எம்.ஹரிஹரன், சென்னை-64.

அடுத்த தேர்தலில் தங்கள் சார்பில் போட்டியிட வருமாறு ஜெயலலிதா, கலைஞர், கேப்டன், டாக்டர், ராகுல்... இவர்கள் எல்லோரும் அழைத்தால் யாருக்கு ஓ.கே. சொல்வீர்கள்?

இவர்கள் அத்தனை பேரும் அழைப்புவிடும் அளவுக்கு எனக்குச் செல்வாக்கு இருந்தால், நானே ஒரு கட்சியை ஆரம்பித்துவிட்டுப் போகிறேன்!

பொன்விழி, அன்னூர்.

உண்மையான ஆன்மிகவாதியின் அடையாளம் என்ன?

அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. அவர் ஒரு சாதாரண குடும்பத் தலைவராகக்கூட இருக்கலாம். அவரும் தன்னைப்பற்றிச் சொல்லிக்கொள்ள மாட்டார். மற்றவர்களும் அவர் உயிரோடு இருக்கும் போது, அவரைப் புரிந்துகொள்ள மாட்டார்கள்!

சி.அன்பு கிருஷ்ணன், சேத்தியாத்தோப்பு.

சூனியம் வைத்து ஒரு மனிதன் மற்றொரு மனிதனைச் சீரழிப்பது என்பது எவ்வளவு உண்மை சார்?

சூனியம் என்று எதுவும் கிடையாது என்கிறார்கள் மனோதத்துவ விஞ்ஞானிகள். ஆனால், அதில் மனோதத்துவம் உண்டு. சூனியம் வைப்பதைவிட, ஒருவரிடம் சென்று 'உங்களுக்கு யாரோ சூனியம் வைத்திருக்கிறார்கள்...’ என்று சொன்னால் போச்சு! அந்தப் பயத்திலும் கவலையினாலுமே ஆசாமி சீரழிந்துவிடுவார்! அதாவது, அவரை ஒரு வழி பண்ணுவது Auto Suggestion - தான்!

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

உண்மையிலேயே பழத்துக்குக் கோபப்பட்டுதான் முருகன் பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு போனாரா?

பழத்துக்கு என்ன பெரிய வேல்யூ? முருகன் எதிர்பார்த்தது ரேஸ்! பந்தயத்தில் நேரிடையாகக் கலந்துகொள்ளாமல், ஹெலிகாப்டரில் போய் இறங்கிப் பரிசைத் தட்டிக்கொண்டு போவது 'ரூல்ஸ்’படி நியாயமா? 'பெற்றோர்தான் உலகம். உங்களைச் சுற்றி வந்தால் போதும்!’ என்று சென்டிமென்ட்டாக 'டச்’ பண்ணிவிட்டால், அதற்கு நெகிழ்ந்துபோவது நேர்மையா? ஆகவே, முருகனுக்கு கோபம் வந்துவிட்டது!

மற்றொரு வாதம்: இது சரி சமமான போட்டியா? முருகன், மயில் மீது ஏறிப் பறக்க முடியும். விநாயகர், எலி மீது ஏறிச் செல்ல வேண்டும். தொப்பை வேறு! 'இது நியாயமான பந்தயம் இல்லை. வேறு ஏதாவது 'ஐ க்யூ’ டெஸ்ட் வையுங்கள்!’ என்று அப்பா - அம்மாவிடம் முருகன் சொல்லிஇருக்க வேண்டாமா? இருப்பினும், முருகன் நேர்மையாகப் போட்டியில் கலந்துகொண்டார். விநாயகர்... புத்திசாலித்தனமாக!

முத்துசாமிபாண்டியன், சத்திரப்பட்டி.

எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம், அரசியலில் இடதுசாரி, வலது சாரி என்றால் என்ன? இத்தகைய பிரிவு ஏன், எங்கே தோன்றியது?

ஒரு காலத்தில் இடது (Left) என்றாலே, சற்று அச்சத்துடன் அதை ஒரு தீய சக்தியாகப் பார்த்தார்கள். இடது கைக்காரர்களைச் சாத்தான் இயக்குவதாக ஒரு நம்பிக்கை இருந்தது. இந்த அபத்தமான கருத்து, பிற்பாடு அகன்றுவிட்டது. இடதுசாரி என்றால் (வலது சாரியைவிட!) தீவிரமான கருத்துகொண்டவர்கள் என்கிற அர்த்தம் வந்தது. (நம்ம யுவராஜ் சிங் மாதிரி, இடது கையால் விளையாடுபவர்கள் இன்னும் பிரமாதமாக சிக்ஸர் அடிப்பார்கள்!) பிரெஞ்சு நேஷனல் அசெம்ப்ளி (நாடாளுமன்றம்), 1789-ல் கூடியபோது, தீவிரமான கருத்துகொண்டவர்களை சபாநாயகர் தனக்கு இடது புறத்தில் (Left side of the Assembly) உட்காரச் சொன்னார். அதில் இருந்து, அவர்களுக்கு இடதுசாரிகள் (Leftists) என்று நாமகரணம் சூட்டப்பட்டது!

சுமாலி, மேலப்பாலையூர்.

பலதாரப் பழக்கம் பாரதத்தில் நடைமுறையில் இருந்த காலம் உண்டு. திடீர் என்று 'ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற நடைமுறை எந்தக் காலத்தில் இருந்து அனுசரிக்கப்பட்டது?

எப்போதுமே சாமான்யர்கள் பலதாரம் வைத்துக்கொள்வது நடைமுறையில் சாத்தியம்இல்லை. கட்டுப்படி ஆகாது என்பதுதான் காரணம்! அரசர்கள், அந்தப்புரத் தில் ஆயிரம் 'மனைவி’களைக்கூட

வைத்துக்கொள்ள முடிந்தது. அது அவர்களுக்கு 'ஸ்டாம்ப்’ சேகரிப்பது போலத்தான். அக்பரின் அந்தப்புரத்தில் 400-க்கும் மேற்பட்ட பெண்கள் இருந்தார்கள். அக்பர் The Great என்றாலும்கூட, அத்தனை மனைவிகளையும் அவரால் திருப்திப்படுத்தி இருக்க முடியுமா?! வம்ச விருத்தி, வருமானம் இரண்டுக்கும் ஒரு மனைவியே சௌகர்யமானது!

மகிசுந்தர், தானம்.

உங்களுக்கு லவ் லெட்டர் எழுதிய அனுபவம் உண்டா?

நிறைய எழுதியிருக்கிறேன் - மனசுக்குள்! அவற்றை யார் வேண்டுமானாலும் Download பண்ணுகிற டெக்னாலஜி மட்டும் வந்துவிட்டால்..? ஐயோ, நினைக்கவே பயமா இருக்கு!