Published:Updated:

''நினைச்சது நடந்தா... நீயும் நானும் சிலை!''

''நினைச்சது நடந்தா... நீயும் நானும் சிலை!''

##~##

ன்னதானம், அலகு குத்துதல், அங்கப்பிரதட்சணம் எனக் களை கட்டிவிட்டது தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் கோயில் சித்திரைத் திருவிழா. கோயில்திருவிழாக்களின் உற்சாகம் தாண்டியும், ஒரு விசேஷம் அமைந்திருக்கிறது இந்தக் கோயிலில்!

 கோயில் எங்கும் நிறைந்திருக்கும் சிறுவர், சிறுமியர், கைக் குழந்தையுடன் பெற்றோர்கள், பெண் டாக்டர், வக்கீல், போலீஸ் என விதவிதமான சிலைகள்தான் இந்தச் சிறப்புக்குக் காரணம்!  

''நினைச்சது நடந்தா... நீயும் நானும் சிலை!''

''எங்க குடும்பம்தான் பரம்பரைப் பரம்பரையா இந்தக் கோயிலுக்குப் பூசாரிங்க. ராத்திரி 12 மணிக்கு என்னோட மூதாதையர்கள் இங்கு விளக்கு ஏற்றிவிட்டுச் செல்வது வழக்கம். 500 வருஷங்களுக்கு முன்னாடி ஒருநாள் எப் போதும்போல இரவு விளக்கு ஏற்றிவிட்டுச் செல்லும் போது ஒரு பெரியவர் வந்தாராம். 'இது காட்டுப் பகுதி, இங்க எல்லாம் தங்கக் கூடாது’ன்னு சொன்னாலும், கேட்காம ஆலமரத்தடியிலேயே உட்கார்ந்து இருக்கார். மறுநாள் மதியம் பூசாரி போய்ப் பார்த்தா, பெரியவர் உடம்பு எல்லாம் பாம்பு. தன்னோட பேரு 'அழகு முத்து’ன்னு சொன்னவரு, மக்களோடகுறைகளைக் கேட்டுருக்காரு. ஒருத்தரு 'எனக்குக் கல்யாணம் ஆகிப் பல வருஷம் ஆச்சு. இன்னும் குழந்தை பிறக்கலை’னு சொல்லியிருக்காரு. 'சரி, உனக்குக் குழந்தை பிறக்கும், பிறந்த உடனே அந்தக் குழந்தைக்குச் சிலை செஞ்சு இங்கே வெச்சிடு’ன்னு சொன்னாராம். அப்போ ஆரம் பிச்சதுங்க இந்தப் பழக்கம்!'' என்கிறார் பூசாரி குமார்.

குழந்தை இல்லாத தம்பதியர்கள், திருமணம்  ஆகாதவர்கள், தொழிலில் நஷ்டம் அடைந்தவர் கள், வேலை கிடைக்காதவர்கள், போலீஸ் வேலைக்காக முயற்சிப்பவர்கள், கை-கால்கள் செயல் இழந்தவர்கள் என ஆரம்பித்து, காதல் கை கூட வேண்டும் என்று வரும் பக்தர்கள் உட்பட அனைவரும் தங்கள் குறைகளைச் சொல்லி வேண்டிக்கொண்டு பிரார்த்தனை நிறைவேறிய வுடன் செய்துவைத்து இருக்கும் சிலைகள் கோயில் வளாகத்தைத் தாண்டியும் நீள்கின்றன.

''நினைச்சது நடந்தா... நீயும் நானும் சிலை!''

புதுவை கலிதீர்த்தாள்குப்பத்தைச் சேர்ந்த கார்த்திகா தேவி என்ற மாணவியின் பெற்றோர், தங்கள் மகளுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் என வேண்டிக்கொள்ள, அப்படியே மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்ததும் அவர் வைத்தது கையில் ஸ்டெதஸ்கோப் வைத்து இருக்கும் பெண் சிலை. அதைவிட ஆச்சர்யம், ஒருவர், தான் வேண்டியபடியே பில்டிங் கான்ட்ராக்ட் கிடைத்ததால், அடுக்கு மாடிக் குடியிருப்பையே சிலை யாகச் செய்துவைத்து இருக்கிறார்.

''நினைச்சது நடந்தா... நீயும் நானும் சிலை!''

''அஞ்சலாட்சி என்பவர் கால் மூட்டு வலியால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டுவந்தார். டாக்டர்கள் 'எலும்பு தேய்ந்துவிட்டது, குணப்படுத்த முடியாது’ என்று கை விட்டுவிட்டார்கள். ஆனால், அஞ்சலாட்சி குணமாகித் தன் கால்களையே சிலைகளாகச் செய்துவைத்து இருக் கிறார் பாருங்கள்!'' என்று ஆச்சர்யப்படுத்துகிறார் இந்தக் கோயிலுக்கு 45 வருடங்களுக்கும் மேலாக சிலை களைச் செய்து தரும் ஸ்தபதி அழகுமுத்து.

''என் பெயர் நாகராஜ். இது, என் மனைவி செல்வி. எங்களுக்குக் கல்யாணம் ஆகி ஒன்பது வருஷங்கள் ஆச்சு. முதல் இரண்டு குழந்தைகளுமே பெண் குழந்தை களாகப் பிறந்ததால், ஆண் குழந்தை வேண்டும்னு வேண்டிக்கிட்டோம். இதோ ஆகாஷ் பிறந்தான். அவனுக்குச் சிலையும் வெச்சிட்டோம்!'' என் கின்றனர் தம்பதிகள்.

ஒரு சிலை மட்டும் பரிச்சயமான சிலையாக இருக்க, உற்றுப்பார்த்தால் அட, நெட்டப்பாக்கம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் முத்துக்குமார சாமியின் சிலை. தேர்தலில் சீட் கிடைத்த வேண்டுதலுக்கான காணிக்கையாம்!

- ஜெ.முருகன்  

''நினைச்சது நடந்தா... நீயும் நானும் சிலை!''
அடுத்த கட்டுரைக்கு