''பத்தாம் வகுப்பு படிக்கும்போதுதான் 'ஆனந்த விகடன்’ என்ற சொல் என் காதில் விழுந்தது. ஆனால், விகடனை அப்போது நான் பார்த்தது இல்லை. என் நண்பன் மகாலிங்கம், 'டேய்! ஆனந்த விகடன் படிச்சியா? எவ்வளவு பிரமாதமா எழுதியிருக்கானுங்க தெரியுமா? அதுபத்தி உனக்கு எங்கேடா தெரியப்போகுது?’ என்பான். நான் எது பேசத் தொடங்கினாலும், 'நீ விகடனைப் படிக்கலை... நீ எதுவும் பேசாத!’ என என் வாயை அடைப்பான்.

ஒரு முறை எங்க டீச்சர் வீட்டுக்குப் பலாப்பழம் கொடுக்கப் போயிருந்தேன். டீச்சரின் அப்பா, ஊஞ்சலில் அமர்ந்தபடி ஆனந்த விகடன் படிச்சிட்டு இருந்தார். நான் பலாப் பழத்தை அறுத்துக் கொடுக்க, அவரும் சாப்பிட்டபடி மும்முரமா விகடன் படிச்சுட்டே இருந்தார். பலாப் பழப் பால் அவர் கையில் ஒட்டிக்க, எண்ணெய் எடுக்க உள்ளே போனார். அந்தச் சமயம், நான் விகடனை எடுத்து சரசரன்னு புரட்டினேன். கிடுகிடுன்னு பத்து படம் ஓடின மாதிரி இருந்துச்சு. அதுதான் விகடனுடன் என் முதல் அறிமுகம்!

ஒருநாள் எங்க அண்ணன் பழைய பிளாஸ்டிக் பொருட்களைக் கடையில் போட என்னிடம் கொடுத்து அனுப்பினார். அந்தப் பழைய பேப்பர் கடையில், கொஞ்சம் விகடன் இதழ்கள் சிதறிக்கிடந்தன. கடையின் சுவரில் சாய்ந்து அமர்ந்தபடி, 'இதுல அப்படி என்னதான்டா இருக்கு?’ன்னு புரட்டிப் பார்த்தேன். சமூகம், அரசியல், திரைப்படம் பற்றிய பார்வை, நகைச்சுவை என என்னென்னவோ இருந்தது. 'அய்யய்யோ! இவ்வளவு விஷயம் இருக்கா’ன்னு ஆச்சர்யம் எனக்கு. பிளாஸ்டிக் பொருட்கள் போட்டதில் பாதிக் காசுக்கு அங்கே இருந்த அத்தனை விகடன்களையும் அள்ளினேன்.

நான் விகடனில் படித்த முதல் கட்டுரை, தோழர் ஜீவாவைப்பற்றியது. தாம்பரம் பக்கத்தில் தங்கியிருந்த அவரைச் சந்திக்க காமராஜர் போகிறார். 'வாங்க’ன்னு அழைத்த தோழர், ஈரத் துண்டுடன் நிற்கிறார். துவைத்துப் போட்டு இருக்கும் வேட்டி காய்ந்தால்தான், அவர் வெளியில போக முடியும்னு வெளியாகி இருந்த அந்தச் செய்தி, என்னை ரொம்பவே பாதித்தது. அன்று நான் படித்தவை எல்லாம் இன்று பொக்கிஷம் பகுதியில் வந்துகொண்டு இருக்கின்றன.

ஆரம்பம் முதலே விகடனின் அரசியல் கட்டுரைகள் மீது எனக்கு அதீத ஈடுபாடு. 1983-ல் நான் திரைப்படக் கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தபோது, ஈழப் போர் உச்சத்தில் இருந்தது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் அங்கே இருந்து வெளியேற, தமிழகத்தில் மாணவர்கள், பொதுமக்களின் போராட்டம் விரிவடைகிறது. திரைப்படக் கல்லூரியை மூடணும்னு நாங்க பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தி மூடவைக்கிறோம். அன்று, அந்தப் போராட்டத்தில் ஈடுபட எனக்கு முனைப்பாக இருந்தது விகடனின் தலையங்கங்கள்தான். கட்டுரைகள், நெடுமாறன் அய்யா பேட்டிகள், பிரபாகரனின் புகைப்படங்களைப் பார்க்கும்போது, என் நரம்புகள் முறுக்கேறும்!

