Published:Updated:

ரஜினிக்குப் பதில் வெங்கடேஷ்!

ரஜினிக்குப் பதில் வெங்கடேஷ்!

##~##

'என்னை யாராவது 'வாழும் எம்.ஜி.ஆர்’னு சொன்னா சந்தோஷம். வேஷம் போடுறதோட, அவரை நான் மறந் துடற ஆள் இல்லை. அவரை மாதிரியே வாழணும்னு 18 வருஷமா தண்டால், பஸ்கி எடுக்கறேன். கர்லா  கட்டை சுத்துறேன். ஹேர் ஸ்டைல், புருவத்தைத் தலைவர் மாதிரி மாத்திவெச்சிருக்கேன். அவரை மாதிரி ஃபிட்டா இருக்கணும்னு எல்லா இடத்துக்கும் நடந்தே போய்ட்டு இருக்கேன். அதனால, அவசரத்துக்கு பஸ் பிடிக்க ஓடுனா கூட எம்.ஜி.ஆர். மாதிரிதான் ஓட வருது!'' -முருகன் இயல்பாகப் பேசினாலும் அவரது முகத்தில் அவரை அறியாமலேயே எம்.ஜி.ஆரின் மேனரிஸம் மின்னி மறைகின்றன. மதுரையில் ஒரு காலத்தில் எட்டுத்திக்கும் பேசப்பட்ட 'அபிநயா நடன நாட்டியக் கலைக் குழு’ இப்போது எப்படி இருக்கிறது?’ என்று எட்டிப் பார்த்த போது, இப்படி அறிமுகமானார் முருகன்.

ரஜினிக்குப் பதில் வெங்கடேஷ்!

வேட்டியை ஒரு கையால் தூக்கிப் பிடித்தபடி என்ட்ரி கொடுக்கிறார் 'சிவாஜி’ சுரேஷ். ''அண்ணன் 18 வருஷமா எம்.ஜி.ஆர் வேஷம் கட்டுறாரு. நான் 10 வருஷமாத்தான் சிவாஜி வேஷம் போடுதேன். ஆனா, 'கொடுத்ததெல் லாம் கொடுத்தான்’ பாட்டுக்கு அவரைவிட எனக்குத்தான் மீனவ எம்.ஜி.ஆர். வேஷம் கச்சிதமா இருக்கும்!'' என்று சொல்ல, நம்பர் ஒன் எம்.ஜி.ஆரின் முகத்தில்  வாட்டம்.

வானத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே வருகிறார் 'ரஜினி’ சம்பத். 'ரஜினி வேஷம் போட்டாப் போதாது. மேடைக்கு வந்தா ஆடியன்ஸ்லாம் ச்சும்மா அதிரணும். அதான் ரஜினி. 'அண்ணாமலை’, 'பாட்ஷா’ காலத்து ரஜினியிலேயே நாம நின்னுட்டா, ரசிகர்கள் சலிப்படைஞ்சிடுவாங்க. அதனால ரோபா வரைக்கும் அப்டேட் பண்ணியாச்சி. ம்மேமேமேமேமே!'' என்று உதடு துடிக்க மிரட்டுகிறவரின் நிஜ வாழ்க்கை சோகங்கள் நிறைந்தது.

ரஜினிக்குப் பதில் வெங்கடேஷ்!

''எனக்கு ஜோடியா ஆடின ஷாலினியை இஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணிகிட்டேன். அவ சூப்பர் டான்ஸர். அதனால் சினிமாவுல ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஆகிட்டா. கொஞ்சம் விட்டிருந்தா டான்ஸ் மாஸ்டர் ஆகியிருப்பா. ஒரு தீ விபத்துல அவ உடம்பெல்லாம் கருகிடுச்சு. அதனால், இப்போ அவ டான்ஸ் ஆடுறது இல்லை. எங்களுக்குக் குழந்தையும் இல்லை. அதனால, தத்தெடுத்து வளர்க்கிறோம்!'' -ரஜினி யைப் போலவே கண்களின் கீழ் இமையைத் விரல்களால் தடவி கண்ணீரைத் துடைக்கிறார் சம்பத்.

