Published:Updated:

இப்படித்தான் ஆரம்பிச்சாய்ங்களா?

இப்படித்தான் ஆரம்பிச்சாய்ங்களா?

இப்படித்தான் ஆரம்பிச்சாய்ங்களா?

இப்படித்தான் ஆரம்பிச்சாய்ங்களா?

Published:Updated:
இப்படித்தான் ஆரம்பிச்சாய்ங்களா?
##~##
து

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ள்ளும் இளமை; துடிப்பு, ஆட்டம், பாட்டு, சிரிப்பு, மகிழ்ச்சி...

 இத்தனைக்கும் சேர்ந்து ஒரு பெயர் உண்டு. அதுதான் 'டிஸ்கொதெ’. புரியவில்லையா?

அதைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், நீங்கள் ஒரு விசேஷமான கண்ணாடியை மாட்டிக் கொள்ள வேண்டும். அந்தக் 'கண்ணாடி’யின் பெயர் 'டீன்-ஏஜ் உள்ளம்’!

நேராக சென்னையில் உள்ள ஓட்டல் ஓசியானிக்குப் புறப்படுங்கள். சனிக் கிழமையா, ஞாயிற்றுக் கிழமையா என்று பார்த்துப் புறப்படுங்கள். இந்த இரண்டு நாட்களில் மட்டும்தான் அந்த உற்சாக உலகம் திறந்திருக்கும்.

ஓசியானிக் ஓட்டல் வரவேற்பறைக்குள் நுழைந்த தும் 'எங்கே டிஸ்கொதெ?’ என்று கேட்கவேண்டியதே இல்லை.

பரவசமூட்டும் மேல் நாட்டு இசை. பீட்டில்ஸ் சங்கீதமோ அல்லது உஷா அய்யரின் உணர்வைச் சிலிர்க்கவைக்கும் இசையோ ஏதோ ஒன்று, அதற்கேற்ப புல்லரிப்பூட்டும் பக்க வாத்தியங்கள், உற்சாகமான சிரிப்பு.

இப்படித்தான் ஆரம்பிச்சாய்ங்களா?

இத்தனையும் மாடியில் இருக்கும் ஓர் அறையின் மூடி இருக்கும் நான்கு சுவர்களையும் கடந்து வந்து 'இதோ, நான் இங்கே தான் இருக்கிறேன்’ என்று உங்களை அழைக்கும். அதுதான் 'டிஸ்கொதெ.’

''ஒரு வருடத்துக்கு முன்பாக - 1970, ஜனவரியில் கல்லூரி மாணவர்களின் பொழுதுபோக்குக்குரிய இடமாக இதை ஆரம்பித்தோம். இதைப்போல், பம்பாயிலும், கல்கத்தாவிலும் இருக்கின்றன. சென்னையில் இது ஒன்றுதான். சனி, ஞாயிறு, விடுமுறை நாட்களில் மாணவ-மாணவியர் இங்கு வந்து கூடி உற்சாகமாகப் பொழுதுபோக்கலாம். இஷ்டம்போல், அவர்களுக்குப் பிடித்த மேல் நாட்டு இசை கேட்கலாம். நடனம் ஆடலாம், சிநேகிதர்களுடன் சிநேகிதிகளுடனும் கூடத்தான்!

ஒரே ஒரு கட்டுப்பாடுதான் அவர்களுக்கு. அதுதான் ஒழுக்கக் கட்டுப்பாடு. முறை தவறி நடக்கக் கூடாது. மற்றபடி, ஆண்களும் பெண்களும் உற்சாகமாக ஆடிப் பாடி விளையாடி, உல்லாசமாகப் பொழுதைப் போக்குவதில் எங்களுக்கு ஆட்சேபம் இல்லை'' என்கிறார் இதை ஆரம்பித்த சங்கர் என்ற இளைஞர்.

சங்கரிடமே பேசிக்கொண்டு இருந்தால் எப்படி? டிஸ்கொதெ ஹாலுக்குள் நுழைய வழி பாருங்கள். 'வழி பாருங்கள்’ என்றால், மணிபர்ஸைத் திறவுங்கள் என்று அர்த்தம்.

நுழைவுக் கட்டணம் ஜோடி ஒன்றுக்கு ரூபாய் மூன்று, ஜோடி என்றதும் 'கெக்கேபிக்கே’ என்று உங்கள் நண்பரை (ஆண்) துணைக்குச் சேர்த்துக்கொண்டு போய் நிற்காதீர்கள். இன்னொரு மூன்று ரூபாய் தீட்டிவிடுவார்கள். ஜோடியாக ஒரு பெண்ணை அழைத்துச் சென்றால்தான், இருவருக்கும் சேர்ந்து மூன்றே ரூபாய் என்ற சலுகை! (ஒரு பெண்ணால் செலவு ஏற்படாத ஒரே இடம் இதுதான்!)