1989-ல் நான் ஒளிப்பதிவாளராக அறிமுகமான 'மழைச்சாரல்’ படம் வெளியாகி, சரியாக ஓடலை. அந்தப் படம்பற்றியும் விகடன்ல விமர்சனம் வரலை. 'விகடன்ல வரும் அளவுக்கு நம் படம் தகுதி இல்லைபோல’ன்னு அமைதியானேன். அதன் பிறகு 'தர்மசீலன்’ படம் பண்ணினேன். அந்தப் பட விமர்சனத்தில் படத்தின் என் ஒளிப்பதிவை, தேர்ந்த தொழில்நுட்ப நுணுக்கத்தோடு பாராட்டி இருந்தார்கள். அடுத்து 'மோகமுள்’ விமர்சனத்திலும் என் ஒளிப்பதிவுபற்றி ஒரு பத்தி. அடுத்தடுத்து, நான் பணியாற்றிய 10 படங்கள் ஓடவே இல்லை. அந்தச் சமயத்தில்தான் 'காதல் கோட்டை’ வெளியானது. படத்தைக் கொண்டாடியது விகடன். குறிப்பாக, என் ஒளிப்பதிவைப் பாராட்டியதோடு, படக் காட்சியை அட்டையாகவே போட்டு, 50 மதிப்பெண்கள் கொடுத்தது விகடன்.

அதன் பிறகு வெளியான, 'காலமெல்லாம் காதல் வாழ்க’ படமும் வெற்றி. ஆனால், அந்தப் பட விமர்சனத்தில் 'காட்சிகள் எல்லாமே அவுட் ஆஃப் ஃபோகஸ். மொத்தத்தில் ஒளிப்பதிவு சரியில்லை’ங்கிற தொனியில் எழுதிட்டாங்க. 'என் ஒளிப்பதிவை உலகமே கொண்டாடுது. நாம் கொண்டாடுற விகடன், ஏன் இப்படி பண்ணுச்சு?’ன்னு வருத்தம். உடனே, விகடன் ஆசிரியருக்கு 14 பக்கக் கடிதம் எழுதினேன். 'நான் இன்னார். ஒளிப்பதிவைக் கல்வியாகப் படித்தவன். இந்தந்த இலக்கியங்கள் படித்தவன். உலகத் திரைப்படங்கள் பார்த்தவன். ஏதோ மூன்றாம் தரப் பத்திரிகையில் இப்படி வந்திருந்தால், புறந்தள்ளி இருப்பேன். நான் விரும்பும் விகடனில் வந்துள்ளதால், மன உளைச்சலில் உள்ளேன். மறுபடியும் படம் பாருங்கள். தவறு இருந்தால், நீங்கள் சொல்வதை நான் கேட்கிறேன். இல்லை என்றால், நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்!’ - இதுதான் அந்த 14 பக்கக் கடிதத்தின் சாராம்சம். அந்தக் கடிதத்துக்குப் பதில்கூட வராது என்று எண்ணிய என்னை, விகடன் வியக்கவைத்தது.

முன்னர் விகடன் விமர்சனக் குழு புரொஜெக்டர் சரியில்லாத அண்ணா சாலைத் திரையரங்கு ஒன்றில், படத்தைப் பார்த்திருக்கிறது. அதனால், ஒளிப்பதிவின் தரம் அவர்களுக்குப் பிடிபடவில்லை. அந்தக் கடிதத்துக்குப் பின், வேறு ஒரு நல்ல திரையரங்கில் படத்தை மீண்டும் பார்த்திருக்கிறார்கள். பிறகு, என் நியாயமான கோபத்துக்கு மதிப்பளித்து, அடுத்த இதழின் முதல் பக்கத்திலேயே, 'ஸாரி மிஸ்டர் பச்சான்’ என்று வருத்தம் தெரிவித்து, ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியனின் விளக்கம் வந்தது. என்னை நேரில் அழைத்த அவர், 'பச்சான், நாங்கள் செய்த தவறுக்கு எங்களை நாங்களே தண்டிப்பதுபோல, இனி ஓர் ஆண்டுக்கு விகடனில் எந்த சினிமா விமர்சனத்தையும் வெளியிடப்போவது இல்லை’ என்றார். சொன்னதுபோலவே செய்தார். நான் ஆடிப்போனேன். விகடனிடம் மட்டுமே எதிர்பார்க்கக்கூடிய உச்சபட்ச நேர்மை அது. ஒரு படைப்பாளனின் நியாயத்தைப் புரிந்துகொண்டு அவனுக்குப் பதில் சொல்லும் பத்திரிகை தர்மம், விகடனைத் தவிர இன்று வேறு யாரிடமும் இல்லை!

இப்படி ஊடலும் கூடலுமாகத்தான் விகடனுடன் நெருங்கினேன். என்னைக் கூர்மைப்படுத்தியதும், உளவாளிபோலப் பின்தொடர்ந்து நான் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டியதும், எனக்குள் இருக்கும் நெருப்பு அணையவிடாமல், என் அரசியல் செயல்பாட்டைக் கூர்மைப்படுத்தியதும் விகடன்தான்.

'பாரதி’, 'பெரியார்’, 'குட்டி’, 'கருவேலம்பூக்கள்’ போன்ற மாற்று சினிமாக்களைத் தொடர்ந்து 'அழகி’ படம் மூலம் இயக்குநர் ஆனேன். 100 முறைகளுக்கு மேல் படத்தைப் போட்டுக்காட்டியும், யாரும் அந்தப் படத்தை வாங்க முன் வரவில்லை. படைப்பாளியையும், தயாரிப்பாளரையும் அவமானப்படுத்தியது திரையுலகம். பணம் இல்லாமல் சோர்ந்துபோய், இனி வெளியில் நடமாடவே முடியாது என்ற நிலையில் 'அழகி’யைத் தூக்கித் தூரப்போட்டேன். அப்போது சில பத்திரிகையாள நண்பர்கள் மட்டும் 'அழகி’ படம் பார்த்தனர். குறிப்பாக, விகடன் நண்பனின் விமர்சனத்தை நான் சொல்லியே தீரணும். 'இந்தப் படம் வேற ஒரு பாதையைத் திறந்துவிட்ருச்சுங்க. நீங்க பாருங்க... இனி யதார்த்த சினிமாவுக்கு உங்க படம்தான் அளவுகோல்’ என்ற மயிலிறகு வருடல், அந்தத் தருணத்தில், எனக்கு மிகப் பெரிய ஆறுதல். பிறகு, 'அழகி’யைப்பற்றி தனக்கே உரிய நடையில் அழகாகச் செதுக்கி எழுதியது விகடன். படம் பிரமாதமான வெற்றி!

சமூகத்துக்குத் தேவையான மனிதர்களை வளர்த்தெடுப்பதில், அரசியல் விமர்சனங்களை முன்வைப்பதில், இன்று விகடன்தான் முன் நிற்கிறது. மிக நேர்மையாக, கண்ணியமாக... அதுவும் அண்மைக் கால ஆனந்த விகடன் நெருப்பு போன்று உள்ளது. ஒரு சொல்லைக்கூட வீணாக்காமல் ப.திருமாவேலன் எழுதும் அரசி யல் கட்டுரைகள்தான் விகடனைத் திறந்ததும் நான் படிக்கும் முதல் பகுதி. விகடனின் இளைஞர் பட்டாளம் ஒவ்வொரு இதழையும், மக்கள் பார்வையில் கொண்டுசேர்ப்பதற்கு, போர் வீரர்கள்போல உழைக்கிறார்கள். அவர்களின் அறிவு சார்ந்த உழைப்பைக் கண்டு நான் மிரள்கிறேன். 'பார்க்க... படிக்க... பாதுகாக்க...’ என்று சொல்வது ஆனந்த விகடனுக்கு மட்டுமே பொருந்தும்!

பொதுவாக, சமூகத்தில் விளம்பரமே இல்லாதவர்களைப் பத்திரிகைகள் புறக்கணிக்கும். இதை யும் உடைத்தது விகடன்தான். நெடுமாறன் அய்யா, கொளத்தூர் மணி அண்ணன், தியாகு, மணியரசன் போன்ற ஜீவனுள்ள தமிழ் அரசியல் பேசுபவர்களை மக்கள் முன் நிறுத்தியது விகடன்தான். தீவிரமான சிறுகதைகளை, விகடன்போல எந்த ஒரு வணிகப் பத்திரிகையும் தமிழ்நாட்டில் வெளியிடுவது இல்லை. 'இசைக்காத இசைத்தட்டு’, 'இன்னும் மறையவில்லை அந்தக் காலடிச் சுவடு’, 'உள்ளும் புறமும்’ உள்ளிட்ட விகடனில் வந்த என் சிறுகதைகள் அனைத்தும் தீவிர இலக்கியப் பத்திரிகைகளே திருப்பி அனுப்பியவை. அதேபோல் நவீன ஓவியர்களையும் அவர்களின் ஓவியங்களையும் வெகுமக்களுக்குக் கொண்டுசேர்ப்பதில் விகடனின் பங்களிப்பு முக்கியமானது. பிரபலங்கள் முதல் பாமரர்களின் வாழ்க்கை வரை விகடன் மட்டுமே தொடர்ந்து பதிவு செய்து வருகிறது.

விகடனின் சில கருத்துக்கள், அவர்களின் திரைப்பட விமர்சனங்களில் இருந்து முரண்படுவேன். கடுமையாக வாக்குவாதமும் செய்திருக்கிறேன். விகடனுக்காக என்று ஒருமுறைகூட நான் விட்டுக்கொடுத்ததே இல்லை. ஆனால், விகடன்தான் ஒவ்வொரு முறையும் எனக்காக விட்டுக்கொடுக்கிறது. சரி, தவறுகளுடன் என்னை, என் கோபத்தோடு ஏற்றுக்கொள்கிறது. 'நீ இன்னும் சரியா நடக்கணும்’ என்று உணர்த்தும் வழிகாட்டியாகவும், நண்பனாகவும் விகடன் உள்ளது. விகடனுடனான இந்த உறவுதான் நான் சேர்த்துவைத்துள்ள மிகப் பெரிய சொத்து!''