''ஸ்க்ரீன்ல ரஜினி அழுதாலே, எங்களால தாங்க முடியாது. நீங்க அழாதீங்கண்ணே!''  என்று சம்பத்தைத் தேற்றுகிறார் தன்யா. 'நான் என்னோட ஆடின ராஜேஷைக் கல்யாணம் பண்ணிட்டேன். அவர் விஜய், சூர்யா வேஷம் போடுவாரு. நான் அசின், த்ரிஷா, தமன்னான்னு எல்லா நடிகை வேஷமும் போடுவேன். ஏதா வது புரொகிராம்னா குழந்தையை அம்மாகிட்டே கொடுத்துட்டு ரெண்டு பேரும் கிளம்பிப் போவோம்.அப்போதான் மனசுக்குக் கஷ்டமா இருக்கும்!'' என்று சிரிக்கிற தன்யாவுக்குப் பூர் வீகம் கேரளா. வேஷம் கட்டாமலேயே பேர ழகன் சூர்யா மாதிரி இருக்கிறார் கனகராஜ். ''நமக்கு விக்கிரமசிங்கபுரம். அங்கே பொட்டிக்கடை போட்டிருந்தேன். சொல்லிக்கிற மாதிரி வியாபாரம் ஆகலை. அப்புறம் அபிநயாவுக்கு ஆபீஸ் பாய் வேலை கேட்டு வந்தேன். என்னைப் பார்த்ததுமே பேரழகன் ஆக்கிட்டாங்க!'' என் கிறார் பூரிப்புச் சிரிப்புடன்!

நஜீம்தான் அபிநயாவின் சிம்பு. '' 'விண்ணைத் தாண்டி வருவாயா?’வுக்கு அப்புறம் விரல் வித் தையை விட்டுட்டேன். 'வானம்’ படத்துல சிம்பு என்ன பண்றாரோ, அதைக் கொஞ்ச நாள் மெய்ன்டெய்ன் பண்ணணும். தேவைப்பட்டா, 'குத்து’ சிம்புவா மாறுவேன்!'' என்கிற நஜீமை நிகழ்ச்சி இல்லாத நேரங்களில் பெரியார் பஸ் ஸ்டாண்ட் பக்கம் கையில் டூல்ஸுடன் பார்க்கலாம். காரணம், அவர் அங்கேதான் மெக்கானிக் ஷாப் வைத்திருக்கிறார்!

ரஜினிக்குப் பதில் வெங்கடேஷ்!

குழுவிலேயே கொஞ்சம் கலராக, இளம் தொப்பையோடு இருக்கிறார் ராஜ்குமார். அதனால், அவர்தான் 'தல’. 'அஜீத் பாட்டுக்கு மட்டும் இல்லாம பொம்மை டான்ஸ், வெரைட்டி டான்ஸ் எல்லாம் பண்ணுவேன். வெங்கடேஷ்தான் எங்க டீமோட சப்ஸ்டிட்யூட். ரஜினி, கமல், விஜய்னு யார் லீவு போட்டாலும், அந்தக் கெட் டப் போட்டு சமாளிப்பான். அதை ஸ்க்ரீனுக்குப் பின்னாடி இருந்து பாக்கும்போது செம காமெடியா இருக்கும்!'' என்று சிரிக்கிறார் தல.  

அபிநயா நிறுவனரான சுலைமான் சேட், ''1988-89ல் மதுரை வக்ஃப்போர்டு காலேஜ்ல படிக்கும்போது நான், பாலராகவன், ஜெயக்குமார்னு மூணு பேர் சேர்ந்து ஆரம்பிச்சதுதான் அபிநயா கலைக் குழு. அப்போ நடி கர்கள் மாதிரி யாரும் வேஷம் போட்டு நடிக்க மாட் டாங்க. அப்படிப் பண்ணினா எப்படி இருக்கும்ன்னு யோசிச்சு நடிகர்களை உருவாக்குனோம். செம ஹிட் ஆனோம். அப்பவே ஆனந்த விகடனில் அட்டைப் படக் கட்டுரையா இடம்பிடிச்சோம். அப்புறம் அபி நயாங்கிற பேர்லேயே 40 நடனக் குழுக்கள் வந்திருச்சு. சிலர், பெண்களை அரைகுறை ஆடையோட ஆட வெச்சாங்க. அதனால, போலீஸ்காரங்க நிகழ்ச்சியில் ஆடத் தடை விதிக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஒவ்வொரு முறையும், 'நாங்கதான் சார் ஒரிஜினல் அபிநயா’ன்னு விளக்கிச் சொல்லி, அனுமதி வாங்க வேண்டியிருக்கு.  பிரச்னைகள் அதிகமாகிட்டே போறதால் இப்போ ஆர்க்கெஸ்ட்ரா பக்கம் கவனம் செலுத்த ஆரம்பிச் சிட்டோம்!'' என்கிறார் வருத்தம் தோய்ந்த குரலில்!

- கே.கே.மகேஷ், படங்கள்: ஜெ.தான்யராஜு

ரஜினிக்குப் பதில் வெங்கடேஷ்!
அடுத்த கட்டுரைக்கு