Published:Updated:

நடக்கும் குதிரை ஜெயிக்கும்!

##~##

ட்டியில் கோடை சீஸன் துவங்கும்போதே களைகட்டு கிறது குதிரைப் பந்தயம்! மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் ஏப்ரல் இரண்டாம் வாரம் துவங்கி ஜூன் வரை லட்ச ரூபாய் பந்தயங்களில் பறக்கின்றன குதிரைகள். ஊட்டி பஸ் ஸ்டான்ட் எதிரில் பசுமையாகக் காட்சி அளிக்கும் ரேஸ்கோர்ஸ் மைதா னத்தில் பந்தயக் குதிரைகள் பாய்ந்து செல்வதை ரசிப்பது த்ரில் ஜில்!

 இந்த ஆண்டு ஊட்டி குதிரைப் பந்தயத்தின் 125-வது ஆண்டு விழா. சுமார் 28 நாட்கள் நடைபெறும் பந்தயங்களில் கலந்து கொள்ளும் 500-க்கும் மேற்பட்ட குதிரைகள் அனைத்தும் சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்டவை. நாள் ஒன்றுக்கு ஒன்பது ரேஸ்கள் நடக்கும். பந்தயத்துக்கான பல விஷயங்கள் சென்னையில் இருந்தே ஆபரேட் செய்யப்படுகின்றன. பந்தயம் துவங்கும் முன்பாக மைதானத்தின் மானிட்டரிங் பாயின்ட் அருகில் குதிரைகள் வரிசையாக நடைபயிலும். அந்த நடை யைக் கவனித்துக் குதிரையின் திறமையைக் கணித்து,  விரும்பிய குதிரை மீது பணம் கட்டுகிறார்கள். பிறகு ஜாக்கிகளை முதுகில் சுமந்தபடி பந்தயப் பாதையை அடைகின்றன குதிரைகள்.

நடக்கும் குதிரை ஜெயிக்கும்!

குதிரைப் பந்தயம் வெளிப்படையான சூதாட்டம் என்று விமர்சிக்கப்பட்டாலும், ஏகபோக ஆதரவு காரணமாக விமர்சனங்களைக் கண்டுகொள்வார் இல்லை. ஒவ்வொரு பந்தயத்தையும் மிலிட்டரி கறாருடன் நடத்துகிறார்கள். பந்தய மைதானத்துக்குள் மொபைல் போனில் பேசக்கூட அனுமதி இல்லை. எந்த வகையிலும் முறைகேடு நடந்து விடக் கூடாது என்பதால், அவ்வளவு கட்டுப்பாடு!

நடக்கும் குதிரை ஜெயிக்கும்!

பந்தயக் குதிரைகளைப் பராமரிப்பது தனிக் கலை. ''மூணு வயசுல இருந்து 10 வயசுக்குள்ளதான் ஒரு குதிரையால் ரேஸில் கலந்துக்க முடியும். ஓட்ஸ், கேரட், கொள்ளுன்னு ஆரம்பிச்சு பாதாம், முந்திரி, பிஸ்தா வரைக்கும் ஸ்பெஷல் உணவுகளைக் குதிரைகளுக்கு அரைச்சுக் கொடுப்போம். குடிக்க சுத்தமானக் தண்ணீர் அல்லது குளுகோஸ் தண்ணீர்தான்.  தேவைப்பட்டால், ஊசி மூலம் குளுகோஸ் ஏத்தியும்விடுவோம். தினமும் சுத்தமா குளிக்கவெச்சு, முடி வெட்டி, பளபளன்னு குதிரையை வெச்சுப்போம்!'' என்கிறார் குதிரைப் பராமரிப்பாளர் மேகநாதன். பந்தயத்தின் போது குதிரைகளை பக்காவாகச் சோதனை செய்கிறார்கள். போதை மருந்து சோதனையாம்.

''ஒரு குதிரைக்கான பராமரிப்பு செலவு எவ்வளவு?'' என்று கேட்டால், ''பத்தாயிரத்தைத் தாண்டும்'' என்கிறார் பராமரிப்பாளர். அவரது சம்பளத்தைவிட இது அதிகமாம்!

- எஸ்.ஷக்தி, படங்கள்: தி.விஜய்

நடக்கும் குதிரை ஜெயிக்கும்!
அடுத்த கட்டுரைக்கு