பெண்கள் தனியாகப் போனாலும் கட்டணம் கிடையாது. அந்த அறைக்குள் நுழைகிறீர்கள். நெஞ்சில் உற்சாகக் கிளர்ச்சியூட்டும் இசை, காதைத் துளைக்கிறது.

நீங்கள் கண்ணைக் கசக்கிக்கொண்டு நிற்பீர்கள். காரணம், அறையில் இருக்கும் மங்கலான வெளிச்சம்.

ஜாக்கிரதை! கவனமாகப் பார்த்து நகருங்கள், இல்லாவிட்டால், தன்னை மறந்து டிவிஸ்ட் நடனம் ஆடிக்கொண்டு இருக்கும் இளைஞர் மீதோ, இளம் பெண் மீதோ மோதிக்கொள்வீர்கள்.

நீண்ட ஹாலின் சுவர்களின் ஓரமாகச் சிறு சிறு திண்டுகள் போட்டு வைத்திருக்கிறார்கள். ஹாயாகப் போய், அதில் சாய்ந்துகொள்ளுங்கள்.

தப்பித் தவறி, அக்கம் பக்கம் பார்க்காதீர்கள். அங்கே, 'தலை வலிக்கிறது, நான் வரலை!’ என்று உங்களிடம் சாக்குப்போக்குச் சொல்லியிருந்த உங்கள் நண்பர், தன் சிநேகிதியுடன் உட்கார்ந்திருக் கலாம். எதற்கு வம்பு, எதிரே ஹாலைப் பாருங்கள், பார்த்து விட்டால் பார்வையை அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திருப்பத் தோன்றாது.

என்ன உற்சாகம்! என்ன ஆட்டம்! பின்னணியில் இசை முழங்க, இளம் ஜோடிகள் டிவிஸ்ட்... ராக் அண்ட் ரோல்... அடேயப்பா, எத்தனை வித ஆட்டங்கள்!

எத்தனை ரக ஜோடிகள்!

இந்த ஜோடிகளுக்கு மத்தியில், ஜோடி இல்லாமல் தனியாக வந்து ஏகாங்கியாக 'ஸோலோ’ ஆடுகிறார்கள் சில 'அப்பாவி’கள்!

''இப்படி ஒரு சூழ்நிலையும் நெருக்கமும் இளம் உள்ளங்களைத் தவறான வேகத்துக்கு உட்படுத்தாதா?'' - சங்கரைக் கேட்கிறோம்.

''தவறு எங்கேயும் நடக்கும். சினிமா தியேட்டரில் நடக்காதா? எல்லாம் சம்பந்தப்பட்டவர்களின் மனத்தைப் பொறுத்தது... எப்படி இருந்தாலும், தவறான நடவடிக்கை எதுவும் நடைபெறாமல், நாங்கள் மிகவும் எச்சரிக்கை யாகக் கண்காணித்து வருகிறோம். இதுவரை எந்தத் தவறும் நடந்தது இல்லை!

''கட்டுப்பாடற்ற ஓய்வு, உற்சாக மூட்டும் பொழுதுபோக்கு... இதை எல்லாரும் அனுபவிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம், இளைஞர்கள் பெரு வாரியாகக் கலந்துகொண்டாலும் வயதானவர்கள் கலந்துகொள்வதற்கும் அனுமதி உண்டு'' என்று விளக்குகிறார்.

''நீங்கள் சொல்வது சரி; ஆனால், தங்கள் குழந்தைகள் இப்படி வந்து பொழுது போக்குவதை, பெற்றோர்கள் அனுமதிப்பார்களா?'' என்று கேட்கிறோம்.

''அவர்கள் ஏன் ஆட்சேபிக்க வேண்டும்? வேண்டுமானால், அவர்களே இங்கு வந்து பார்க்கட்டும், பார்த்தால் நிச்சயமாக ஆட்சேபிக்க மாட்டார்கள்!'' என்கிறார் சங்கர், அழுத்தமாக.

''ஏன் இப்படி-அறையை மங்க லான வெளிச்சமாக்கி வைத்துஇருக்கிறீர்கள்?''

''சூழ்நிலையை உருவாக்க (To Create an atmosphere)' என்கிறார் சங்கர்.

சாச்சாச்சா... உய்ங் சாச்சாச்சா...

இசை உச்ச ஸ்தாயியில் முழங்குகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism