Published:Updated:

மூத்த குடிமக்கள் பஸ்ஸில் பயணம் செய்ய இலவச டோக்கன்! *கண்டிஷன்ஸ் அப்ளை

மூத்த குடிமக்கள் பஸ்ஸில் பயணம் செய்ய இலவச டோக்கன்! *கண்டிஷன்ஸ் அப்ளை
மூத்த குடிமக்கள் பஸ்ஸில் பயணம் செய்ய இலவச டோக்கன்! *கண்டிஷன்ஸ் அப்ளை

சென்னை: மூத்த குடிமக்களுக்கு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

மூத்த குடிமக்கள் பஸ்ஸில் பயணம் செய்ய இலவச டோக்கன்! *கண்டிஷன்ஸ் அப்ளை

தமிழக சட்டப்பேரவையில் இன்று, விதி எண் 110தின்  கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த முதலமைச்சர் ஜெயலலிதா,  சென்னை பேருந்துகளில் முதியவர்கள் இலவசமாக பயணம் செய்ய பத்து டோக்கன்கள் வழங்கப்படும் என கூறினார்.

இந்த திட்டத்தின்படி, முதற்கட்டமாக சென்னை பேருந்துகளில் மூத்த குடிமக்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த திட்டத்தில், ஒரு மாதத்திற்கு 10 முறை பயணிக்கும் வகையில் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பேருந்து டெப்போக்களில் பெற்றுக் கொண்டு பூர்த்தி செய்து அளிக்கலாம். மாநகர போக்குவரத்து இணையதளத்திலும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அளிக்கலாம்.

60 வயதுக்கு மேற்பட்டோர் எந்த நாளிலும் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ள இந்த திட்டத்திற்கு கிடைக்கும், வரவேற்பை கண்டறிந்து,  மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு