Published:Updated:

ஒகேனக்கலில் மதுபாலா ஆடிய ஸ்பாட்!

##~##

ண்டு முழுவதும் 'ஹோ’ என ஆர்ப்பரிக்கும் அருவி ஒகேனக்கல். கோடையின் ஆரம்பத்திலேயே ஒகேனக்கல் களை கட்டத் துவங்கி விடும்.

  ஒகேனக்கல்லில் இறங்கியதும் முதல் வேலையாக, மதிய உணவுக்கு ஆர்டர் கொடுத்துவிட வேண்டும். ஹோட்டல்கள் இருந்தாலும், ஆர் டர் சாப்பாட்டு அங்கே பிரபலம்.  ஆற்றங்கரையில் அப்போதுதான் பிடித்த மீன்களை விற்கிறார்கள். தேவையான அளவு வாங்கிக் கொடுத்துவிட்டால், மீன் குழம்பு, மீன் வறுவல், சாப்பாடு, ரசம் என மணக்க மணக்க பெண்கள் வீட்டுச் சமையல் பக்குவத்தில் சமைத்துக் கொடுப்பார்கள். ஐந்து நபர்களுக்குச் சமைக்க சுமார்

ஒகேனக்கலில் மதுபாலா ஆடிய ஸ்பாட்!

500 கட்டணம். அம்மி யில் அரைத்த மசாலா, விறகு அடுப்பு சமையல்  என சுவை நாக்கைச் சப்புக் கொட்டச் செய்யும். இங்கு பிடிக்கும் ஆற்று மீனில் சமைத்தால்தான், சுவையும் மணமும் நிறைந்திருக்கும். வேறு எங்கோ பிடித்த மீன் களை கலந்து விற்க முயற்சிப்பார்கள்.  ஜாக்கிரதை!  

ஒகேனக்கலில் மதுபாலா ஆடிய ஸ்பாட்!

சாப்பாட்டுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டால், ஆனந்தமான எண்ணெய்க் குளியல் உங்களை வரவேற்கும். தலை, தோள்களுக்கு மசாஜ் செய்ய

ஒகேனக்கலில் மதுபாலா ஆடிய ஸ்பாட்!

50 கட்டணம். உச்சி முதல் பாதம் வரை யிலான மசாஜுக்கு

ஒகேனக்கலில் மதுபாலா ஆடிய ஸ்பாட்!

100 கட்டணம். பெண்களுக் காக பெண்களே மசாஜ் செய்வார்கள். அவர் கள் முறையான பயிற்சி பெற்றவர்களா என் பதை அடையாள அட்டையை வாங்கிப் பரி சோதித்த பிறகு, உங்கள் தலையைக் கொடுப் பது உசிதம். மசாஜுக்குப் பிறகு ஆசை தீர மெயின் அருவியில் குளிக்கலாம். குழந்தை களோடு குளிப்பவர்கள் ஆழம் குறைவான சினி ஃபால்ஸில் குளிக்கலாம். 'தொம் தொம்’ என்று தலை மோதும் அருவிக் குளியலுக்குப் பிறகு, அப்படி ஓர் அசுரப் பசி கிளம்பும். அப்போது ஆர்டர் கொடுத்த அயிட்டங்களை ஒரு பிடி பிடிக்கலாம்.

ஒகேனக்கலில் மதுபாலா ஆடிய ஸ்பாட்!

சாப்பிட்டு முடித்து தொங்குப் பாலத்தில் ஏறி நின்றால் காவிரியின் அசாத்திய தோற்றம் பிரமிக்கவைக் கிறது. மறுகரைக்குப் போனால் 'மீன் பிடித்து மீண்டும் ஆற்றில்விட ஆசை...’ என 'ரோஜா’வில் மது பாலா ஆடிய ஸ்பாட். அங்கே அருவியின் சாரல் மெத்தை நகரவேவிடாத மாய வித்தை!  இங்கு இருந்து பரிசல் பய ணம் ஒரு நபருக்கு

ஒகேனக்கலில் மதுபாலா ஆடிய ஸ்பாட்!

110  கட்டணம். ஒன்றரை மணி நேரம் பயணிக்கலாம். கர்நாடகா மாநில எல்லையில் இருக்கும் மாறுகொட்டாயுடன் திரும்புவதுதான் பாதுகாப்பு. சில நாட்கள் இங்கு தங்க விரும்புவோருக்கு சீஸனில்

ஒகேனக்கலில் மதுபாலா ஆடிய ஸ்பாட்!

500 முதல்

ஒகேனக்கலில் மதுபாலா ஆடிய ஸ்பாட்!

1,500 வரை வாடகையில் அறைகள் கிடைக்கின்றன. சீஸன் இல்லாத நாட்களில்

ஒகேனக்கலில் மதுபாலா ஆடிய ஸ்பாட்!

150 முதல்

ஒகேனக்கலில் மதுபாலா ஆடிய ஸ்பாட்!

600 வரை கட்ட ணம். தமிழ்நாடு ஹோட்டலில் குறைந்த பட்ச வாடகை

ஒகேனக்கலில் மதுபாலா ஆடிய ஸ்பாட்!

600. உடனே கிளம்பலாமா ஒகேனக்கல்லுக்கு!

- எஸ்.ராஜாசெல்லம், படங்கள்: எம்.தமிழ்செல்வன்

ஒகேனக்கலில் மதுபாலா ஆடிய ஸ்பாட்!
அடுத்த கட்டுரைக்கு