Published:Updated:

ஆரணி என்றால் பட்டு!

##~##

ட்டுச் சேலை என்றாலே பெண்களுக்குப் பரவ சமும் ஆண்களுக்குப் பகீர் ஜுரமும் வருவது இயல்பு தான். ஆரணிப் பட்டு, தமிழகத்தின் அழகு அடை யாளங்களில் ஒன்று.

 எப்படித் தயார் ஆகின்றன இந்தப் பட்டுப்  புடவைகள்?  

''பட்டு என்றாலே, காஞ்சிப்  பட்டு என்கிறார்கள். ஆனால், ஆரணி பட்டு காஞ்சிப் பட்டுக்கு கொஞ்சமும் சளைத்தது இல்லை. ஆரணியில் மட்டும் ஐந்து லட்சம் பேர் இந்த பட்டு நெசவுத் தொழிலை நம்பி இருக்கிறார்கள். இங்கு உற்பத்தியாகும் பட்டுப் புடவைகளை வாங்கிச் சென்று காஞ்சி புரம் பட்டு என்று விற்கும் விற்பனையாளர்களும் உண்டு!'' என்கிறார்கள் ஆரணி ஸ்ரீ லக்ஷ்மி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர்கள் முருகனும் சிவராமனும்.

ஆரணி என்றால் பட்டு!

''பட்டுப் புடவைக்குத் தேவையான பட்டு நூல், பெங்களூரு மற்றும் சீனாவில் இருந்து வரவழைக்கப்படும். மல்பரி புழுவின் கூட்டில் இருந்து இந்தப் பட்டு நூல் தயாரிக்கப்படுகிறது. பெங்களூரு நூல் விலை கிலோவுக்கு

ஆரணி என்றால் பட்டு!

2,500, சீன நூல் கிலோவுக்கு    

ஆரணி என்றால் பட்டு!

2,800. ஒரு சேலைக்கு சுமார் ஒன்றரைக் கிலோ நூல் தேவைப்படும். கச்சா நூலை ட்விஸ்டிங் ஆலையில் கொடுத்துப் பாவு செய்து, அதன் மீது கலர் சாயம் ஏற்றுவோம். நீளம், அகலத்துக்கு ஏற்ப தனித் தனியாகப் பிரித்து நெசவுக்குக் கொடுத்தால், பட்டுச் சேலை ரெடி. கிட்டத்தட்ட ஒரு லட்சம் சேலை டிசைன்கள் உண்டு. டிசை னைப் பொறுத்து, ஒரு சேலைக்கு 60 கிராம் முதல் ஒன்றரைக் கிலோ வரை ஜரிகை தேவைப்படும். தங்கம், வெள்ளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஜரிகை விலையும் கூடுகிறது. இதனால், சேலையின் விலையும் அதிகரித்துவிடுகிறது.

ஆரணி என்றால் பட்டு!

ஒரு பட்டுப் புடவையைச் செய்து முடிக்க, 10 முதல் 15 நாட்கள் ஆகும். இங்கு பட்டுப் பாவாடை, பட்டுப் புடவை, பட்டு சுடிதார் மெட்டீரியல், பட்டு வேட்டி, பட்டு அங்கவஸ்திரம் என்று விதவிதமான பட்டு ஆடைகள் தயாரிக்கிறோம். இங்கு உற்பத்தியாகும் ஆடைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது!'' என்று பட்டுப் புராணம் பாடுகிறார்கள் இருவரும்!

- கோ.செந்தில்குமார், படங்கள்:பா.கந்தகுமார்

அடுத்த கட்டுரைக்கு