில், மக்கள் பங்களிப்பில் கட்டப்பட்ட பள்ளிக்கூடம், கிராமத்தில் இந்தத் தலைமுறையில் படிப்பு அறிவு அற்றவர்களே இல்லை என்ற சூழலை உருவாக்கி வருகிறது. ஒரு கிராமத்தை எப்படிக் கட்டி அமைப்பது என்று, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் இங்குள்ள பயிற்சி மையத்தில் வந்து கற்றுச் செல்கிறார்கள். நாட்டுக்கே ஒரு முன் மாதிரிக் கிராமமாகத் திகழ்கிறது ராலேகான் சித்தி!

ஆயிரக்கணக்கான திட்டங்கள், லட்சக்கணக்கான கோடிகளை வாரி இறைத்தும் நம்முடைய அரசாங்கங்களால் உருவாக்க முடியாத மாற்றம், ராலேகான் சித்தியில் மட்டும் எப்படிச் சாத்தியமானது?

அண்ணா ஹஜாரே சொல்லும் பதில் இது...

''கிராமங்களைப்பற்றிச் சிந்திக்கும் போது, கிராமத்தானாகச் சிந்திக்க வேண்டும். நம் நாடு பல்வேறு பூகோள அமைப்பு, பண்பாடு, வாழ்க்கைமுறைகளைக் கொண்டது. ஒவ்வொரு பகுதிக்கும் அதன் மண்ணுக்கும், மக்களுக்கும் ஏற்ற வளர்ச்சித் திட்டங்களே சரிப்பட்டு வரும். இப்படிப் பட்ட திட்டங்கள், அந்தந்தக் கிராமங்களில் இருந்து அரசை நோக்கிச் செல்ல வேண்டும். ஆனால், நம் நாட்டில் நடந்ததே வேறு. திட்டங்கள் அரசிடம் இருந்து கிராமங்களை நோக்கிச் சென்றன. ராலேகான் சித்தியில் நாங்கள் இதை மாற்றிச் செய்தோம். அதாவது கிராமத்தானாகச் சிந்தித்தோம். அவ்வளவே!''

- தொடர்வோம்...