Published:Updated:

கோடைக் கொடை!

ஒரு நெகிழ்ச்சிப் பயணம்...

##~##

'கோடை விடுமுறை வந்துவிட்டாலே, இந்த வெக்கேஷனுக்கு எங்கே போகலாம்னு நம் குழந்தைகளிடம் அன்போடு கேட்போம். ஆனால் ஆதரவற்ற குழந்தைகளை இப்படிக் கேட்க யார் இருக்கிறார்கள்? நான் கன்னியாகுமரி ஆதரவற்ற மாணவ மாணவியர் 120 பேரை கொடைக்கானல் அழைத்துச் செல்கிறேன். நீங்கள் விரும்பினால், எங்களுடன் சேர்ந்துகொள்ளலாம்'' - இப்படி ஓர் அழைப்பு டி.வி நடிகர் வேணுஅர்விந்திடம் இருந்து.

'ஏ ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கி போட்டு சிலுசிலுக்கிற ரவிக்கை போட்டு’ பாட்டுக்கு இடுப்பொடிய ஆட்டம் போட்டார்கள் மாணவிகள். இரண்டு வாண்டுகள் சீட் மீது ஏறிக் குதிக்க, செம கோபம் வந்தது வார்டன் பத்மாவுக்கு. 'வந்தனமய்யா வந்த னம் வந்த சனமெல்லாம் குந்தணும்’ என்று டைமிங்காக டிரைவர் பாட்டை மாற்ற, கலகலப்பு மூடுக்கு மாறி பத்மாவும் குழந்தைகளோடு ஆடினர்.

கோடைக் கொடை!

பசங்க ஏரியாவில் இதைவிட ஒரு டிகிரி உற்சாகம் கூடுதல். 'எவன்டி உன்னைப் பெத்தான் பெத்தான் பெத்தான்... கையில கிடைச்சா, செத்தான் செத்தான் செத்தான்’ எனப் போட்டுத் தாக்கினார்கள். 'உட் கார்ந்து வந்த எனக்கே உடம்பு வலிக்குது. கன்னியா குமரியில ஆரம்பிச்சு, கொடைக்கானல் வரைக்கும் நிக்காம ஆடுறீங்களே எப்படி மக்கா?' என்று சலிப் போடு ஆசிரியர் கேட்க, மேற்கொண்டு அவரைப் பேசவிடாமல் 'ஓ’ போட்டார்கள் மாணவர்கள்.

கலகலப்பாகப் பேருந்து கொடைக்கானலை வந்தடைந்தது. காட்டேஜுக்குள் புகுந்த வேகத்தில் லக்கேஜ்களைப் போட்டுவிட்டு ஊர் சுற்றக் கிளம்பி னார்கள். பிரையண்ட் பூங்காவில் கைகோத்து நடந்த மழலைப் பூக்கள் ஆங்காங்கே கூட்டமாக உட்கார, அதுவே சிறு பூந்தோட்டம்போல் ஆகிவிட்டது. அவர்களுடன் வேணு அரவிந்தும் சேர்ந்துகொள்ள மறுபடியும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்தான்.

கோடைக் கொடை!

பாட்டுக்குப் பாட்டு, டான்ஸ், மிமிக்ரி, நக்கல், நையாண்டி, கேலி, கிண்டல் என சபை களை கட்டியது.பெஸ்ட் பெர்ஃபார்மர்களுக்கு கேரட்டுகளைப் பரிசளித்தார் வேணு. முதல் நாளில் பாதி நேரம் மழையால் காட்டேஜிலேயே  அலுத்துக் கொண்டே அடைபட்டுக் கிடந்தனர் சுட்டிகள்.

மறுநாள் காலையில் தூண் பாறை, குணா பாறை, பைன் ஃபாரஸ்ட் எல்லாம் சுற்றிவிட்டு, செட்டியார் பார்க்கில் உட்கார்ந்து விளையாட ஆரம்பித்தபோது, மறுபடியும் தொடங்கியது மழை. வேணுவும் தன் குழந்தைகள் வீணா, விஜய்யுடன் தாவரக் குடையின் கீழ் ஒதுங் கினார். 'என்ன சார் ஒரு வருஷமா உங்களை டி.வி-யில பார்க்க முடியலை?' என்று ஓர் ஆசி ரியை கேட்க, 'நடிகர் ஜெயராமை ஹீரோவாப் போட்டு 'சபாஷ் சரியான போட்டி’னு ஒரு படத்தை இயக்கிட்டு இருந்தேன். அதனாலதான் கொஞ்சம் பிஸி. அடுத்த மாசம் ரிலீஸ்' என்றார் வேணு.

'எங்கள் ஆசிரமத்தில் இலவசமாகக் கல்வியும், தரமான உணவும், சீருடைகளும் தருகிறோம். ஆனாலும்கூட அவர்களை இப்படி கொடைக் கானல் கூட்டி வந்து, காட்டேஜில் தங்கவைத்து சந்தோஷப்படுத்துவது எல்லாம் எங்களால் முடி யாத காரியம். அதை வேணு செய்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது' என்றார் கன்னியா குமரி குருகுல ஆசிரமத்தின் துணைத் தலைவர் வசந்தகுமாரி.

கோடைக் கொடை!

'ஆதரவற்ற குழந்தைகளின் விடுமுறை கோடையைக் காட்டிலும் கொடுமையாக இருக் குமே என்று எண்ணிய ஒருவர்தான் இந்த கொடைக்கானல் பிக்னிக்கின் மூலக் காரணம். அவர், யார் என்பது முக்கியம் அல்ல. இதைப் பார்த்து மற்றவர்களும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ முன் வர வேண்டும் என்பதே என் ஆசை' என்கிறார் வேணுஅர்விந்த்!

- கே.கே.மகேஷ், படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

அடுத்த கட்டுரைக்கு