Published:Updated:

என் ஊர்!

மானாமதி மன நிம்மதி!

##~##

''என் சொந்த ஊர் உத்திரமேரூர் பக்கம் இருக்கிற மானாமதி. அப்பா, விநா யகம் முதலியார், அம்மா, கண்ணம்மாள். மொத்தம் அஞ்சு பசங்க. நான் நாலாவது பிள்ளை. சொத்துபத்துகூட பிரிக்காம ஒண்ணா இருக்கிற கூட்டுக் குடும்பம். சமீ பத்தில்தான் காஞ்சிபுரத்துக்குக் குடிபெயர்ந் தேன்'' - சொந்த ஊர் பற்றி சொல்லத் தொடங்கும்போதே, முன்னாள் அமைச்சர் சோமசுந்தரத்தின் முகத்தில் பிரகாசம். இந்தத் தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர்.

என் ஊர்!

 ''மானாமதியில் வீட்டுப் பக்கத்தில் உள்ள அரசுப் பள்ளி நாட்கள்தான் எனக்கு விளையாட்டின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது. வீடு, வகுப்பறையைவிட ஸ்கூல் கிரவுண்டில்தான் அதிக நேரம் இருப்பேன். என் ஸ்போர்ட்ஸ் ஆர்வத்துக்குச் செயல்வடிவம் தந்தவர் பி.டி.மாஸ்டர் அந்தோணிசாமி. மாவட்ட அளவில் நடக்கும் எல்லா விளையாட்டுப் போட்டிகளிலும் எங்கள் அணி களம் இறங்கும். போட்டி களில் வாங்கிய சான்றிதழ்கள், மெடல்கள் இப்போதும் பள்ளி நண்பர்களையும் அந்தோணி மாஸ்டரையும் ஞாபகப் படுத்தும். பிறகு, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.எஸ்சி., அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் பி.எட்., முடித்தேன்.

என் ஆசிரியர் படிப்பு ஆர்வத்துக்கு மானாமதிதான் காரணம். மானாமதியில் வாத்தியார் இல்லாத வீடே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஆசிரியர் பணி மீது பிரியம். இதற்கு எங்கள் குடும்பத்தையே உதாரணம் சொல்லலாம். என் அண்ணன் ராஜேந்திரன், பச்சையப்பன் கல்லூரி முதல் வராக இருந்து ஓய்வு பெற்றவர். இன்னொரு சகோதரர் ரவீந் திரன், பக்கத்தில் உள்ள ஆக்கூரில் ஆசிரியராக உள்ளார்.

என் சிறுவயதில் மானாமதி மக்களுக்கு எக்கச்சக்க எம்.ஜி.ஆர் கிரேஸ். அந்த ரசனை என்னையும் ஒட்டிக்கிச்சு. எங்க ஊர் 'ராமலிங்கம் தியேட்டரில் எம்.ஜி.ஆர் படம் போட்டால், முதல் நாள் முதல் ஷோ பார்த்துடுவேன். வந்தவாசி, உத்திர மேரூர்னு சைக்கிளிலேயே எம்.ஜி.ஆர் படம் பார்க்கக் கிளம் பிடுவோம். 'உலகம் சுற்றும் வாலிபன்’ எந்தத் தியேட்டரில் போட்டாலும் இன்னமும் சலிக்காமல் போய்ப் பார்த்தபடி இருக்கிறேன். அப்பவும் இப்பவும் எப்பவும் நான் எம்.ஜி.ஆர் ரசிகன்.

1989-ல் பொதுச் செயலாளர் அம்மா ஒரு முறை காஞ்சி புரம் வந்தபோது, வழியில நான் ஏற்பாடு செய்து இருந்த வரவேற்பு நிகழ்ச்சியைப் பார்த்து உற்சாகப்படுத்தியதுதான் என் எனர்ஜி டானிக். எங்க அப்பாவுக்கு மானாமதியில், ரைஸ்மில், நிலம் உண்டு.  சின்ன வயசில் எங்க கழனியில் கால் பதிச்சு வேலை செய்தது இன்னும் நினைவில் இருக்கு. இப்பவும் நேரம் கிடைத்தால், கழனியைச் சுத்திப் பார்க்கக் கிளம்பிடுவேன். எங்கள் தோட்டத்தில் வேலை செய்பவர்களுடன் வரப்புகளில் அமர்ந்து சகஜமாகப் பேசுவது ரொம் பப் பிடிக்கும். அந்தத் தருணங்களில் என்னை அறியாமல் நினைவுகள் பின்னோக்கிச் செல்லும்.

என் ஊர்!

மானாமதியில் எங்க வீட்டில்தான் அதிகமா மாடு வளர்ப்போம். இருபத்தைந்து மாடுகளுக்கு குறைவு இல்லாமல் நெருக்கியடித்துக்கொண்டு நிற்கும் மாட்டுக் கொட்டகையும், என் அப்பா வின் குரலைக் கேட்டு தலையாட்டியபடி அவர் பின்னால் ஓடிவரும் மாடுகளும் நினைவுக்கு வருகின்றன. அதேபோல் நான் எப்போது வீட் டுக்கு வந்தாலும், ஊரில் இருக்கும் பூசாரியை அழைத்து வந்து அப்பா திருஷ்டி சுற்றிப் போட்டு அனுப்புவார். மேல் மலையனூர் அங் காள பரமேஸ்வரி அம்மன்தான் எங்கள் குல தெய்வம். மனக் கஷ்டம் என்றால், கிராமத்தில் உள்ள சோழியம்மன் மாரியம்மனை வணங்கி கோயிலில் சிறிது நேரம் அமர்ந்துவிட்டுச் சென் றால், மனம் லேசாகிவிடும். 'எந்த கஷ்டம் வந்தா லும் சோழியம்மனை வேண்டிக்கோ’னு எங்க அம்மா சொல்லுவாங்க.

பொங்கல், தைப் பூசம், மாசிமகம் என்று எந்த விசேஷமானாலும், மானாமதியில்தான். ஊரில் நடக்கும் எல்லா திருவிழாக்களிலும் தவறாமல் கலந்துகொள்வேன்.

என் ஊர்!

என் பள்ளிக்கால நண்பர்கள் அனைவரும் எங்கள் கிராமத்தை சுற்றித்தான் இருக்காங்க. அவங்களைச் சந்திப்பதற்காகவே திருவிழா, கல் யாணம், காதுகுத்துனு எந்த விசேஷத்தையும் மிஸ் பண்ணுவது இல்லை. மொத்தத்தில் மானாமதியே எனக்கு மன நிம்மதி!''

- பா.ஜெயவேல்

அடுத்த கட்டுரைக்கு